இனி எல்லாம் வளமே! ''நான் ஒரு ஆர்க்கிடெக்ட். என் கணவர் தினகரன் தனியார் நிறுவனத்தில் மேனேஜர். எங்களுக்கு வருமானம் குறைவில்லைதான். ஆனாலும் வருகிற வருமானமெல்லாம் வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ. கட்டவே சரியாகப் போகிறது. எங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணச் செலவு, எங்கள் ஓய்வுக்காலத் தேவை என அனைத்திற்குமான நிதித் திட்டமிடலை நீங்கள்தான் செய்துதர வேண்டும்'' என்று கேட்டு வந்தார் திருவான்மியூரைச் சேர்ந்த இல்லத்தரசி கீதாஞ்சலி. இவரது குடும்பத்துக்கு ஆலோசனை வழங்கினார் மும்பையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் புவனாஸ்ரீராம். ''இவர்கள் முதலில் ஐந்து முக்கியமான வேலைகளைச் செய்ய வேண்டும். (இந்த ஐந்து விஷயங்களையும் அடுத்த பக்கத்துல ஒரு முக்கோண சார்ட்டா தந்திருக்கிறேன், பார்த்துக்குங்க!) இந்த தம்பதிகள் முதலில் ஆறு மாதத்துக்குத் தேவையான தொகையை (சுமார் ஐந்து லட்சம் ரூபாய்) முதலில் சேமித்து ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது லிக்விட் ஃபண்டில் போட்டு வைத்தால் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சிக்கல் வந்தாலும் சமாளித்துவிடலாம். இன்ஷூரன்ஸ்! தினகரன் வேலை. . .
COMMENT(S):