Latest News
Published on :30-11--0001 06:00 AM
விகடன் மேடை - ஷங்கர்
விகடன் மேடை - ஷங்கர்சுப.கோகுலகிருஷ்ணன், சென்னை.  ''உங்களுடைய பெரும்பாலான ஹீரோயின்கள் அதற்கு முன் மணிரத்னம் படங்களில் நடித்திருக்கிறார்கள். 'ரோஜா’ - 'ஜென்டில்மேன்’, 'இருவர்’ - 'ஜீன்ஸ்’, 'உயிரே’ - 'இந்தியன்’, 'முதல்வன்’... இது என்ன சென்டிமென்ட்?''   '' 'காதலன்’ - நக்மா, 'பாய்ஸ்’ - ஜெனிலியா, 'அந்நியன்’ - சதா, 'சிவாஜி’ - ஸ்ரேயா, 'நண்பன்’ - இலியானா... இது என்ன சென்டிமென்ட்டோ... அதே சென்டிமென்ட்தான்!'' எ.தரணிபதி, கோவை. '' உலக அதிசயங்களில் நீங்கள் வியந்து ஆச்சர்யப்பட்ட உலக அதிசயம் எது? ஏன்?''  '' தாஜ்மஹால்! அது ஒரு பிரமாண்டமான காதல் கவிதை. படத்துல பார்த்த தாஜ்மஹாலைவிட நேர்ல மிக மிக மிகப் பிரமாண்டமாக இருந்தது. பக்கத்துல, தூரத்துல, மிக மிக தூரத்துல, பின் பக்கத்துல, சைடுல, காலையில, மத்தியானத்துல, சாயங்காலத்துல, ராத்திரிலனு... எந்த நேரத்துல, எங்கே இருந்து பார்த்தாலும் அது ஓர் அதிசய அழகுதான். தாஜ்மஹால்ல நிக்கிறப்போ ஒரு வைப்ரேஷன்,. . .

COMMENT(S): 30

"'ரோபோ’தான் டைட்டில். கடைசில 'எந்திரன்’னு வைக்க வேண்டியதாயிடுச்சு."-------> அரசு வரிச் சலுகை கிடைக்கும் என்பதால்.

கீழ்க் கண்ட காம்பினேஷன் எப்படி இருக்கு?

"ஷங்கர்ஜி... நீங்கள் வாங்கும் முழுச் சம்பளத்துக்கும் வருமான வரி கட்டுகிறீர்களா?''

"நண்பர்கள், உதவியாளர்களைக் கேட்டப்போ, 'உங்களுக்கு பிளாக்தான் சரி..."

ஷங்கர் சார்.யூ ராக்ஸ். தொடரட்டும்.

கழுவற மீனுல நழுவற மீனு கேள்விபட்டிருக்கேன்...நழுவற மீனுலயும் வழுக்கி விழுவற மீனு நம்ம "ஷங்கன்"தான்யா... ஸாரி, "ஷங்கர்"தான்யா...

shankar, you can not think of 50 marks for color xerox

இவர்களின் கேள்வி பதிலை சினிமா விகனில் போடலாமே. கலாம் வந்த பக்கத்தில் இவர்கலை பார்ப்பது கொஞ்ஜம் கஸ்டமாக உள்ளது.

உலக அதிசயங்களில் என்னைக் கவர்ந்தது: பைசா இருக்குதோ இல்லியோ சாயாமல், ஸ்டெடியா நிக்கற நம்ம பி.எஸ்.இ. பங்குசந்தை கோபுரம்...

இங்கே ஒருத்தர் 98ல் செல்போன் இல்லை என்று எழுதியிருக்கிறார். 1995ல் பிபில் (தற்போது லூப் டெலிகாம்) செல்போன் சேவை தொடங்கியிருந்தார்கள். நான் அப்போது நோகியா 5500 என்ற மாடல், தற்போதைய கார்ட்லஸ் போன் சைஸில் இருக்கும், பயன்படுத்தினேன். ஒரு நிமிடத்திற்கு ரூ.3.50 வசூலித்தார்கள்.

குறை சொல்வது மிக மிக எளிது, ஆனால் அதைச் சரியாகச் சொன்னால் தான் உங்கள் மேல் மரியாதை, இல்லையென்றால்... பாவம் நீங்கள்.

மூர்த்தி அண்ணாவின் ஆயிரங்கள் கோடியாய் மாறியிருக்கிறதா?

@கைலாஷ், பிறியாணி(கலாம் அய்யா, சகாயம் அய்யா) சாப்பிட்ட பிறகு வெந்தும் வேகாத உப்புமாவ சாப்பிட மனம் வரவில்லை.

''நண்பர்கள், உதவியாளர்களைக் கேட்டப்போ, 'உங்களுக்கு பிளாக்தான் சரி... ஃபேஸ்புக், ட்விட்டர் செட் ஆகாது’னு சொன்னதால...

இதைக்கூட உங்க உதவியாளர்கள் தான் முடிவு பண்றாங்களா?

லாஜிக் சொதப்பல் கேள்விக்கு மிகப்பொருத்தமான பதில் சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

நான் கொடுத்து வைத்தவன். தாஜ்மஹாலை இருவது வருடத்திற்கு முன்பே சில முறை பார்த்துச் சிலிர்த்தவன். சன்கரும் எப்போது பார்த்தாரோ?

அருண்குமார், கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்றது கஷ்டம். ஷங்கர் கேட்ட கேள்விக்கு நீங்க ஜாலியா பதில் சொல்லலாமே!

>>நான் என்ன லாஜிக் சொன்னாலும் நீங்க ஏத்துக்கப்போறது இல்லைங்கிறதையாவது ஒப்புக்குறீங்களா<< மன்னிக்கனும் ஷங்கர், நண்பன் படதில ஒரு செம லாஜிக் சொதப்பல் இருக்கு. மாணவர்களுக்கு பாடம் எடுத்துட்டு இருக்கறப்போ கரும்பலகைல "98"னு தேதி போட்டிருக்கும். அடுத்த காட்சில கல்லூரி முதல்வர் கோழிப்பண்ணை வைத்திருக்கும் மாணவரின் தந்தைக்கு அலைபேசியில் தொடர்பு கொள்வார். 98களில் அலை பேசியின் உபயோகம் குறைவு, அதுவும் கோழிப்பணை வைத்திருப்பவர் 98க்களில் அலை பேசி வைத்திருப்பதாக காட்டுவது அபத்தமாகவே படுகிறது.

@ அப்பன் ; வெறும் சாம்பார் சாதம் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு இருக்க முடியாது , ரசம் , தயிர் சாதமும் சேர்த்து சாப்பிட வேண்டும்

ஷங்கர்ஜி, எனக்கு அவீசி எல்லாம் வேண்டாம்... நான் குடும்பத்துல ஒருத்தனா, பொறுப்பா, ஒழுங்கா நடந்துக்கிற குடிமகனாக்கும்...

ரஜினியையும், கமலையும் இணைத்து படம் செய்யும் சாமர்த்தியம், தைரியம் ஷங்கருக்கு மட்டுமே உண்டு என நினைக்கிறேன். ஷங்கர், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் செய்வீர்களா?.

Dear Sankar,
Please Read the Article "My India" written by S.Ramakrishanan in this week JV to know the fate of Pity Noorjahan. Taj not the symbol of love but symbol of Noorjahans sadness.

@sivakumar - I agree. Tajmahal may be brilliant, but that location stinks with pan spits now. It reflects as a sad metaphor of our nation's state - beautiful in core, but ugly in all other aspects.

போதும்...ப்ளீஸ்...

எனகென்னமோ தாஜ்மஹால் ஒரு அழுக்கடைந்த கட்டிடமாக தான் தெரிந்தது. இதுவே வெளிநாடுகளில் இருந்திருந்தால் அதன் பராமரிப்பே வேறு மாதிரி இருந்து இருக்கும். அப்புறம் தாஜ்மஹால் செல்பவர்களுக்கு ஒரு அட்வைஸ், தயவு செய்து தாஜ்மஹாலின் பின்புறம் யமுனா நதியை எட்டி பார்த்துவிடாதிர்கள். அப்படியே பார்த்தாலும் கூடிய விரைவில் தாஜ்மஹால் உயரத்திற்கு வரப்போகும் குப்பை மேட்டை பார்த்து அதிர்ந்து விடாதீர்கள் என்னை போல.

Displaying 1 - 22 of 22
 
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 22 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook