டிரேடர்ஸ் பக்கங்கள் கடந்த வாரம் லாங் சைட் டிரேடிங்கை 5350 லெவலுக்கு மேலே போனால் மட்டுமே செய்யவேண்டும். அதுவரை ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே லாங் சைடில் வியாபாரம் செய்யலாம் என்றும், கெட்ட செய்திகள் வந்தால் நிச்சயம் 5200 லெவலையும் தாண்டி 5050 வரையிலும் கீழே போக வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம். 5348 வரை சென்ற நிஃப்டி 5216 வரை கீழே சென்ற பின்னர் வார இறுதியில் 5227-ல் குளோஸானது. வரும் வாரத்தில் ஆக்ஸிஸ் பேங்க், கிரிஸில், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ, ரிலையன்ஸ், ஏசியன் பெயின்ட், ஜீ என்டர்டெயின்மென்ட் போன்ற கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்கின்றது. இந்திய ஹோல்சேல் பிரைஸ் இண்டெக்ஸ், அமெரிக்க ரீடெயில் சேல்ஸ், பிரிட்டன் ரீடெயில் சேல்ஸ் என பல்வேறுவிதமான டேட்டாக்கள் வருகின்ற வாரத்தில் வெளிவர உள்ளது. புதன்கிழமைக்கு மேல் டிரெண்டில் மாற்றம் வரலாம். அதுவரை லாங் சைட் டிரேடிங்கை தவிர்ப்பது நல்லது. 5185/5150 போன்ற லெவல்களை. . .
COMMENT(S):