வேல்யூ இன்வெஸ்டிங்! பெஞ்சமின் கிரஹாம் ஆரம்பித்து வைத்த வேல்யூ இன்வெஸ்டிங் என்ற கோட்பாடு நாளடைவில் நிறைய மாறுதல்களைச் சந்தித்தது. அடிப்படை தத்துவங்கள் மாறாதபோதும் நிறைய புதிய பாதைகள் இதில் போடப்பட்டது. வேல்யூ இன்வெஸ்டிங்கில் அடிப்படையில் முக்கியமான மூன்று கோட்பாடுகள் என்னவென்று சொல்கிறேன். 1) ஷேர்களின் விலைகள் தாறுமாறாகவும், ஏறுக்கு மாறாகவும் (நல்லது நடக்கும்போது இறங்கவும், கெட்ட விஷயம் நடக்கும்போது ஏறவுமாக) மாறக்கூடிய தன்மையைக் கொண்டது. மிஸ்டர் மார்க்கெட் எனும் நபர் இந்த மாறுதல்களின்போது அதன் மதிப்பைவிட குறைந்த விலைக்கு உங்களுக்கு ஷேர்தனை விற்கவோ அல்லது அதன் மதிப்பைவிட பல மடங்கு அதிகமான விலையில் உங்களிடமிருந்து ஷேரை வாங்கிக்கொள்ளவோ செய்வார். 2) இத்தனை விலை ஏற்ற இறக்கத்திலும் ஒரு புத்திசாலி முதலீட்டாளரால் ஷேரின் உண்மை மதிப்பு என்ன என்பதை ஓரளவுக்கு குத்துமதிப்பாக கண்டுபிடிக்க முடியும். சாதாரண சூழ்நிலையில் ஒரு ஷேரின் மதிப்பும் விலையும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்றாலும், பெரும்பாலான நாட்களில் அது. . .
COMMENT(S): 2
how can i calculate the true value of share?