டிரேடர்ஸ் பக்கங்கள்நிஃப்டியின் போக்கு: திடீர் ஏற்றம் ஏமாற்றுமா? டெக்னிக்கல்களை மறக்க வேண்டிய காலம் என்றும், எதற்கும் ஜாக்கிரதையாய் டிரேட் செய்யுங்கள் என்றும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம். நிஃப்டி வாராந்திர ரீதியாக 226 பாயின்ட்கள் ஏறி முடிவடைந்தது. அதிலும் புதனன்று ஏறிய வேகமானதொரு ஏற்றம் யாரும் எதிர்பாராததாக இருந்தது. புதனை ஒப்பிட்டுப் பார்க்கையில் வியாழன் மற்றும் வெள்ளி சிறிய அளவிலான ஏற்றத்தையே சந்தித்தது. இருப்பினும் புல்களின் பலம் குறையாமல் இருப்பதைப்போன்ற தோற்றமே சந்தையில் வெள்ளியன்று இறுதியில் நிலவியது. 5015 மற்றும் 4970-ஐ சப்போர்ட் டாகவும், 5100 மற்றும் 5140-ஐ ரெசிஸ்டன்ஸாகவும் கொண்டிருக்கிறது. 5140-ஐ தாண்டி வேகமாக ஏறினால் அதிகபட்சமாக 5225 வரை செல்லும் அளவிற்கு மொமென்டம் சந்தையில் இருப்பதைப்போல் தெரிகிறது. இருப்பினும் செய்திகள் சந்தையின் திசையை எந்த நேரத்திலும் மாற்றிவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரிசர்வ் வங்கியின் மானிட்டரி பாலிசியில் சந்தைக்குச் சாதகமான செய்தி கள் வரும் என எதிர்பார்த்து ஏற்றத்திலிருக்கிறது சந்தை.. . .
COMMENT(S):