அன்பு வாசகர்களேபசி அறிவாரா ப.சி? மூன்றாவது முறையாக மத்திய நிதி அமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார் ப.சிதம்பரம். இன்றைய உலக பொருளாதார சூழலில், இவரைவிட்டால் இந்தப் பதவிக்கு வேறு ஒரு பொருத்தமான அரசியல்வாதி கிடையாது என்ற அளவுக்கு வல்லுநர்கள் பலர் ஒப்புக்கொள்கிறார்கள். '2ஜி' சர்ச்சைக்குள் பெயர் அடிபடும் நிலையில் இவருக்கு இந்தப் பதவியைத் தந்தது சரியல்ல என வாதாடுபவர்களும் இருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் இவர் நிதி அமைச்சராக இருந்தபோது நம் நாடு வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டது. அதேசமயம், உலகப் பொருளாதாரமும் அந்த நேரத்தில் ஏறுமுகத்தில் இருந்ததைக் கவனிக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு, மொத்தமாக நைந்து போயிருக்கும் பொருளாதாரத்தை சீர்திருத்த அவர் என்ன மந்திரம் செய்யப் போகிறார்? இறங்க மறுத்து மேல் நோக்கியே பறக்கும் விலைவாசி, ஏற மறுத்து கீழ் நோக்கியே விழும் ஜி.டி.பி., பலவீனப்பட்டு நிற்கும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி... இந்த இந்தியப் பிணிகளுக்கு ப.சிதம்பரம் என்ன மருந்து கொடுக்கப். . .
COMMENT(S): 3
P.C.is the good choice. He will do his best as usual.
வேட்டி கட்டிய தமிழர்...மூளையுள்ள புத்திசாலி!ஆனால்,இதயம் மட்டுமே வேண்டும்;நேர்மை மட்டுமே வேண்டும்.குருவித்தலையில் பனங்காய் என்பது பசிக்கு பொருந்தாது...
ப.சி. சமாளிப்பார் கவலை எதற்கு?