கம்பெனி ரிசர்ச்! - ரேமண்ட்! ‘Raymond -The complete man’ - சுண்டி இழுக்கும் இந்த வாசகத்துக்காகவே பல ஆண்கள் இந்த நிறுவனத்தின் ஆடைகளை அணிந்தார்கள். ஆரோ, அலன் சோலி, லூயி பிலிப், வான் ஹுசேன் உள்ளிட்ட உலகின் முக்கியமான பிராண்ட்கள் இந்திய சந்தைக்கு வந்திருந்தாலும் இந்திய ஆண்களிடையே 'ரேமண்ட்’ தயாரிப்புகளுக்கு இன்றும் ஒரு மவுசு இருக்கவே செய்கிறது. இந்த நிறுவனத்தைப் பற்றி பார்க்கும் முன் டெக்ஸ்டைல் துறையைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். துறை எப்படி? முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என வருஷத்துக்கு இரண்டு, மூன்று முறைதான் துணி எடுப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை துணி எடுக்கிறார்கள். டெக்ஸ்டைல் துறை இந்திய ஜி.டி.பி.யில் 4 சதவிகித அளவுக்கு பங்களிப்பு செய்கிறது. கிட்டத்தட்ட 3.5 கோடி மக்கள் இந்த துறையில் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள். இத்துறையில் வேலைவாய்ப்பு மிகப் பெரிய அளவில் உயராவிட்டாலும் பெரிய அளவில் சரிவு ஏற்பட வாய்ப்பில்லை.. . .
COMMENT(S): 2
@Ganesh Probably the share witnessed stock split and hence this reduction in EPS. Otherwise both should be correct
EPS 1.91-ஆ அல்லது 9.18 - ஆ? எது சரி?