Latest News
Published on :30-11--0001 06:00 AM
பிட் அடித்த சசிகலா!
பிட் அடித்த சசிகலா! கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து பதில் சொல்லிச் சொல்லிக் களைத்துப் போன(?) சசிகலா அடுத்த ரவுண்ட் ஆட்டத்துக்குத் தயாராகி விட்டார். புதன்கிழமை காலையில் சென்னையில் இருந்து இளவரசி மற்றும் இளவரசியின் மருமகன் ராஜராஜனோடு கிளம்பி பெங்களூரு வந்தார்.  உளவுத்துறையை உளவு பார்த்த சசி! சென்னையில் தொடங்கி கோர்ட் நடவடிக்கை வரையிலும் மாநில உளவுத்துறை சசிகலாவை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்பதை எழுதி இருந்தோம். இந்தமுறை, உளவுத்துறை அட்ரியா ஓட்டலிலும் புகுந்து, சசிகலாவுக்காகக் காத்துக்கிடந்தது. இதை அறிந்துகொண்டோ என்னவோ, அவர்களுக்குத் தண்ணி காட்டிவிட்டு, இந்த முறை கேபிடல் ஓட்டலில் இளவரசியுடன் தங்கினார் சசிகலா. ஆனால், அட் ரியா ஓட்டலிலும் அறை போடப்பட்டுள்ளது. அந்த அறையைக் காலி செய்யாமல், அங்கு தனக்கு வேண்டப்பட்டவர்களை தங்கவைத்தார் சசிகலா. அவர்களை விட்டு உளவுத் துறையின் ரியாக்ஷன்களைக் கேட்டு அறிந்துகொண்டாராம். கேபிடல் ஓட்டலில் தனக்கு நெருக்கமானவர்களை மட்டுமே அனுமதிக்கச் சொல்லி இருக்கிறாராம். அதனால்,. . .

COMMENT(S): 55

அன்பு, எனக்கு தெரிஞ்சி பெங்களூருல 2 அடயார் ஆனந்த பவன் இருக்கு...

கருணாநிதியின் கைக்கூலிகளாகவே பெங்களூர் நீதிமன்றத்தினர் செயல்படுவது போண்று தெரிகிறது...

>>'இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து 20 வருடங்கள் ஆகுது. எல்லாவற்றையும் எப்படி ஞாபகம் வச்சிக்க முடியும்<< 20 வருசத்துக்கு முன்னால நீங்க என்ன 2 வயசு பப்பாவா? இதெல்லாம் ஞாபகம் இல்லாம இருக்கறதுக்கு? 20வருசத்துக்கு முன்னல ஒரு வெள்ளிகிழமை நீங்க என்ன நிறத்தில சேலை கட்டிருந்திங்கன்னு நீதிபதி கேட்கலை. நீங்க சொத்து வாங்கினது எப்படினுதான் கேட்கிறார். ஒரு பெரிய நிகழ்வு நடந்தது கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்லை? இல்ல நிறைய விசயம் பண்ணினதுல மறந்து போச்சா?

>>அங்கு தனக்கு வேண்டப்பட்டவர்களை தங்கவைத்தார் சசிகலா. அவர்களை விட்டு உளவுத் துறையின் ரியாக்ஷன்களைக் கேட்டு அறிந்துகொண்டாராம்<< பார்ரா..... இது எப்படி இருக்கு...

உளவுத்துறைக்கு வேறு வேலையே இல்லையா? அரசுப்பணிகளை விட்டு விட்டு சொந்த வேலைகளை செய்து கொண்டு உள்ளது. சென்ற முறை முக ஆட்ச்சியிலும் இதே மாதிரிதான் செய்தார்கள்.

வினோத் அவர்களுக்கு, ஒரு தவறை செய்துகொண்டே இருந்தால், அது நல்லதா கெட்டதா என்ற குழப்பம் போய், மனசாட்சி மழுங்கிபோகும். குற்றம் செய்பவரை பிடித்துவிட்டால், குற்றம் கண்ணை மறைத்துவிடும். அதிக சொத்து சேர்ப்பின் அஸ்த்திவாரமே ஜெயலலிதாதான். ஆனால், வழக்கில் மாட்டிகொண்டபின், தான் தப்பிக்க வேண்டும் என்பதற்க்கு, தன் தோழியை வீட்டு சிரைபடுத்தி, நீ இப்படித்தான் பதில் சொல்லி என்னை காப்பாற்ற வேண்டும் என்பது துரோகம் நெம்பர் 1. ஒரு நடிகையின் நாடகம் எங்கே புரியப்போகிரது?

செல்வப்ப்ரியா அசையும் சொத்தை அடித்ததும் உங்க கருணா கும்பல் தான். இந்த சசியும் உங்க கருணா கும்பல் தான்... இதை புரிந்துகொள்ளாதவன் மட்டுமே திமுக தொண்டனாக தொடர்ந்துவாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

அடுத்த நாள் நோட்பேட் பார்த்து படிக்கமுடியாது என்பதால், புதன்கிழமை இரவு 11 மணி வரை வழக்கறிஞர்கள் பி.குமாரும், மணிசங்கரும் ஸ்பெஷல் கிளாஸ் எடுத்திருக்கிறார்கள். 'சசிகலாவுக்கே இந்த நிலைமை என்றால் நமக்கெல்லாம் என்ன ஆகுமோ?’ என்று சுதாகரனும் இளவரசியும் மிரண்டு போனார்களாம்.-- இது என்ன அண்ணே நான் 8 ஆவது பாசண்னே நீங்க 10 வது பெயிலுண்ணே நு சொல்ராப்போல இருக்கே

இதைக் கவனித்த நீதிபதி, '313 பிரிவின் படி கோர்ட்டும், குற்றவாளியும்தான் பேச வேண்டும். நீங்கள் இப்படி அடிக்கடி குறுக்கிட்டு கோர்ட்டின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என்று கூறினார்.--- இது மேலே.. ஆனால் ----'இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து 20 வருடங்கள் ஆகுது. எல்லாவற்றையும் எப்படி ஞாபகம் வச்சிக்க முடியும். சில குறிப்புகளைத்தான் எழுதி வச்சிருந்தேன்’ என்று ஆக்ரோஷமாகவே பதில் சொன்னார். இந்தப் பதிலால் மேலும் டென்ஷன் ஆன நீதிபதி, 'குற்றவாளிக் கூண்டில் இருக்கும் நீங்கள் எதுவும் நேரடியாக கூறமுடியாது. உங்கள் வக்கீல் மூலம்தான் பேச வேண்டும்’ என்று சொல்லவும் கோபத்தின் உச்சிக்கே சென்ற சசிகலா, '--- என்ன பொருள் இதற்கு. இந்த நீதிபதியும் லூசா?

உண்மையில் இந்த வழக்கு போகும் போக்கிலேயே தெரிகிறது. சசி மற்றும் ஜெயா எந்த பிரச்சினை இல்லாமல் வெளியேறுவர் என. ஆச்சார்யா அனேகமாக இனி வரமாட்டார். சூப்பராக கம்பி நீட்டிவிட்டார். அவரை பற்றி பத்திரிக்கைகள் தூபம் போட்டது தான் மிச்சம். குற்றவாளியாகவே இருக்கட்டும். அவருக்கு தெரியாத மொழியில் அவரிடம் கேள்வி கேட்டு அதற்கு அவசரமாக பதில் வான்கி அதன் மூலம் தான் இவர்கள் நியாயத்தை நிலைனாட்டவேண்டும் என்பது இந்திய சட்டமா? எனக்கென்னவோ இது அராஜகமாகவே தோன்றுகிறது.

Why so much importance to Sasikala madam and her family? They all are useless to Tamil Nadu and its people.

அம்மா கூட பங்கு பிரிச்சாச்சா தயிரியம் தெரியிது நீதிபதி மிரட்டுர அலௌக்கு சசி சூப்பர்.

ஐயா அன்பு - உமக்கு பெங்களூரு தெரியாதெனில் பேசாமல் இரும். அடையார் ஆனந்தபவன் எனில் அடயாருல மட்டும் தான் இருக்கும் என நினைத்தீரோ?

இது என்ன பரிட்சையா பாக்காம சொல்றதுக்கு. கோர்டுக்கு தேவை பதில். இந்த மாதிரியான பரபரப்பு செய்திகளுக்கு தீனிபோடுவதை விட்டு கோர்ட் விசாரணையை துரிதமாக முடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யனும். அதைவிட்டு பாத்து சொன்னார், பாக்காம சொன்னார்னு சசிகும்பல் மாதிரி பேசுவது கோர்டுக்கு அழகல்ல.

என்ன செய்து என்ன புண்ணியம்!? எப்படி தீர்ப்பு வந்தாலும் மூடிய வீடியோக்கடை திரும்ப திறக்கப்படபோவதில்லை. ஆயிரம் ஆயிரம் கோடிகள் சேர்ந்து சேர்ந்த்து தான். நீயும் நானும் ஒன்னு ஊரார் வாயில் மண். இது ஆண்டியாரின் பாட்டு.

அசையும் சொத்தாகிய 1.76 கோடியை விட தோழியின் அசையும், அசையா, அசைக்கமுடியா போன்ற சொத்துக்கல் இருக்கும்போல் தெரிகிறதே.

இப்படி தன்னை வேவு, உளவுதுறை வழியாக நெருக்கும் ஜெயலலிதாவுக்கு எதிராக, உண்மையை ஏன் சசி சொல்லக்கூடாது. எல்லாம் நான் தான் பொறுப்பு என்று ஏன் மலுப்ப வேண்டும்?

இந்த நிகழ்வுகள் சுப்ரீம் கோர்டுக்கு தெரியுமா? ஏன் இந்த ....களை கைது செய்யாமல் வெளியில் விட்டுவைத்துள்ளார்கள்.

ஆப்பை தேடி உட்கார்ந்துவிட்டது மன்னார்குடி

வருங்கால முதல்வர் அம்மாவை,பகைச்சுக்காதீங்க,ஆமா சொல்லிபுட்டேன்......

சூப்பர். அம்மா வழக்கை அழகாக சசி வழக்கு என்று மாற்ற ஜூவி பிட்டு மேல பிட்டா போடுது.

விகடன் கழுகாருக்கு எனது கேள்வி! சசி, ஜெயா தவறு செய்துள்ளார்கள் என்பது உண்மை. அது சட்டத்தின் முன் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதும் உண்மை. அவர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து தப்பிக்க முயல்கிறார்கள் என்பதும் உண்மை. இருப்பினும் அரசு வக்கீல் ஆச்சார்யா, நீதிபதி மல்லிகார்ஜுனையாகார்கே இந்த வழக்கை எடுத்து செல்லும் விதம் சரியா? அவர்கள் அரசு வக்கீல், நீதிபதி போலவா நடந்துகொள்கிறார்கள்? என்ற ஐயம் ஏற்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கேள்விகள், பல ஆண்டுகளாக தனது ஜுனியர்களுடன் இரவு, பகலாக செலவு செய்து கிடிக்கிபிடி வார்த்தைகளுடன் தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு உடனே பதில் தர வேண்டுமாம். அதாவது கேள்வி கேட்கப்பட்டவுடன் உடனே பதில் தர வேண்டுமாம். சட்ட ரீதியான பதில் தர சசியோ, ஜெயாவோ சட்டம் படிக்கவில்லை. முதலில் கிடிக்கிபிடி கேள்விகளின் அர்த்தங்களை புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் இருபது ஆண்டுகளுக்கு பின்நோக்கி சென்று நினைவு கூர்ந்து உடனே சொல்லவேண்டும் எனில் முடியிற காரியமா? ஜெயா, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு ஆம், இல்லை, நியாபகம் இல்லை என்று உடனே பதில் கூறினார் என்றால் அவருக்கு அரசு பணிகள் அதிகம். ஒரு முதல்வராக அவருக்கு பணி சுமை அதிகம். எனவே நேரமின்மை காரணமாக சுருக்கமான பதிகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால் சசிக்கு நிலைமை அவ்வாறு இல்லை. விரிவான பதிலை தனது வக்கீல்கள் உதவியுடன் பதிவு செய்ய வேண்டிய கடமை உள்ளது. என்னதான் சசி மீது தவறு இருந்தாலும் அவருக்கும் தனது விரிவான பதிலை, விளக்கத்தை பதிவு செய்யவேண்டிய உரிமை உள்ளது. ஜெயா போல் ஆம், இல்லை, தெரியாது என்று கூறினால் இடைப்பட்ட வார்த்தைகளை அரசு வக்கீல் தனக்கு சாதகமாகவும், சசி ஜெயாவுக்கு பாதகமாகவும் எழுதி கொள்ளவோ, நிரப்பி கொள்ளவோ வாய்ப்பு உள்ளது. அப்படி என்றால் மெத்த படித்த அரசு வக்கீலும், நீதிபதியும் தனது கேள்விகளை எழுதி வைக்காமல் கேட்கவேண்டும். கேட்பார்களா? என்ன கேள்வி எங்கிருந்து எப்படி கிடிக்கிபிடிகளுடன் கேட்கவேண்டும் என்பதை முன் கூட்டியே எழுதி வைத்து கேட்கும் போது அதற்கு உண்டான பதிலை நிதானமாக தரவேண்டிய உரிமை குற்றம் சுமதப்பட்ட்வருக்கும் உள்ளது. இது வெறும் கிரிமினல் வழக்கு மட்டும் இல்லை. இந்த வழக்கு மூன்று முறை முதல்வராக இருக்கும் ஒருவர் மீதான வழக்கு. அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நீதிபதி, அரசு வக்கீல் தனது கடமையை உண்மையாகவும் செய்யலாம். அரசியல் ரீதியாக வளைக்கப்பட்டு செய்யாமலும் போகலாம். கருணாநிதி பொய் வழக்கு புனைந்துள்ளார் என்று கூறினால் அரசு வக்கிலுக்கோ, நீதிபதிக்கோ கோபம் வர காரணம் என்ன? உடனே மறுப்பு தெரிவிக்க காரணம் என்ன? அதை ஒரு பதிலாக பதிவு செய்ய வேண்டுமே தவிர கோபம் கொள்வது சரியாக படவில்லை. ஜெயா பின்னால் பிஜேபி உள்ளது என்று ஆச்சார்யா கூறியபோதே அவர் ஒரு கட்சி காரர் போல் செயல்படுகிறார் என்று நினைக்க தோன்றுகிறது. அப்போ ஜெயா பின்னால் பிஜேபி உள்ளது என்றால் ஆச்சார்யா பின்னால் திமுக, காங்கிரஸ் உள்ளது என்று அர்த்தமா? வழக்கு போகும் திசை சரியில்லை. தீர்ப்பு, அரசியல் ரீதியாக முன்னரே எழுதப்பட்ட தீர்ப்பாக கூட இருக்கலாம். இதுவரை நடந்த வாதங்களின், வாக்குமூலங்களின் அடிப்படையில் பார்த்தால் ஜெயாவுக்கு எதிராக தீர்ப்பு வர வாய்ப்புகள் மிக குறைவு. ஜெயாவுக்கு எதுவும் தெரியாது என்று வாக்கு மூலம் தந்த பின்னரும் ஜெயாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அது அரசியல் ரீதியாக வளைக்கப்பட்ட தீர்ப்பாக இருக்குமே தவிர உண்மையான தீர்ப்பாக இருக்காது. நான் கூறுவது சட்டத்தின் அடிப்படையில். ஆனால் "மாரல்" (MORAL ) ரீதியாக பார்த்தால் ஜெயாவும் குற்றவாளிதான் என்பதில் சந்தேகம் இல்லை.

"சசிகலாவுக்கு, அடையார் ஆனந்தபவன் தயிர்சாதம் மதிய உணவாக வந்தது."------> பெங்களூருவில் எப்படி அடையார் ஆனந்தபவன்? நிருபரின் ஏற்பாடோ?

"நீதிபதி, '313 பிரிவின் படி கோர்ட்டும், குற்றவாளியும்தான் பேச வேண்டும். நீங்கள் இப்படி அடிக்கடி குறுக்கிட்டு கோர்ட்டின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என்று கூறினார்."------------> விசாரணை முடியும் முன்பே குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று நீதிபதி அழைக்கலாமா? உள்நோக்கம் கொண்டவராகத் தெரிகிறது. தீர்ப்பை முடிவு செய்த பிறகு வழக்கு விசாரணையை நடத்துகிறாரா? கங்காரு கோர்ட்டா இது?

சசிகலாவுக்கே இந்த கதியா? (?)
நீதிபதியிடமே கோபமா?

  Displaying 1 - 25 of 53
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 07 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook