கிரீஸ்..? கிரீஸ் தேர்தல் முடிந்துவிட்டது. ஐரோப்பிய யூனியனிலே தொடர வேண்டும் என்று சொன்ன ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இப்போதிருக்கும் பிரச்னைகளைவிட ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினால் இன்னும் அதிக பிரச்னைகளை சந்திக்க வேண்டும் என்பதினால்தான் கிரீஸ் மக்கள் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். ஆனால், இரண்டு வாரத்துக்கு முன்பு பொருளாதார நிபுணரான அரவிந்த் சுப்ரமணியம், அமெரிக்காவின் ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியிருந்த கட்டுரையில், 'கிரீஸ் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும்பட்சத்தில் நிலைமை இன்னும் கொஞ்சம் மேம்படும்’ என்று சொல்லி இருந்தார். 'கிரீஸ் நாட்டின் கொள்கை முடிவுகளை தனியாக எடுப்ப தினால் நடுத்தர காலத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத் தும்’ என்றும் அவர் சொல்லி இருந்தார். ஆனால், கிரேக்கர்கள் தன்னம்பிக்கையை இழந்து தாங்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக நினைக்கும்போது எப்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடியும் என்பது மிகப் பெரிய கேள்வி. என் கணிப்புப்படி, ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும்,. . .
COMMENT(S):