Latest News
ஜெய்தாப்பூரில் எதிர்ப்பு...கூடங்குளத்தில் ஆதரவு!
ஜெய்தாப்பூரில் எதிர்ப்பு...கூடங்குளத்தில் ஆதரவு! 'கூடங்குளம் அணுஉலையைத் திறக்க வேண்டும்’ என்று சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பேசி ​வரும் சி.பி.எம். கட்சியின் நிலைப்பாட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினரும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்தச்சூழலில், சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.  ''மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் அணு உலை வேண்டாம் என்கிறீர்கள். கூடங்குளம் அணு உலை வேண்டும் என்கிறீர்கள். இது முரண்பாடாக இல்லையா?'' ''ஜெய்தாப்பூரில் அமையவுள்ள அணுஉலை, இதுவரை உலகில் எங்கும் சோதிக்கப்படாத தொழில்நுட்பம் கொண்டது. எனவே, அதை இங்கு அனுமதித்து, நம்முடைய மக்களைப் பரிசோதனை எலிகள் ஆக்குவதை ஏற்கவே முடியாது.ஜெய்தாப்பூர் உலைக்காக இப்போதுதான் நில எடுப்பு தொடங்கி இருக்கிறது. பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள், பிறமக்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த மாற்று வழியும் சொல்லப்படவில்லை. அதனால், ஜெய்தாப்பூர் அணுஉலைத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம். கூடங்குளத்தைப் பொறுத்தவரையில், நிலஎடுப்பு முடிந்துவிட்டது. இங்கு அமையவுள்ள வி.வி.இ.ஆர். வகை உலை, ஐரோப்பாவில் வெற்றிகரமாக இயக்கப்​பட்டு வருகிறது.'' ''இந்த தொழில்நுட்பமும் பாதுகாப்பானது. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 18

கலைஞரை உத்தமர் என்றவர்கள்தானே இவர்கள்..... பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ருஷ்யர்களை கொன்ற ஸ்டாலின் படத்தை மாட்டி அழகு பார்ப்பவர்களாயிற்றே..... நிலம் கையகப்படுத்தி விட்டால் என்ன செய்தாலும் கேட்க மாட்டார்கள் போலும்.

>>''ஜெய்தாப்பூரில் அமையவுள்ள அணூலை, இதுவரை உலகில் எங்கும் சோதிக்கப்படாத தொழில்நுட்பம் கொண்டது<< ரஷ்ய அணுவுலை விபத்து பத்தி மறந்து போச்சா? வேணும்னா ஒரு தடவை அங்க போய் பார்த்துட்டு வந்து பேசுங்க...

முல்லைப் பெரியாரில் துரோகம் இழைத்தவர்களிடம் இதை விட வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?

அணூஉலை எதிர்பாளர்களுக்கு.....போனவாரம் பிரிட்டன் பிரான்சுடன் 21 அணு உலைகள் இங்கிலாந்தில் கட்டுவதர்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருக்கிறது

கூடங்குளம் விவகாரத்தில் ஜெஜெ டிவி பஙகுதரார் கொடுக்கும் ப்ரெஸர் தான் காரணம் என்ற வதந்தி உன்மையா?விகடன் ஏன் அதை ஆராய முன் வரவில்லை

லூசுப்பயல்

ரஷ்யாவுக்கோ, சீனாவுக்கோ லாபம் கிடைக்கும்னா இந்தியா மேல குண்டு போடகூட அனுமதிப்பாங்க இந்த கம்யூனிஸ்டுகள். இதுதான் இவங்க லட்சணம்.

சி.பி.எம். சீனக் கொடியின் கீழ். சி.பி.ஐ.-தான் ரசியக் கொடியின் கீழ். ரசியாவின் 'பவர்' பிளாண்ட் கூடங்குளத்தில். ஆனால் ரசியா 'பவர்' இழந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன.

குத்துவிளக்கினால் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்கமுடியாதே.

குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல நங்கற பழமொழி இவங்களுக்காகதான் வந்துருக்கும் போல இருக்கு இந்த கம்யுனிஸ்ட் பொழப்புக்கு பேசாம சுண்டல் விக்க போலாம்

நீங்க பெரிய அறிவாளி!

இந்த மத்திய குழு சொல்றிங்களே! அவங்க எங்க? அவங்களையே போய் 2G, மும்பை ஆதரிஸ், காமன்வெல்த், ISRO மாதிரி எல்லாத்தையும் ஆய்வு பன்ன சொல்லுங்க.

என்ன சொல்ல வருகிறார்?...

இந்த போலி பொதுவுடமைவாதிகள் - பிழைப்புவாதிகள் ஆகிவிட்டனர். நெய்யாறு பிரச்சினை, முல்லை பெரியாறு, கூடங்குளம் போன்றவற்றில் இவர்களின் சாயம் வெளுத்துவிட்டது. இவர்களில் முக்கால்வாசிபேருக்கு மார்க்ஸ், எங்கல்ஸ், மாவோ, காஸ்ட்ரோ, சேகுவேரா பற்றியோ பொதுவுடைமை கொள்கைகள் பற்றியோ எதுவும் தெரியாது.

நம்ம சரித்திர காலத்துலெ மின்சாரமெல்லா இல்லியே அப்ப மக்கள் என்ன செஞ்ஜாக ,எளிமையா வாழ்ந்தாக நாங்கள்ளாம் சின்னவாளா இருக்கர்ச்செ மின்சாரமெ இல்லெ , மாலை வேளைலெ ரென்டு குத்துவிளக்கெ ஏத்திருவாங்க இல்லாட்டி காடா விளக்குன்னு ஒன்னு உன்டு பெரிய அகல் போல இருக்கும் அதுலெ பழைய துணிய கட் பன்னி திரிபோல போட்டு எரிப்பாக எண்ணை கூட வீட்டில் உள்ள சுட்ட எண்ணை யூச் பண்ணிப்போம் எவ்லொ பிரைட்ட எரியும் தெரியுமா ,இப்பொதும் நான் பவர் போனா பஙக்லூர்லே இதே முரைலே விளக்கு ஏட்ருவ்துன்ன்டுசுட்ட எண்ணைய வேச்ட் பன்னாம உபயோகிகிரதுதான்,

காசுக்கு விலை போகும் மனிதர்கள்

COmedy piece.. They dont have common idealogy across country.. Instead of giving country to these people, British can come again and rule us..

"ஆளைச் சொல்லு சட்டத்தைச் சொல்கிறேன்"

இது பெரிய விசயமா....மார்த்தாண்டத்தில் ஒரு தெருவில் காங்கிரஸை திட்டி ஓட்டு கேப்பார்கள் கேரளா..மறுதெருவில் அதே காங்கிரஸை ஆதரித்து ஒட்டு கேப்பார்கள்...தமிழ்நாடு

Displaying 1 - 18 of 18
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 22 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook