திருமதி எஃப்.எம். பார்ப்பதற்கு கல்லூரி மாணவி போலிருந்தாலும், குடும்ப நிதி நிர்வாக விவரங்களை ஆழமும் அகலமுமாக அலசும்போது இன்றைய இளம் இல்லத்தரசிகளின் துடிப்பான எடுத்துக்காட்டாக மிளிர்கிறார் மதுமதி. 'என் கணவர் ரஞ்சித் பிரபு, நாடு முழுக்க பெருநகரங்களில் நுழைவுத் தேர்வு மற்றும் மேற்கல்வி ஆலோசனைகளுக்காகச் செயல் படும் டி.ஐ.எம்.இ. (ஜி.மி.வி.ணி) கல்வி நிறுவனத்தின் தஞ்சை கிளை இயக்குநராக இருக்கிறார். நானும் எம்.பி.ஏ. பட்டதாரி என்பதால் ஆபீஸ் நிர்வாகம் முதற்கொண்டு பாடம் எடுப்பது வரை அலுவலகத்திலும் என் பங்கு உண்டு. வீடு தவிர அலுவலக நிர்வாகத்திலும் வேலைகளை இழுத்துப் போட்டு கொள்வதால் பரஸ்பரம் வீடு, அலுவலகம் இடையே சுவாரஸ்யமான சில திட்டங்களை மடை மாற்றி ஜெயிச்சிட்டு வர்றோம். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்ப என் அப்பா மாரடைப்பு வந்து இறந்துட்டாரு. அப்பாவோட பி.எஃப். சேமிப்பில்தான் நானும் என் அண்ணனும் படிப்பைத் தொடர்ந்தோம். பணம் இருக்கும்போது தரும் பாடங்களைவிட, இல்லாத போது தரும் படிப்பினைகள் மொத்த. . .
COMMENT(S): 3
வெரி குட் நல்ல குடும்பம். வழ்த்துகள்.
you are a boon of your family. Take care of yourself also.
பட்னி கிடக்காம சாப்டுங்க.