Latest News
Published on :30-11--0001 06:00 AM
என் டைரி - 272
என் டைரி - 272 வாசகிகள் பக்கம்  ஒவ்வொன்றுக்கும் பரிசு: 100 சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்திருந்தார் என் நெருங்கிய தோழியின் கணவர். அவர் என்னிடம் கொட்டிய கண்ணீரை இங்கே எழுத்துக்களாகத் தொகுக்கிறேன் தோழிகளே! ''மேடம்... உங்கள் தோழி, என் தங்கையுடன் போட்டி போட்டுக்கொண்டு குடும்பத்தின் நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாள். என் தங்கை வாழ்க்கைப்பட்ட இடம், வசதியானது. அதனால் அவள் ஆடம்பரமாக இருக்கிறாள். அந்த அடிப்படை புரிதல்கூட இல்லாமல் எல்லாவற்றிலும் அவளுடன் சரிக்குச் சமமாக நிற்க வேண்டும் என்கிறாள் என் மனைவி. காஸ்ட்லி செருப்பு, காஸ்ட்லி சேலை, பியூட்டி பார்லர், ஹேர் கட் என்று என் தங்கையைப் பார்த்து வீம்பாக செலவழிக்கிறாள். என் தங்கை சமீபத்தில் ஒரு ஜோடி தங்க வளையல்கள் வாங்கினாள் என்பதற்காக, இவளும் வட்டிக்குக் கடன் வாங்கி தங்க செயின் வாங்கியதுதான் கொடுமையின் உச்சம். 'தங்கையின் கணவருக்கு தொழிலில் பெரிய வருமானம் வருகிறது. நானோ மாதச் சம்பளக்காரன். புரிந்துகொள்...’. . .

COMMENT(S): 16

அனைத்துப் பெண்களின் வாழ்விலும் ஏற்படும் ஒரு இயல்பான நிகழ்வு, ஏதோ ஒரு மனோவியாதி போல மருத்துவரை அனுகச்சொல்லி சில பின்னூட்டங்களில் பதியப்பட்டுள்ளது..

அப்படியல்ல, அந்த நேரத்தில் அவசியத் தேவை கணவரின் கணிவும், அரவணைப்பும், புரிதலும்தான்..

இது சரியாக அமையாதவர்களுக்குத்தான் கவுன்சலிங் தேவைப்படும். அதுவும் கணவருக்குத்தான் தேவைப்படும்..

-அபுதாலிப் மலேசியா

அவர் தங்கையைப் பற்றி இங்கு குறிப்பிடவே இல்லை..

இந்தப்பிரச்சனைக்கு முக்கிய காரணம் அவர் தங்கை என்றே படுகிறது..

அவர் தங்கைக்கும் அவர் மனைவிக்கும் இடைப்பட்ட உறவை சீராக்கினாலே போதும் பிரச்சனை தன்னால் தீர்ந்துவிடும்.

நியாயமாக அவர் தங்கையை சந்தித்து குமுறியிருக்க வேண்டும். உடனடி நிவாரணம் கிடைத்திருக்கும்.

-அபுதாலிப் மலேசியா

ஏன் சார் ,இது மாதிரி பாதிக்கபட்டவர்கள் எல்லாம்,கூகுலில் எத்தனை பேரால்,தேடி தெரிந்து கொள்ள வசதி இருக்கிறது,மெனோபாஸ் பிரச்சனை என்றால் டாக்டரிடம் போகவேண்டுமா,இல்லையா,அடுத்து குடும்பத்தினரின் ஆதரவு,குறிப்பாக கணவனின் ஆதரவு வேண்டுமா இல்லையா,இதை கூறுங்கள் எதற்கு சார் ,இப்படி கோபம் வருகிறது

சரவணன்,உஷா வின் கருந்துகளை பார்க்கும் போது உங்களின் அறியாமை,இயலாமை நினைத்து சிரிப்புதான் வருது. நீங்கள் இருவருமே கூகுல் தேடலில் மெனோ பாஸ் பற்றி அவசியம் படிக்க்வும் .மற்றவர்களின் கருத்துக்கள் பிடிகலை என்றால் எதிர் கருத்து சொல்லாமல் இருப்பது நாகரீகம் என்று நினைகிரேன்.

வெங்கடேஷ், ஷங்கர் இவர்களின் பதிலை பார்த்தால், சிரிப்பே வருகிறது. ஒருத்தர் என்னடான்னா இந்த பிரச்சனைக்கு டிவர்ஸ் பண்ணைடுங்கங்கறார், இன்னொருத்தர் முதுகெலும்பு இல்லாதவர் என கடிதம் போட்டவரை திட்டுகிறார். இதைட்தான் 'எடுத்தோம்,கவிழ்த்தோம்' என முடிவெடுப்பது என்பார்கள். அந்தம்மா வாங்கிய தங்க செயினை விற்றால் மேலும் பிரச்சனை பெரிதாகுமே தவிர சிறிதாகாது. குழந்தைகள் அட்வைஸ் செய்வதை விட, இந்த அன்பர், மனைவியை வெளியே இரு தினங்கள் அழைத்துச்சென்று அன்பாக பேசி சரி செய்ய முயலலாம். வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியமில்லை என்பதை கஷ்ட்டப்படும் குடும்பங்களைக்காட்டி புரிய வைக்க முயலலாம்.மெனோபாஸாக கூட இருக்கலம், அப்படி இருப்பின் மருத்துவரிடம் அழைத்துச்செல்லலாம்.

திருமதி வேலு,மெனோபாஸ் பிரச்சனை உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்,இந்த பிரச்சனையை சக பெண்களே உணர முடியாமல் இருப்பதுதான் பெரும் சோகம்...அவள் விகடன் இது பற்றி விரிவான கட்டுரை வெளியிட வேண்டும்.......

இந்த பிரச்சனைக்கு மிக சுலபமாக விடை கானலாம்.ஒரு ஹொமியொபதி மருத்துவரிடம் அழைத்துச் சென்ரால் உடனெ சரியாக்கி விடலாம்.

ஐயோ பாவம், நிலைமை சரியாக வாழ்த்துக்கள்!!

அவர் மனைவியை டிவோர்ஸ் பண்ணலாம்.

He needs family intervention meeting (with the kids) and take a stand man. Have some backbone. How was able to get the chain without your help ? If she did, sell it immediately and close the debt. Again, have some backbone.

பொறாமை வந்தால் குடும்ப நிம்மதி பாழ்தான்.கனவனை நெசிக்கும் மனைவி இந்த தவறை செய்ய மாட்டாள்.

இது மெனொ பாஸ் சிம்டம்ஸ் இல்லை. வைத்தெரிசல். கவுன்சிலிங் கூட்டிடு போங்க. எப்படியாவது புருசனை வருத்து எடுகனும். பாவம் !..அவரால் முடிந்தால் உங்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறார்.

இப்படிக்கு
திருமதி.வேலு.

மெனோபாஸ் பிரச்சனை என்றால்,தயவு செய்து பொருமையாகவும் அன்பாகவும்,பேசி டாக்டரிடம் அழைத்து சென்று,குணபடுத்த பாருங்கள்,இந்த பெண்களுக்கான பிரச்சனையை பெரும்பாலான ஆண்களுக்கு எப்படி எதிர் நோக்குவது என்று புரியாமலும்,பொறுமையில்லாமலும்,மிகவும் சிக்கலாக்கி விடுகின்றனர்,இவரின் பிரச்சனை அதுவானால் நீங்களும் உங்க தோழிக்கு உதவலாம்......வாழ்த்துக்கள்...

எனக்கென்னவோ அந்த ஊதாரிப் பெண்ணின் கணவர் தோழியிடம் புலம்பியது சரியாகப் படவில்லை. மூன்றாம் மனிதரிடம் சொல்வதை விட அவளது பெற்றோரிடம் சொல்லிப் புரிய வைத்திருக்கலாம். இல்லாவிட்டால் வெளியூரில் படிக்கும் குழந்தைகளிடம் சொல்லி அம்மாவிடம் பக்குவமாகப் பேசச்சொல்லி இருக்கலாம்.குழந்தைகள் பேச்சுக்கு எப்போதுமே அம்மா மதிப்புக் கொடுப்பாள்.வளர்ந்த குழந்தைகள் தானே.. நிலைமையைப் புரிந்து கொள்வார்கள். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. அவர்கள் அம்மாவிடம் பேசட்டும். அம்மா எப்படி மாறி விடுகிறாள் பாருங்கள்

Displaying 1 - 14 of 14
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 27 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook