Latest News
Published on :30-11--0001 06:00 AM
காதலின் மறுபக்கம் !
காதலின் மறுபக்கம் ! வாசகிகள் பக்கம்   ''காதல் சிறப்பிதழ் தயாராகிக் கொண்டிருக்கும் எனத் தெரியும். காதல் என்பது எல்லோருக்கும் வசந்தத்தை மட்டுமே கொடுத்துவிடாது. அது தரும் ஏமாற்றங்களும், துன்பங்களும் கொடூரமானவை. அதன் நிகழ்கால சாட்சிகளில் நானும் ஒருத்தியாக நிற்கிறேன். விருந்துக்கு நடுவில் வைக்கும் மருந்தைப் போல், இந்த இதழில் மிளிரும் காதல் கொண்டாட்டக் கட்டுரைகளுக்கு நடுவில், தவறான வயதில், தவறான நபரின் மேல், தவறான சூழலில் கைகோக்கும் காதலுக்கு... தோல்வியும், திண்டாட்டமுமே மிஞ்சும் என்று உணர்த்தும் என்னுடைய இந்த எச்சரிக்கை கடிதத்தையும் வையுங்கள்!'' - உரிமையுடன், உருக்கத்துடன் எழுதிஇருந்தார், மதுரையைச் சேர்ந்த 32 வயதான அவள் வாசகி (பெயர் மற்றும் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன). ''நான் ப்ளஸ் டூ படித்தபோது, எதிர்வீட்டில் குடியிருந்தார் கல்லூரி மாணவரான அவர். எங்களுக்குள் காதல் மலர்ந்தது. பெற்றோர் எதிர்ப்பை மீறி, ரகசிய மணம் முடித்தோம். விஷயம் தெரிந்து இரு வீட்டாரும் கோபத்தில் பொங்க, காவல் நிலையத்தில். . .

COMMENT(S): 16

பெண்களே, நீங்க காதலிக்கும் போது உங்கள் பெற்றோரும், உங்களுடைய நலன் விரும்பிகளும் உங்களுக்கு வில்லன்களாக தெரிவார்கள். ஹீரோ போர்வையில் இருக்கும் வில்லத்தனமான காதலன் தொடக்கத்தில் ஹீரோவாக தான் தெரிவான். பெண்கள் திருமண வாழ்க்கையில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்ததால் வந்த வினை தான் இந்த பெண்மணியின் கண்ணீர் கதை. இது போல நம் அறிவுக்கும், பார்வைக்கும் எட்டாத எண்ணற்ற கண்ணீர்கதைகள் உள்ளன. எல்லாம் முடிந்தபிறகு வருந்துவதால் லாபம் இல்லை. தவறு செய்வதற்கு முன்பும், தவறான முடிவை எடுப்பதற்கு முன்பும் ஒருமுறைக்கு ஆயிரம் முறை யோசித்தால் இக்கால பெண்களுக்கு நல்லது. அப்படியும் இல்லையென்றால், நல்ல படிப்பும், கையில் வேலையும் இருந்தால் இதுபோன்ற காதல், கருமாந்திரத்திற்கெல்லாம் துணிந்து முடிவெடுக்கலாம். பின்னால், அவன் விட்டு சென்றாலும், தன் படிப்பும், வேலையும் தனக்குதவி என்று தன்னம்பிக்கையோடு மீதி வாழ்க்கையை வாழலாம். ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களை குறை சொல்லி புண்ணியமேதும் இல்லை. இந்த பெண்மணியின் கதை வருங்கால சந்ததியினருக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.

படிப்பை ஏனிந்த பெண் விட்டு விட்டார். இந்த காலத்திலும் இப்படியா?

Very sorry to hear your story sister...Appreciate your intention to share it in a platform like Aval vikatan and create awareness... God will pardon all your sins and will have a new life in store for you. Take care of your mother. Best wishes.


முற்பகல் (காதல்) செய்யின், பிற்பகல் (சோகம்) விளையும்!

@மங்கை --------- படித்து நன்கு சம்பாதிக்கும் பெண்களையும் பணத்துக்காகவே வீழ்த்தும் ஆண் வர்க்கமும் உள்ளனர். நட்பு வட்டாரத்தில் ஒரு தோழியின் அக்காவிற்கு நேர்ந்த கதி இது. திருமணத்திற்கே பின்பே தெரியும் அவருக்கு ஏற்கனவே மணமாகி குழந்தையும் உள்ளனர். இவருக்கும் குழந்தை பிறந்தாகி விட்டது. இரு வீட்டிலும் வந்து போய் சுகம் அனுபவிக்கிறார். இரண்டாமவரின் சம்பளம், பி.எஃப். என அனைத்தும் முதல் குடும்பத்திற்கு செலவிடப்பட்டன. இப்போது தான் அந்த சமத்து முழித்துக் கொண்டுள்ளது. மனிதர் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

WE SHOULD KNOW OUR PRIORITIES IN LIFE. PARENTS, EDUCATION, MONEY AND THEN ONLY OTHERS.

நிச்சயமாக அவன் உன்னைக் காதலிக்கவில்லை, தேவை நிறைவேறியதும் கைவிட்ட ஒரு மிருகத்துடன் வாழ்வதைவிடத் தனிமையே மேல். நேர்மையாக வாழ எத்தனையோ வழிகள் உள்ளன. ஒருகுழந்தையைத் தத்தெடுத்து அக்குழந்தைக்கு வாழ்வு கொடு. மகளிர் குழுக்கள் மூலமாகத் தொழில் கற்றுக்கொள். அவர்களே வங்கிக் கடன் வசதியும் பெற்றுத் தருவார்கள். உன்னை ஒதுக்கியவர்கள் முன் சிறப்பாக வாழ்ந்துகாட்டு. காலப்போக்கில் உன் உறவினர்களின் ஆதரவும் கிட்டும். நட்ந்த்தை ம்ற நடப்பதை நினை. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாழ்த்துகள்.

இந்த பெண்மேல் அனுதாபத்திற்கு பதில், கோபம்தான் வருகிறது,நல்லவேளை குழந்தை இல்லை,படிக்கும்போது இந்த காதல் கண்றாவி எல்லாம்,வந்தால் இந்த கதிதான்.......

கொடுமை!!பதினென் பருவத்தினருக்கு நல்ல அறிவுரை!!

போதும் உன் துயரம் ஆயிரம் வழிகள் உலகில் முன்னேற முயற்சிப்போர்க்கு

காதல் வந்தால் தூக்கம் வராது, பசிக்காது அப்படி இப்படின்னு இதே இதழில் இன்னொரு தலைப்பில் ஒரே வசனங்கள் இருந்தது- இதுல காதல் இல்லைனா பூமி சுத்தாதுன்னு தலைப்பு வேற. அதெல்லாம் பூமி சுத்திக்கிட்டு இருக்கும். இப்படி கண்ணுமண்ணு தெரியாம காதலிச்சா(அதுவும் 2), மறுபக்கம் இப்படிதான் சோகமாயிடும்.

சுய சம்பாத்தியம் இல்லாமல் காதலிக்கும் ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய கதை. இது போன்ற பெண்களை நிஜமாகவே நான் பார்த்து இருக்கிறேன்.

முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்!!!

This is 1000 times true

Really sad...Be bold and face the world.Try to complete some course in correspondence.There are so many right ways to live in this world.Don't give up.I know it is easy to say.But its u only u can give hope to u.Pray to God for giving u such guts in life.

Very sad to read this. However, God will help you. Please take a bold step in coming up. Education alone is not going to give victory in life.

Try to start a small business. Raise your income. Do not believe others. God will show a good person whom you like.

In prayer.....

Displaying 1 - 16 of 16
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 14 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவைLogin or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook