பிஸினஸ் சமூகம் - நாடார்கள்! பிஸினஸ் என்பது நாடார் சமூகத்தினரின் ரத்தத்தில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. அப்படிப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து உருவாகி வந்தவர்தான் விருதுநகர் வன்னிய பெருமாள். இன்றைக்கு நம் வீடுகளில் நல்லெண்ணெய்யின் மணம் கமழ்வதற்குக் காரணமாக இருக்கும் இவரை பற்றி இனி பார்ப்போம். அது வருடம் 1885. விருது நகரில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கை வைத்தவர் வன்னிய நாடார். இவர் பெரும் பணக்காரர் இல்லை என்றாலும், அவர் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். இவருக்கு நான்கு மகன்கள். முதலாமவர், சண்முகம்; இரண்டா மவர், வன்னிய பெருமாள்; மூன்றாமவர், ராமசாமி; நான்கா மவர், தனுஷ்கோடி. இதில் கடைசி இரண்டு சகோதரர்கள் பிஸினஸைவிட அரசியலை அதிகம் நேசித்தவர்கள். ராமசாமி நாடார் தி.மு.க.வின் சார்பில் ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்ததோடு, விருதுநகர் முனிசிபாலிட்டியின் தலைவராக பதினோரு ஆண்டு காலம் பதவி வகித்தவர். தனுஷ்கோடி நாடார் தூத்துக்குடி முனிசிபாலிட்டியின் தலைவராக 1954-56-ல் பதவி வகித்தார். . . .
COMMENT(S):