கமாடிட்டி! முன்பு எப்போதாவது விலை மாற்றம் காணும் தங்கம் இப்போது நாள் ஒன்றுக்கு இரண்டு முறை விலை மாற்றம் காணத் தொடங்கிவிட்டது. இந்த வாரம் சர்வதேச சந்தையில் கிட்டத்தட்ட நூறு டாலர் வரை விலை இறக்கம் கண்ட தங்கம், அடுத்த வாரம் எப்படி இருக்கும் என மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம். ''ஐரோப்பிய கடன் பிரச்னை காரணமாக உலகச் சந்தைகள் குறைந்ததை தொடர்ந்து தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. எனினும், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் இந்த நூறு டாலர் விலை இறக்கம் இந்திய சந்தையில் எதிரொலிக்காமலே இருக்கிறது. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்ற எண்ணம் சர்வதேச முதலீட்டாளர் களிடம் இருந்தது. இந்த எண்ணம் தற்போது மிகவும் குறைந்துள்ளது. காரணம், ஐரோப்பிய கடன் பிரச்னையின் காரணமாக டாலரின் மீது அனைவரும் கவனம் செலுத்தி, முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.. . .
COMMENT(S): 1
pl. add $ movements also