Latest News
Published on :30-11--0001 06:00 AM
கலாமின் இலங்கை அவதாரம்!
கலாமின் இலங்கை அவதாரம்! சர்வரோக நிவாரணி போல, சமீபமாக பல பிரச்னைகளுக்கு இந்திய அரசின் பிராண்ட் அம்பாசிடர் போல ஆகிவிட்டார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். திடீரென, கடந்த வாரம் இலங்கை சென்றவர், இருதரப்பு மீன்பிடிப்பு தொடர் பாக ஒரு தீர்வைச் சொல்ல... பிரச்னை பற்றிக் கொண்டுள்ளது.  ''இந்திய, இலங்கை நாடுகளின் மொத்தக் கடல் பரப்பும் இருநாட்டு மீனவர்களுக்கும் பொதுவானது. இதில், வாரத்துக்கு மூன்று நாட்கள் இந்திய மீனவர்களும் மற்ற மூன்று நாட்களில் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கலாம். ஒருநாள் பொதுஓய்வு எடுத்துக்கொள்ளலாம்'' என்பதுதான் கலாம் சொன்ன யோசனை. கலாமின் இந்தக் கருத்துக்கு, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ''ராமேஸ்வரம் மண்ணின் மைந்தர் என்பதால், மீனவர் பிரச்னையைப் பற்றிப் பேசுவதாகச் சொல் லும் இவர், இதுநாள் வரையில் அப்படி ஒரு பிரச்னை இருப்பதாகவே வெளியில் காட்டிக் கொள்ளவில்லையே? மனிதகுலத்தையே உலுக்கிப்போட்ட ராஜபக்சே ராணுவத்தை, உலக நாடுகள் பலவும். . .

COMMENT(S): 72

நமக்கு ஒரு நீதி பிறருக்கு ஒரு நீதி? நன்றாக உள்ளது தமிழா

இதை சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சேன். இன்னிக்கு சொல்லிட்டேன். எனக்கு தெரிஞ்ச தீர்வு:

1. இந்திய-இலங்கை இடைய உள்ள சர்வதேச எல்லையை வரையறுத்து, இரு சாராரும் மறு உறுதி படுத்தவேண்டும்.

2. அனைத்து இந்திய-இலங்கை சேர்ந்த மீன்பிடி படகுகளில் ஜிபிஎஸ் சாதனம் பொருத்தி, படகுகள் பயணிக்கும் பாதையை சர்வதேச எல்லை வரைபடத்துடன் சேர்த்து ட்ராக் செய்யவும்.

3. எந்த ஒரு படகு எல்லை மீறி சென்றாலும், சமிக்கை அனுப்பி எச்சரிக்கும் வசதியை ஜிபிஎஸ் சிஸ்டத்துடன் இணைக்க வேண்டும்.

4. இரு நாட்டு கடற்படைகளும், இதனை கண்கானிக்கவேண்டும்.

பிகு: ஜிபிஎஸ் உபயோகம் உலகம் முழுவதும் இலவசம் (இது சாதாரண மொபைல் நெட்வொர்க்குடன் தொடர்பில்லாமல், தனித்து எல்லை கடந்து செயல் படகூடியது) பூமியின் அனைத்து பகுதிகளிலும் இலவசமாக கிடைக்கும் சேவை. செலவு அதிகமில்லை, இப்போதெல்லாம் ஜிபிஎஸ் மாட்யூல் அனேக செல்போன்களில் வந்துவிட்டது.

மனமிருந்தால் மார்கம் பலவுண்டு! - மதி, சிங்கை

எப்போது ராஜபக்சவை சந்தித்தாரோ அப்போதே திருமாவளவனையும் ஈழம் ஒதுக்கிவிட்டது. மற்றவர்கள் பிறப்பில் இருந்தே தன்னலவாதிகள் ஆதலால் அவர்களை எப்போதும் கணக்கெடுத்ததில்லை.... நன்றிகள் வாகீஸன்....

எப்படி எப்படி..... இந்த அப்புரோஃச் எனக்கு நன்கு பிடித்து இருக்கு.... ஆம்.... நானும் பேச மாட்டேன் யாரும் பேச கூடாது.... சண்டை போடவும் முடியாது( வெல்லவும்முடியாது) சமாதானம் பேசவும் முடியாது ...வேறு ஒருவரும் பேசவும் கூடாது பேசினால் துரோகி....

ஏன் ... இப்படி.... உங்கள் வருமானத்தில் அடிவிழுமா???... பல ஆயிரம் அப்பாவி மக்கள் அழிவில் உங்களுக்கு குதுகலம் கேட்கிறது... ரொம்ப நல்ல இருக்கு....

எல்லாரும் ஜோர கைதட்டுங்க பாம்புக்கும் கீரிக்கும் சண்டை நடக்க போகுது என புருடா விட்டு 30 வருட காலம் ஓட்டியது போதும்....இப்போது உங்க பாம்பும் காலி...மஸ்த்தானும் காலி....

மற்றவர்கள் பிழைக்க நீங்கள் வழி செய்ய வேண்டாம் .... அவர்கலை வாழ வழி விட்டலே போதும்... அவர்கள் பிழைத்து கொள்ளுவார்கள்....

இவர் நாடு போற்றும் விஞ்ஞானியாக இருக்கட்டும் - ஒரு தமிழனாகவும் இருந்திருக்கலாமில்லையா?

கலாமுக்கு தேவையில்லை இந்த வேலை

மீனாட்சி, முதலில் நீங்கள் இந்தியரா இல்லையா எனத் தெரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. ஒரு நாடு இன்னொரு நாடின் மீது கட்டுப்பாடு வைத்திருப்பதை யாரும் தவறுன்னு சொல்வதில்லை. நான் சொல்ல வந்தது அடிமையாக இல்லை, ஆங்கிலத்தில் சொல்வதானால் இன்புளூயன்ஸ். இதை உலகின் எல்லா நாடுகளும் தன் ஆதரவான நாடுகளின் மீது செலுத்துகின்றன. அதெல்லாம் தவறுன்னு உத்தம் வியாக்கியானம் பேசிக்கொண்டிருக்க தேவையில்லை. ஏன்னா உலக அரசியல் அப்படித்தான் இயங்குகிறது.

இரண்டாவது, ராமேஸ்வர மீனவர்கள் செய்வதை நான் எங்கே ஆதரித்தேன். இருனாட்டு மீனவர்களும் வாழனும்னு சொல்ற கலாமின் யோசனையை ஆதரித்தேன். இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களின் மேல் எவ்வளவு வெறுப்புடன் இருக்கிறார்கள்ன்னு சுட்டிக்காட்டினேன். ஏன்னா இங்க அரசியலில் இந்திய மீன்வர்கள் சிங்கள அரசால் மட்டுமே வெறுக்கப்படுவது போல் சித்தரிக்கப்படுகிறது.

நீங்கள் புலம் பெயர்ந்த தமிழரானால், உங்களால்தான் இன்று சீனர்கள் இலங்கையில் நடமாடுகின்றனர். நீங்கள் தமிழ்னாட்டின் மூலம் மத்திய அரசுக்கு கொடுக்கும் அழுத்தத்தினால் இந்திய அரசு செயல்படாமல் சீனர்களை காலுன்ற வைத்துள்ளது. நீங்கள் இந்தியாவை பற்றியும் கவலைப்படமாட்டீர்கள், ஈழத்தில் தவிக்கும் அப்பாவி தமிழர்களைப் பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். போர் என்ற பெயரில் உசுப்பிவிட்டு அப்பாவிகள் மரணத்திற்கு காரணமாகிவிட்டீர்கள். நாங்கள் இந்தியாவுக்கு எது நல்லதோ, ஈழத்தமிழர்கள் வாழ எது நல்லதோ அதைத்தான் ஆதரிப்போம். உங்கள் விருப்படி இந்தியா இயங்கனும்னு எதிர்பாக்க வேண்டாம்.

வைகுண்டமுர்த்தி இலங்கை ஒரு தனி நாடு ஏன் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். ஏன் கட்டுப்படுத்த நினைக்கிறீர்கள். உங்களுக்கு என்ன அதிகாரம் உண்டு அவர்களை கட்டுபடுத்த. இதில் புலம் பெயர்ந்த தமிழனைப பற்றி கமென்ட் வேறா.
ராமேஸ்வரம் கடலோர விசைப்படகு மீனவர் நலச் சங்கத்தின் ஆலோசகர் தேவதாஸ்கூட இந்திய மீனவரிடம் ட்ராலர் படகுகள் அதிகம் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் அதன் விளைவுகலை அறிந்தும் தடுக்காதது ஏன் முதலில் உமது தமிழகத்தை மலையாளியிடம் இருந்து காப்பாற்றும்

அப்துல் கலாம் அவர்கள் காங்கிரஸ் ஏஜண்டாக உள்ளார்.
சோனியா காங்கிரஸ் ராஜிவ்க்காக ஈழத்தமிழ்ரகளை பழிவாங்குகிறது.
இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

தமிழக மீனவர்கள் இழுவை மடி வலையுடன் ட்ராலர் படகுகளை தவிற்ப்பதுதான் முதல் தீர்வு.

முரு, உங்கள் கருத்து தவறு. கலாம் ஒரு மேதை. அவர் இந்தியாவிற்கு செய்திருக்கும் சேவை அளவிட முடியாதது. அவர் ஒரு சிறந்த மனிதர், விஞ்ஞானி, ஆசிரியர். ஒரு சில கருத்து வேறுபடுவதால் அவரை நிந்திக்கக் கூடாது.

"இந்திய-தமிழக மீனவர்கள் இழுவை மடி வலையுடன் ட்ராலர் படகுகள் மூலம்தான், எங்களின் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கிறார்கள். இதனால், வடபகுதியில் உள்ள மூன்று லட்சம் பேரின் ஒரே வாழ்வாதாரமான மீன்வளம் அதிவேகமாக அழிக்கப்பட்டு வருகிறது."-----------> வைகோ, சைமன், திருமா, நெடுமாறன் ஆகியோரிடம் சொல்லுங்கள்.

போர்மேகம் சுழ்ந்து இருந்த நேரம் இவர் போயிருந்தால் ஏகப்பட்ட தமிழர்களை காப்பாற்றி இருக்கலாம். செட்டப் மன்னன் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று அங்குபோய் என்னத்தை சாதித்தாரோ.... அவர்மேல் இருந்த மரியாதையை அவரே கெடுத்துக்கொண்டார்.

ஒரு பாவமும் அறியாத... வாழத் துடித்த குழந்தைகளையும் பெண்களையும் ஈழ மண்ணில் முள்ளி வாய்க்காலில் கொன்றழித்த பேரவலத்தைக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நின்று கண்டபோது, ஒரு தமிழனாகப் பிறந்ததற்காக வருத்தம் மட்டும் அல்ல, வாயை தொறக்காத அப்துல் கலாம், இப்போது சமரசம் பேசுவது புனரமைப்பு காரியங்களைப் பேசுவது மிகுந்த ஆச்சரியமக இருக்கிறது. கலாம் தனக்காக அடையாளங்களை தமிழகத்தில் துறக்க ஆரம்பித்துவிட்டார் என்றே தோன்றுகிறது. அதன் ஒரு அடையாளம் தான், அவரது கொடும்பாவி எரிப்பு.

புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரை இகழ்வதை ஒரு இந்தியன் என்கின்ற முறையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய, இலங்கை மீனவர்கள் தனித்தனியாக வாரத்துக்கு மூன்று நாட்கள் எனப் பகிர்ந்து மீன்பிடிக்க, அப்துல்கலாம் கூறிய யோசனை சாலச்சிறந்தது. தமிழக மீனவர்களுக்கு மட்டும் அல்ல, ஈழத்து மீனவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

ஈழத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் வேறு தேசங்களுக்கும் புலம்பெயர்ந்து சௌகரியமாக குடியேறியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் - தங்களின் உறவுகள் குறித்து கொஞ்சமாவது கதைப்பதை ஏன் ஒருசில இந்தியத் தமிழர்கள் கீழ்த்தரமாக எள்ளி நகையாடுகிறார்கள்?

ஒரு உண்மையை இன்னுமா
உய்த்துணர முடியவில்லை....!!!

இந்தியத் தமிழர்களே
இலங்கைத் தமிழர்களே

அது...

முதலில் நாங்கள்
ஒன்றுபட நினைப்போம்
அந்த எண்ணம்
ஈடேறினால்
ஆண்ட பரம்பரை
மீண்டும்
ஈழத்தில்
மீண்டெழுந்து
ஆண்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை...!!!

இன்னாத்துக்கு சார் இலங்கைக்கு போனீங்க? அவனுங்கதான் நம்ம ஆளுங்க ஒவ்வொருத்தரையா கூப்புட்டு சூனியம் வச்சு அனுப்பறானுங்களே!

திரு கலாம் அவர்களின் கருத்து யாருக்கு எதிரானது? தமிழக மீனவர் அதை ஆதரித்திருக்கிறார். யாழ்ப்பாண பேராசிரியர் இலங்கைத் தமிழ் மீனவர்களின் சார்பில் பேசி இருக்கிறார். ஆக தமிழன் என்ற பொது அடையாளம் இல்லாமல் இலங்கைத் தமிழரின் நலன் குறித்து அவர் பேசுகிறார். அப்போது இந்தியாவின் நலன் கருதி திரு. கலாம் பேசுவதில் தவறென்ன? இந்தக் கட்டுரை எதன் அடிப்படையில் எழுதப் பட்டது?

கலாம் அவர்களுக்கு தேவைஇல்லாத வேலை இது !!

"சர்வரோக நிவாரணி போல" ஹா ஹா... நல்ல உவமை. மு.க இப்படித்தான் தமிழர்களை கைவிட்டார். இப்ப தமிழை ஆட்சி மொழி ஆக்குவேன் என்கிறார். காந்தி அடிகள் போராடாமல் இன்னா செய்தாரை குறலை பின்பற்றி இருந்திருந்தால் சுதந்திரம் கிடைத்து இருக்காது. காந்தி அடிகள் கடைசிவரை முயற்சித்து அடிமைகளை மீட்டார். கலாம் அறிவாளி மற்றும் நல்லவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆயினும் வன்முறையை உபயோகித்து மக்களின் சுதந்திரத்தை பறிப்பவனுக்கு ஆதரவுகரம் நீட்டுவதால் தான் கலாம் விமரினத்துக்கு உட்படுத்தப்படுகிறார். இந்திய ஜனாதிபதியை இன்சல்ட் பண்ணவேண்டும் என்ற நோக்கத்துடன் யாரும் அவரை விமரிசிக்கவில்லை. தாய் தந்தையரை இழந்து, குழந்தைகள், சகோதர சகோதரிகளை இழந்து விட்டை இழந்து. மண்ணை இழந்து தவிக்கும் ஆதங்கத்தில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கலாம் கருத்து சொன்னதால் தான் விமரிசிக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் இருந்த போது தமிழக மீனவர்கள் சுடுபட்டதையும், சிறைப்பிடிக்கபட்டதையும் மட்டுமே சொல்லிவந்த பத்திரிக்கைகள், அம்மா ஆட்சி வந்ததிலிருந்து, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதாகவும், இலங்கை தமிழ் மீனவர் நமது மீனவர்களை தாக்குவதாகவும் கூறிவருகிறதே. வாழ்க உங்க பத்திரிக்கை தர்மம்.

கலாம் அவர்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இந்திய இளைங்கர்கள் மத்தியில் இன்றும் அவர் ஜனாதிபதிதான்.

தமிழர்கள் மிகவும் வினோதமானவர்கள். குறிப்பாக நன்றி மறப்பதில். இன்றைக்கு ஒவ்வொரு இந்தியனும் அன்னியத்தாக்குதல் பயமின்றி துங்க நாட்டின் பாதுகாப்பை தூக்கிப் பிடித்தத் தமிழன், நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து மாணவர்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்துவரும் உன்னத மனிதர். அவரை கொஞ்சம் கூட சிந்திக்காமல் விமர்ச்சனம் செய்வது அநாகரிகத்தின் உச்சம். மாற்றுக் கருத்தை நாகரிகமாகவும் பதிவு செய்யலாம். சிந்தியுங்கள்.

இது என்ன தலைப்பு? "இலங்கை அவதராம்"?

ராம அவதராம், கிருஷ்ணா அவதராம் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். இலங்கை அவதராம் என்றால்????? ஒரு மனிதர் இன்னொரு மனிதராகவோ அல்லது இன்னொரு உயிராகவோ அவதராம் எடுக்கலாம். அவர் எப்படி ஒரு நாடாக அவதராம் எடுக்க முடியும்?

"கலாமின் இலங்கை அவதாரம்!" என்பது "கலாமின் பிராண்ட் அம்பாசிடர் அவதாரம்!" என்று இருந்தால் சரியாக இருக்கும்.

தான் நல்லவன் என்று சம்பாதித்த பேரை இவரே கெடுத்து கொள்கிறார்..........
மீடியாக்கள் சரியாக இல்லாத காலத்திலேயே கர்மவீரர் காமராஜரயே தோற்கடித்த மக்கள்....
இன்று தும்மினாலே உலகம் முழுவதும் செய்திகள் பரவும் உலகில் உள்ள நீங்கள்....
ஒரு சிறு தவறு செய்தாலும் மூலைமுடுக்கெல்லாம் பரவிவிடும்....நீங்களும் மனிதர்தான்....தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது....
இனி உங்களுக்கு சமூக சேவை அவசியம் இல்லை...

இந்திய-தமிழக மீனவர்கள் இழுவை மடி வலையுடன் ட்ராலர் படகுகள் மூலம்தான், எங்களின் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கிறார்கள்.

தாயானாலும், பிள்ளையாலும் வாயும் வயிறும் வேறுதானே?........

  Displaying 1 - 25 of 72
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 01 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook