சூப்பர் இன்வெஸ்டார் ''பங்குச் சந்தையைப் பொறுத்த வரையில் அனுபவம் மிக முக்கியம். ஆரம்பத்துல போதிய அனுபவம் இல்லாம லட்சக் கணக்கான ரூபாய் நஷ்டம் அடைந்தேன். அப்புறம் அதிக விலை உள்ள பங்குகளை வாங்கி அதிகம் நஷ்டப்படறதுக்குப் பதிலாக, குறைந்த விலை பங்குகளை வாங்க ஆரம்பிச்சேன். உதாரணத்துக்கு, 50 ரூபாய்க்குள் நல்ல ஃபண்டமென்டல் உள்ள, அதிக டிவிடெண்ட் கொடுக்கும் பங்குகளை வாங்கி சந்தையைப் பழகினேன். பங்கின் விலை உயரவில்லை என்றாலும் டிவிடெண்ட் மூலம் இழப்பைத் தவிர்த்திருக்கிறேன். இதுபோல பொறுமையாக 2-3 வருடங்கள் பழகினேன். போதிய அனுபவம் பெற்ற பிறகு இப்ப நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு பங்கில் சராசரியா 20-30% லாபம் பார்த்து வருகிறேன். ஒரு நல்ல நிறுவனப் பங்கின் விலை காரண காரியத்தோடு குறைந்தால் வாங்கத் தவறக்கூடாது. உதாரணத்துக்கு, நான் ஆர்க்கிட் கெமிக்கல்ஸ் நிறுவனப் பங்கை 150 ரூபாய்க்கு வாங்கி, 300 ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்தேன். இதே பங்கு. . .
COMMENT(S):