கமாடிட்டி! தங்கம்! இந்த வார தொடக்கத்தில் விலை அதிகரித்து வர்த்தகமான தங்கத்தின் விலை வார இறுதியில் குறைந்தது. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் கடன் பிரச்னையை சரி செய்ய ஐரோப்பிய மத்திய வங்கி சரியான நடவடிக்கை எடுக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த வாரத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் நடத்திய கூட்டத்தில் எந்தவித முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை. ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளின் கடன் சுமையைக் குறைக்க அந்த அரசாங்கம் பாண்டுகளை வெளியிடுவது என முடிவு செய்துள்ளது முதலீட்டாளர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது. அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியும் வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லையென தெரிவித்தது. இதன் காரணமாக யூரோவின் மதிப்பு குறைந்தது. வரும் வார இறுதியில் அமெரிக்காவில் வேலையில்லா நபர்களின் புள்ளிவிவரம் வெளியாக உள்ளது. ஜூலை மாதத்தில் வேலையில்லா நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரோவின் மதிப்பு குறைந்ததால் டாலரில் முதலீடு செய்வது அதிகரித்ததைத் தொடர்ந்து தங்கத்தின். . .
COMMENT(S):