Latest News
Published on :30-11--0001 06:00 AM
வலையோசை : கோமாளி

பஞ்சர் 'பஞ்ச்’கள்!

 * தொடமாட்டேன்; தொட்டதை விட மாட்டேன்!

# அதான் மொதல்லயே தொடமாட்டேன் சொல்லிட்டீங்களே. அப்புறம் எதுக்குத் தொட்டதை விட மாட்டேன்னு சொல்றீங்க?

* கூட்டிக் கழிச்சுப் பார் கணக்கு சரியாவரும்!

# ஏன் பெருக்கி வகுத்து பார்த்தா தப்பாவருமா?

* சும்மா அதிருதுல்ல!

# மொபைலை வைப்ரேட்ல வெச்சா அதிராம என்ன பண்ணும்?


கடல் கடந்தவன் வலிகள்...        

ழு மணி ஆச்சு எந்திருடா மூதேவி
என்று அம்மா திட்டுகையில் அழுகை வந்தது,
இப்போதும் வருகிறது
எப்போது அவள் மறுபடியும்
திட்டுவாள் என நினைத்தால்!

 வெளியூர் போறேன் என்றதும் வேண்டாமெனத்
தடுத்த அப்பா மீது கோபம் வந்தது
இப்போதும் வருகிறது அப்போதே இரண்டு அறை
அறைந்து உள்ளூரிலே இரு என்று சொல்லாததால்!

 வருடம் ஒருமுறை வரும் திருவிழாவுக்கு
உண்டியலில் சேர்த்து 200 ரூபாய் கொடுத்தபோது
இருந்த சந்தோஷம்
வெளிநாட்டில் இருந்து 20,000 அனுப்பும்போது கிடைப்பது இல்லை!
சந்தோஷமா இருக்கிறேன் என்கிறோம்
ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்...
அவர்களாவது சந்தோஷமாக இருக்கட்டுமே என்று!


திரைப்பட வரலாறு

* தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த 'கினிடோஸ்கோப்’ திரைப்பட தொழில்நுட்பத்தின் அடிப்படை. பலர் ஒரே நேரத்தில் பார்க்கும் முறையை 1895-ல் கண்டுபிடித்தவர்கள் பிரான்ஸ் நாட்டின் லூமியர் சகோதரர்கள். அவர்கள் எடுத்த ஒரு நிமிடத் திரைப் படங்களை பாரிஸ் நகர ஹோட்டல் ஒன்றில் திரையிட்டனர்!

* இந்தியாவுக்கு வந்த முதல் திரைப்படம், இயேசுவின் வாழ்க்கை. அது 1896-ல் பம்பாயில் திரையிடப்பட்டது!

* இந்தியாவின் முதல் முழு நீளப்படம் 'ராஜா ஹரிச்சந்திரா’.  நீளம் 3,700 அடி!

* தமிழின் முதல் பேசும் படம் 'காளிதாஸ்’!

* 1955-ல் வெளிவந்த 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ தமிழின் முதல் வண்ணப் படம்!

* 1948-ல் வாசன் அவர்கள் 'சந்திரலேகா’ என்ற படத்தை 609 பிரதிகள் எடுத்து உலகம் முழுவதும் திரையிட்டார். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அதிக பிரதிகள் எடுக்கப்பட்ட படம் இதுவே!

* 1954-ல் வெளிவந்த 'அந்த நாள்’ பாடல்களே இல்லாத முதல் தமிழ்ப் படம்!

* 1943-ல் 'அரிச்சந்திரா’ என்ற படத்தை ஏவி.எம். செட்டியார் டப்பிங் செய்ததன் மூலம் தமிழின் முதல் டப்பிங் படத்துக்கு வழிவகுத்தார்!


எஸ்.எம்.எஸ்ஸில் வந்த ஆறு உண்மைகள்!

முதல் உண்மை: உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்து பற்களையும் தொட முடியாது!

இரண்டாவது உண்மை: முதல் உண்மையை படித்து முடித்தவுடனே எல்லாரும் இதனை முயற்சி செய்கிறார்கள்!

மூன்றாவது உண்மை: நீங்க இப்ப சிரிக்கிறீங்க... ஏன்னா, நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால்!

நான்காவது உண்மை: இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கணும்னு நினைக்கிறீங்க!

ஐந்தாவது உண்மை: இப்ப நீங்க இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பப் போறீங்க!

ஆறாவது உண்மை: முதல் உண்மை ஒரு பொய்!  

COMMENT(S): 3

ஆறு உண்மைகள் நிஜமாகவே ஆட்டிப் படைத்தது!

பொய்க்கு ஒரு புராணமா,படா கில்லாடி சாமி நீர்!

interesting

Displaying 1 - 3 of 3
 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

OR
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார்.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
ஆனந்த விகடன்
< 28 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook