இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! உலகமயமாக்கத்தினால் நாடுகளுக்கிடையே தொழில் மற்றும் பண்டப் பரிமாற்றங்கள் மட்டுமல்ல, மக்களை பரிமாறிக்கொள்வதும் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்களின் வருகையினாலும், நிறுவனங்களுக்கிடையே அதிகமாகிவரும் கூட்டு ஒப்பந்தங்களினாலும் பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தவிர, இணையம் சார்ந்த அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் மற்ற நாடுகளில் உள்ளவர்களோடு தொடர்புகொண்டு அவர்களோடு இணைந்து பணியாற்றுவதும் எளிதாகி உள்ளது. இத்தகைய மாற்று கலாசார மற்றும் கலாசார பண்மைச் சூழலில் திறமையாகப் பணியாற்ற அச்சூழல் சார்ந்த புரிதலையும், திறன்களையும் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். பல மாநில கலாசாரங்களை சார்ந்தவர்களோடு பணியாற்று வதால் இந்தியர்களாகிய நாம் இந்த திறன்களை வளர்த்துக் கொள்வது எளிது. அதேசமயம் நமக்கும் மேலைநாடுகளுக்கும் உள்ள கலாசார இடைவெளியைக் கணக்கிடும்போது, இந்திய மாநிலங்களுக்கு இடையே உள்ள கலாசார வேற்றுமைகள் மிகக் குறைவே. ஒரு மனிதனின் எண்ணம், செயல், பார்வை, மதிப்பீடுகள் என எல்லா பரிணாமங்களிலும் சக்தி வாய்ந்த தாக்கத்தை. . .
COMMENT(S):