அக்ரி கமாடிட்டி இயற்கை ரப்பர், கோதுமை, மக்காச்சோளம் போன்ற அக்ரி கமாடிட்டிப் பற்றி விளக்கமாகச் சொல்கிறார் ஜே.ஆர்.ஜி. வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மேலாளர் (கமாடிட்டி ரிசர்ச்) முருகேஷ் குமார். ''ரப்பர் ஒரு வர்த்தக பயிராகும். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியாவிற்கு அடுத்து ரப்பர் தயாரிப்பில் நான்காவது பெரிய நாடாக திகழ்கிறது இந்தியா. ஆண்டுக்கு ஒன்பது லட்சம் டன் ரப்பர் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், உள்நாட்டில் அதிக தேவை இருப்பதால் அதிகளவில் இறக்குமதியும் செய்கிறோம். உள்நாட்டு தேவைக்கு ஆண்டுக்கு பத்து லட்சம் டன் ரப்பர் தேவைப்படுகிறது. 2011-2012-ம் ஆண்டுகளில் இந்தியா 8.99 லட்சம் டன் ரப்பரை உற்பத்தி செய்துள்ளது. இதுவே இந்தாண்டில் 9.42 லட்சம் டன்னாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ரப்பர் அதிகளவில் உற்பத்தியாகும் இடம் கேரளா. இங்கு 7.36 லட்சம் ஹெக்டேருக்கு 2011-2012-ம் ஆண்டில் ரப்பர் பயிரிடப்பட்டிருந்தது. இந்தாண்டு 10.6 லட்சம் டன் உள்நாட்டில் மட்டுமே தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் பார்க்கும்போது. . .
மனிதாபிமானம் மற்றும் அறிவுள்ள எவனும் இப்படிப்பட்ட கமாடிட்டி சந்தையில் ஈடுபட மாட்டான். உணவுப்பொருட்களின் விலையேற்றத்திற்கு இதுவே காரணம். எனக்கு தேவையே இல்லாத போது பணம் இருக்கிறது என்ற திமிரில் கமாடிட்டியில் மிளகை வாங்குகிறேன் எனில் அது பதுக்கல் இல்லாமல் வேறென்ன. நமது நாட்டின் சாபம் இவையெல்லாம்.இதனால் பாதிக்கப்படப்போவது சாதாரண மக்கள்தான்.
COMMENT(S): 2