மை டியர் மணி! ''வெளிநாட்டில் வேலை பார்த்த என் அப்பா அனுப்பும் பணத்தைக் கணக்குவழக்குப் பார்க்காமல் செலவு செய்வேன். நான் சரியாக படிக்கவில்லை. என்னையும் அவரோடு அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்ட அப்பாவுக்கு நான் பிடி கொடுக்கவில்லை. சென்னை வந்து உதவி இயக்குநராக அலைந்த காலத்தில்கூட அப்பாவிடமிருந்து பணம் வந்துவிடும். அவர் லண்டனில் வேலை பார்த்ததால் சில சமயம் பணத்தை பவுண்டாகவே அனுப்பி வைத்துவிடுவார். அந்த மாதமே அதை செலவழித்து விடுவேன். அந்த அளவுக்கு உதவி இயக்குநர்களில் வசதியானவனாக நான் இருந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் இனி என்னால் தனியாக நிற்க முடியும் என்று நம்பிக்கை வந்தபோது, அப்பாவிடம் பணம் அனுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால், முதல் பட வாய்ப்பு தள்ளிப் போகவே, இரண்டு வருடங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருந்தது. திரும்ப அப்பாவிடம் பணம் கேட்க தயக்கம். ஆனால், அந்த நேரத்தில் நண்பர்களின் உதவி கிடைத்தது. . .
COMMENT(S): 2
பணம் பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது...பணத்தின் மீது எனக்கு பிரமிப்பும் இல்லை, பயமும் இல்லை.... கொலப்புரானெ..??!!!
அப்படி போடு....