கம்பெனி அலசல் - வி-கார்டு இண்டஸ்ட்ரிஸ்! இந்த வாரம் நாம் அலசப்போகும் கம்பெனியின் தயாரிப்புகளை பலரது வீடுகளிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். அதிலும், மின்சாரம் திடீர் திடீரென வந்துபோகும் இந்த சமயத்தில் இந்த தயாரிப்பு இல்லை என்றால் சிக்கல்தான். அது வேறு ஒன்றுமல்ல, ஸ்டெபிலைசர்தான். ஸ்டெபிலைசர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான வீ-கார்டு இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம். கம்பெனி எப்படி? பெரும்பாலானவர்களுக்கு இந் நிறுவனத்தை, ஸ்டெபிலைசர் தயார் செய்யும் ஒரு நிறுவனமாகவே தெரியும். (ஸ்டெபிலைசர் விற்பனை யில் 11 சதவிகித மார்க்கெட் பங்களிப்பை வைத்திருக்கிறது) ஆனால், ஆரம்பத்தில் ஸ்டெபிலைசர் தயாரித்த இந்நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக தனது எல்லைகளை விரிவடையச் செய்து, இப்போது சோலார் வாட்டர் ஹீட்டர், கேபிள், பம்ப், மோட்டார், மின்விசிறி, மற்றும் யூ.பி.எஸ். உள்ளிட்ட பல மின் சாதனங்களைத் தயாரிக்கிறது. மேலும், சந்தையில் இருக்கும் புதிய வாய்ப்புகளை கண்டறிவதற்காக கொச்சி மற்றும் கோவையில் இதனுடைய ஆர் அண்ட். . .
COMMENT(S):