Latest News
Published on :30-11--0001 06:00 AM
கேள்வி-பதில்
கேள்வி-பதில்பழைய தெய்வப் படங்களை கோயிலில் சேர்க்கலாமா? 'வேதத்தின்படி திருமணம் என்பது பாணிக்ரஹணம் மட்டுமே. அதேபோன்று, திருமண முகூர்த்தமும் பாணிக்ரஹணத்துக்கே அன்றி, தாலி கட்டுவதற்காக அல்ல! காலில் மெட்டி, கையில்  மோதிரம், கழுத்தில் தாலி அனைத்தும் வேதப்படி ஏற்பட்டது அல்ல’ என்கிறார்களே, சரியா? - மாணிக்கவாசகம், மதுரை வேதக் கருத்தையும், அது சொல்லும் பண்பாட்டையும் முற்றிலும் அறியாதவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். வேதம், பண்பாடு என்பதில் பிடிப்பில்லாதவன், அதன் பெருமை பேசப்படுவதைப் பொறுக்க இயலாமல், தாழ்வு மனப்பான்மையை மறைக்க எதிர்வாதத்தைக் கிளப்பி, தற்காலிகமாக நிம்மதி பெறுவான். ஆனால் அந்த நிம்மதி நிலைக்காது. திரும்பத் திரும்ப அந்தப் பணியில் இறங்குவான். தோற்றுப் போனால் அதில் தன்னை இணைத்துக்கொள்வான். பழைய பண்பாட்டைக் கேலி செய்து தாழ்த்துவது என்பது, தன்னை உயர்த்த உதவும் என்று அவனது அறியாமையே பரிந்துரைக்கும். பழைய பண்பாட்டைப் பின்பற்றும்  சிலரது நடைமுறைகளை மூடநம்பிக்கை என்று விளக்கியவர்கள், இன்று அதை நல்ல நம்பிக்கையாக விளக்கம் அளிக் கிறார்கள்.. . .

COMMENT(S): 4

வாசனை மலர்கல் மட்டும் தான் கடவுலுக்கு சாத்த்னுமா. வாசனை இல்லாத போக்கல் மோலம் வழிபடக்கோடாதா?

அய்யா, நீங்கள் சொல்லும் விளக்கம் நன்றாக உள்ளது. ஆனால், அவன் இதனால் இப்படி செய்கிறான், இவன் அதனால் அப்படி செய்கிறான் என்று சொல்லுவதெல்லாம் அதிகபரசங்கிதனம். அவர்கள் எதனால் சொன்னால் உமக்கென்ன?

பின்னம் ஆன வழிபாட்டிற்கு மனம் இடம் தராத படங்களை (பூஜை அறையில் இருப்பின்) அவற்றை வேறொரு அதே சாமியின் புதுப் படத்தையோ விக்ரஹ வடிவத்தையோ வைத்து விட்டு பின்னமானதை நீர் நிலைகளில் விட்டுவிடுவதுதான் உசிதம். மற்றபடி சஞ்சிகைகள், விளம்பரங்களில் வரும் தெய்வப் படங்கள் பூஜை அறையின் புனிதம் அற்றவையாக இருப்பதால் காலில்படாமலோ குப்பையி எறியாமலோ அவற்றை புனிதமான கருத்துடன் வேஸ்ட் பேப்பர் கூடையில் கசக்கிப் போட்டுவிடலாம் மனதுக்கும் குறை இருக்காது

பதில்கள் சிறப்பாக உள்ளன. பாணிக்கிரஹணம் என்பதே வேத அடிப்படை வார்த்தை. பாணி என்றால் உள்ளங்கை என அர்த்தம் பெண்ணின் கையை மணமகன் பற்றுவது என்பது தான் பொருள். நம்முடையதல்லாத பொருளை நாம் தொடுவதில்லை ஆனால் மணமகனுக்கு தாரை வார்த்துக் கொடுத்த வது அவனுக்குப் பூரண சொந்தம் ஆகிறாள். வாழ்வு முழுமையும் கைபற்றிய கணவனை கண்ணாக கருதி அவனது அனைத்து பணிகள்...சுக துக்கங்களில் பங்கேற்கிறாள். எனவே பாணிக் கிரஹணம் மறை வழி சார்ந்த ஒரு உன்னத நிகழ்வு. பெண் வீட்டார் கன்யா தானம் என்றும் ஆண் வீட்டார் பாணிக்கிரஹணம்(செய்வதாய் கல்யாணப்பத்திரிகைகளில் குறிப்பிடுவர். இன்னொன்று.ருக் வேதிகள் பாணி ஹோமம் மட்டும் செய்வர்.அவர்கள் கையில் அக்னி இருப்பதாக ஐதீகம்) கோதண்டபாணி ராமர் தண்டபாணி முருகன் பினாக பாணி சிவன் இவற்றில் தெய்வங்கள் கையில் ஏந்தியுள்ள ஆய்தங்களை குறிப்பிடும் பெயர்ச் சொற்களாகும்.

Displaying 1 - 4 of 4
 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 03 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook