Latest News
Published on :30-11--0001 06:00 AM
நோ இந்தர்வியூ... நோ ரெகமெண்டேஷன்...
நோ இந்தர்வியூ... நோ ரெகமெண்டேஷன்...வாசகிகள் பக்கம்   ஃபாலோ  அப் ''அமெரிக்காவிலும் உண்டா எக்ஸாம் ஃபீவர்?'' என்ற தலைப்பில் சென்ற இதழில் ஒரு கட்டுரை இடம்பிடித்திருந்தது. அதற்கு சப்போர்ட்டிங் டாகுமென்ட்டாக ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார் அமெரிக்கா வாசகி தீபிகா சுதாகர்! அதில் - ''அமெரிக்காவில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவியின் அம்மா என்கிற முறையில், எழுதுகிறேன். இங்கு ஸ்கூல் அட்மிஷன் ஒரு பிரச்னையே இல்லை. 'ஸ்கூல் ஸோன்’ அடிப்படையில், வீட்டு முகவரியை மட்டும் வைத்தே அதற்கு அருகில் இருக்கும் பள்ளி, உங்கள் குழந்தைக்கான பள்ளியாக நிர்ணயிக்கப்படுகிறது. தெரிந்தவர், எம்.எல்.ஏ. சிபாரிசுக் கடிதம், நன்கொடை என்கிற பேச்சுக்கும் அவசியமில்லை. பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ அட்மிஷன் இன்டர்வியூ வைக்கும் அதிகப் பிரசங்கித்தனமும் சுத்தமாகக் கிடையாது. பஸ் வசதி மற்றும் உயர்நிலைப் பள்ளி வரை கல்வி முழுக்க இலவசம். புத்தகங்கள்கூட பள்ளியிலேயே இலவசமாகக் கொடுத்துவிடுகிறார்கள். எல்லாப் பள்ளிகளிலும் மதிய உணவு நிச்சயமாகப் பரிமாறுகிறார்கள்... மிகக் குறைந்த விலையில்.. . .

COMMENT(S): 17

super

அரசுப் பள்ளீ ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ள்யில்தான் சேர்கவேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தினாலே பள்ளீகள் நல்ல முறையில் இருக்கும்.

அரசுப் பள்ளீ ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ள்யில்தான் சேர்கவேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தினாலே பள்ளீகள் நல்ல முறையில் இருக்கும்.

wish we could have an obama here then how wonderful so much of concentration yet the american children do not know the value of all these facilities and our children are so serious about studies and coming up may be we all should educate our children abroad and facilitate them to be bright in their future....sunkan

சரி, இதுல அம்மா யாரு?...மகள் யாரு?...

அட எந்த் ஒரு சிஸ்டத்தை எடுத்தாலும் குறை கண்டுபிடிப்பது மிக சுலபம். அமெரிக்க முறையில், அவ்வூர் மக்களை கேட்டால் குறை சொல்லுவார்கள். ஹோம் ஸ்கூலிங் என்று வீட்டிலே பாடம் சொல்லி தருவது அண்மை காலமாக மிகவும் பரவி வருகிறது.

பள்ளிகள் எங்கும் ஒரே மாதிரி கிடையாது. நகரங்களில் பள்ளிகள் மோசம். மேலும், இந்தியர்கள் போன்றவர்கள் இருக்கும் ஊர்களில் (நம்மூர் பழக்கம்) கிரேட் என்று உழைக்கும் பலர் உண்டு. அதே வேறு பள்ளிகளில் விளையாட்டு, இசை, சேவை, அரசியல் என்று பல்வேறு துறைகளிலும் பயிற்சி உண்டு. கணக்கு, அறிவியல் என்று மூழ்கி போக மாட்டனர்.

நம்மூரில் படிப்பவர்களை என்றுமே கணக்கு அறிவியலில் வெல்ல இயலாது. அது, இங்கு வரும் இந்திய மாணவர்கள் எளிதாக அந்த கல்லூரிகளில் முதன்மையாக வருவதிலேயே தெரியும்.

நம்மூர் கல்வி முறை ஒரு விதத்தில் அடிப்படைகளை ஆணித்தரமாக அடித்து சொல்லி தரும். எளிதில் மறக்க இயலாது. ஆனால் அந்த திறனை எப்படி உபயோகிப்பது என்பதை சொல்லி தராது. அமெரிக்க பள்ளிகள் அதில் சிறப்பானவை என்பது என் கருத்து.

இங்கும் ரேஸ் உண்டு, பல நல்ல பல்கலைகழகங்களில் சேர, அதற்கு பயிற்சி வகுப்புகளும் உண்டு. ஆனால் நம்மூர் போல ஒன்பது,பத்து வகுப்புகளிலேயே ஐ.ஐ.டி கோச்சிங் என்றும், அது என்றும் இது என்றும் படுத்தும் வழக்கம் கிடையாது.

என்ன ஒரு மிகப்பெரிய வித்தியாசம் என்றால் - அமெரிக்காவில் 18 வயதில் பெயில் ஆனாலும் 30 வயதில் கல்லூரி சேர்ந்து மருத்துவராக முடியும். 2 வில் பெயில் என்றால் வாழ்வே சூன்யம் என்ற நிலை கிடையாது. அத்தகைய நிர்ணயிப்புதான் மாணவர்களை மிகவும் படுத்தி எடுக்கிறது. அந்த பயம்தான் மாணவர்களின் மன உளைச்சலுக்கு காரணமாகிறது.

தமிழகத்திலோ - 2 மார்க் இல்லை எனில் வாழ்வின் திசையே மாறிவிடும். ஆகையால் பள்ளிகளையோ, ஆசிரியர்களையோ குறை கூறி பயனில்லை. இந்த முறையை மாற்ற வேண்டும். ஹாங்காங்-கில் இந்த முறையால் தற்கொலைகள் அதிகமாகி அதனை மாற்றி அமைத்தனர். ஆனால் தமிழ் நாட்டில் யார் அதை செய்வார்கள்?

அமெரிக்காவுக்கு எப்படி விசா எடுக்க வேண்டும்?
கருமம் இங்க இருந்து எஸ்கேப் ஆகணும்.

A high school kid in US needs to spend around 80 hours per week for 4 years on school, home work, projects, competiting for various competitions if the kid wants to get into to good university.

School grades are not alone to get into good colleges in US. They need to get high scores in SAT and subject SAT's, which are like our entrance exams. Most of the scholarships are need based rather than merit based. The mad rush to get into harvards and ivy's are worst than JEE fever in India

There is nothing like free lunch in USA. Public schools are run by cities towns and are funded mostly by property taxes collected from the homeowners (typically 1 to 3 % of the house value depending on the state). A typical homeowner in a good school district pays about 8 to 10K dollars per year. School lunches are not really subsidized and certainly not very healthy. Towns are imposing some fee in these days for school buses, yes for some it is free not for everyone

மொத்தத்தில் வெறும் படிப்பு மட்டுமல்லாமல் ஆல் ரவுண்ட் டெவலப்மென்டில் அமெரிக்க கல்வி முறை அக்கறை கொள்கிறது என்பதில் ஐயமில்லை. திருமதி தீபிகா சுதாகருக்கு நன்றி.

நீங்கள் சொல்லியிருப்பது பொதுப்(அரசு) பள்ளிகளுக்கானது. தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் பிழிந்து விடுவார்கள். அங்கு சீருடைகள் உண்டு. பள்ளிக் கட்டணம் ஆண்டுக்கு 10000 - 22000 டாலர்.

vow superb!!!!!

VERY GOOD

மிகவும் பொதுப்படையான கருத்து. இங்கு கூறப்பட்டுள்ள கட்டணம் அரசுப் பள்ளிகளுக்கானது. தனியார் பள்ளிகள் கட்டணம் தனி. சுமாராக குறைந்தது மாதம், $1000 கட்ட வேண்டியிருக்கும். இந்த கட்டுரை என்று இல்லை, நான் பார்க்கும் அனைவருமே, நம்முடைய ஊர் தனியார் பள்ளிகளையும் அமெரிக்க அரசுப் பள்ளிகளையுமே ஒப்பிடுகிறார்கள். தரம் என்று பார்த்தால், அமெரிக்க அரசுப் பள்ளிகள் நம்முடைய அரசுப்பள்ளிகளை விட நன்றாகவே உள்ளன. ஆனால், நம்முடைய ஊரில் தான் யாரும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதில்லையே.

எங்கள் வீடுகளில் நிறைய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவரின் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். நான் இதை தவறு என்று சொல்லவில்லை. எந்த ஊரிலும், அரசுப் பள்ளியில் சேர்க்க சிபாரிசுக் கடிதமோ, டொனேஷனோ தேவையில்லை. நம்முடைய ஊர் அரசுப் பள்ளிகளில் இலவசமாகவே சத்துணவு, ஏழைக்குழந்தைகளுக்கு இலவசப் புத்தகங்கள், இன்னும் பல வழங்கப்படுகின்றன. இது யாருக்கும் தெரிவதில்லை.

அரசுப் பள்ளிகளை அரசுப் பள்ளிகளுடனும், தனியார் பள்ளிகளை தனியார் பள்ளிகளுடனும் ஒப்பிடுதல் நல்லது.

அமெரிக்காவில பல இடங்களில், தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில், சீருடை உண்டு.

மதிப்பெண்கள் மற்றும் சேவை விஷயங்களில் கட்டுரையாளருடன் ஒத்துப் போகிறேன்.

அதுவே அதிகாரப்பூர்வமான மதிப்பீடாகி, காலேஜ் அட்மிஷனை நிர்ணயிக்கிறது...

What is stated is true; however, in US, if one wants to get admission into top rated Universities, the school grades alone won't help... one has to get high SAT and AP IB scores. These are common examinations. This is the only way the Universities will compare students from one school to another. Students also have to earn their recommendations from their teachers. Most of the teachers are very fair in their assessment.

அமெரிக்கா.. அமெரிக்கா..புலம்பும் அறிவு ஜீவிகளே!இதையெல்லாம் கண்டுக்கவே மாட்டீங்களே!

Displaying 1 - 17 of 17
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 14 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவைLogin or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook