டிரேடர்ஸ் பக்கங்கள் சந்தை இறங்கும் நிலையில் உள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது என்றாலும் ஷார்ட் சைட் வியாபாரம் செய்ய பரிந்துரைக்கும் அளவிற்குப் பலமாகவில்லை என்றும் எச்சரிக்கையுடன் அளவினைக் குறைத்து ஸ்ட்ரிக்டான ஸ்டாப் லாஸுடன் வியாபாரம் செய்ய வேண்டுமென்றும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம். வாரத்தின் இறுதியில் 104 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்திருந்தது. 5377 வரை ஏற்றத்தைச் சந்தித்த நிஃப்டியால் அந்த லெவலில் தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டும் வெள்ளியன்று 5320-ல் குளோஸானது. செய்திகள் பாசிட்டிவ்வாக வரும் என்ற எண்ணத்தில் மேலே போய்க்கொண்டிருக்கிறது சந்தை. வட்டி குறைக்கப்படும் என்ற எண்ணம் சந்தையில் அதிகமாக இருப்பதால் சந்தை மிகவும் பாசிட்டிவ்வாக இருப்பதைப் போன்ற தோற்றம் உள்ளது. திடீர் இறக்கம் எந்த நேரமும் வந்துவிடலாம். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்கள் வரும் வாரத்தில் டிரேடிங்கைத் தவிர்ப்பது நல்லது. டிரேடிங் நாட்கள் குறைவான வாரமிது. அதே போல் ஐரோப்பாவில் இருந்து ஏதாவது. . .
COMMENT(S):