நேற்று... இன்று... நாளை! சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த பாலமுருகனின் (வயது 35) மாதச் சம்பளம் 70,000 ரூபாய். இதில், குடும்பச் செலவு, கல்விச் செலவு மற்றும் இன்ஷூரன்ஸுக்காக 16,200 ரூபாய் செலவு செய்கிறார். 37,500 ரூபாயை வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ. கட்டி வருகிறார் (இன்னும் 20 ஆண்டுகள் கட்ட வேண்டும்!). ஐந்து மியூச்சுவல் ஃபண்டுகளில் தலா ஆயிரம் ரூபாயும் முதலீடு செய்து வருகிறார். ''இதெல்லாம் போக எதிர்கால சேமிப்புக்காக கையில் மீதமிருப்பது 11,300 ரூபாய்தான்'' என்றவர் தன் எதிர்காலத் தேவைகளைப் பட்டியலிட்டார். ''என் மகன் நவீன்குமாரை கல்லூரியில் சேர்த்து பட்டதாரியாக்க 9 வருஷம் கழிச்சு 12 லட்சம் ரூபாய் தேவை. அவனுக்கு 24 வயசுல கல்யாணம் செய்து வைக்க 25 லட்சம் ரூபாய் தேவை. மகளுக்கும் சிறப்பானதொரு கல்வியைக் கொடுக்க, பதினான்கு வருஷம் கழிச்சு 18 லட்சம் ரூபாயும், 24 வயசுல கல்யாணம் செய்துவைக்க 30 லட்சம் ரூபாயும் தேவை. இதனோட, என் ஓய்வுக். . .
நாணயம் விகடனுக்கு ஒரு வேண்டுகோள். இன்னும் ஒரு வருடம் கழித்து, இந்த பகுதியில் யார் யாரெல்லாம் "குடும்ப நிதி ஆலோசனை" பெற்றார்களோ, அவர்களெல்லாம் அதை கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததையும் விசாரித்து எழுதினால் எங்களுக்கு கொஞ்சம் சந்தோசமாக இருக்கும்.
செய்வீர்கள் என நம்புகிறோம்.
COMMENT(S): 1