ஆர்.பி.ஐ.: வட்டியைக் குறைக்காதது ஏன்? ரிசர்வ் வங்கி, கடனுக்கான வட்டியைக் குறைக்கும் அல்லது குறைந்தபட்சம் ரொக்க இருப்பு விகிதத்தையாவது (சி.ஆர்.ஆர்.) குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால், எல்லோரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கிவிட்டது ஆர்.பி.ஐ. ஆர்.பி.ஐ கவர்னர் சுப்பாராவின் இந்த துணிச்சலான நடவடிக்கையை பலரும் பாராட்டி இருக்கிறார்கள். காரணம், மத்திய அரசு பணவீக்க விகிதம் உயர்வ தற்கான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த இருபது மாதங்களில் 12 முறைக்கு மேல் வட்டி விகிதத்தை உயர்த்திய போதும் பணவீக்கம் குறையவில்லை. இதை கணக்கில் எடுத்துக் கொண்ட சுப்பாராவ் இம்முறை வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராமல் விட்டுவிட்டார். ஆர்.பி.ஐ. வட்டி விகிதத்தைக் குறைக்காததற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றில் முக்கியமானவை என பொருளாதார நிபுணர்கள் சொல்வது இனி..! நாட்டில் தொழில் உற்பத்தி உயராத நிலையில் (மார்ச் காலாண்டில் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி. வளர்ச்சி 5.3% ஆக. . .
COMMENT(S): 1
Articles are very informative.