வேல்யூ இன்வெஸ்டிங்! ''சார், இந்த கம்பெனி எப்படி? இந்த ஷேரை வாங்கலாமா?'' ''இது ரொம்ப நல்ல கம்பெனி சார். பல வருஷமா இருக்குது. நான்கூட பங்கு வாங்கி வச்சுருக்கேன். அடுத்த வருஷமே டபுளாயிடும்''. ''சார், அப்ப நானும் கொஞ்சம் வாங்கிப் போடட்டா?'' ''கையில இருக்குற பணம் அத்தனையையும் போட்டுடுங்க. அடுத்த வருஷம் டபுளாயிடும்'' புரோக்கிங் ஆபீஸ் வெளியே சந்திக்கும் இரண்டு முதலீட்டாளர்கள் இப்படி பேசிக்கொள்வதை நம் காதுபட கேட்கலாம். இன்னொரு வகையான செய்திப் பரிமாற்றம் நடப்பதையும் நம்மால் கேட்க முடியும். ''சார், நம்ம நண்பர் ஒருத்தர் சொன்ன டிப்ஸ் இது. அக்யுமுலேட் பண்ணுங்க. பை அஸ் மச் அஸ் யூ கேன். டபுள் யுவர் மணி'' என்றும் சிலர் ஆங்கிலம் கலந்து அள்ளிவிடுவார்கள். நம்மூரில் ஆங்கிலம் பேசுகிறவர்கள் அறிவாளிகளாச்சே! சில சமயங்களில் இதுபோன்ற டிப்ஸ்கள் ஒரேயடியாக ஜெயித்து பணம் கொட்டிவிடுவதும் உண்டு. அப்படி ஒருமுறை நடந்துவிட்டால் அதற்குப் பின்னர், ''சார், அன்னைக்குச். . .
COMMENT(S): 2
நல்லா இருக்கு.
வாகன பாராமரிப்பும் வேல்யூ இன்வெஸ்டிங்...அருமையான விளக்கம் சார்.. நன்றி