Latest News
Published on :30-11--0001 06:00 AM
குட்டீஸ் குறும்பு !
குட்டீஸ் குறும்பு !  ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150 'ஐயே.. பேபி பிரஷ்ஷா?’ அன்று என் மகன் கையால் பல் துலக்கிக் கொண்டிருந்தான். ''ஏம்ப்பா கையால துலக்குற... பிரஷ் என்னாச்சு?'' என்று கேட்டதற்கு, ''தொலைஞ்சுடுச்சும்மா'' என்றான். உடனே, ''குட்டிக்கு, பேபி பிரஷ் வாங்கிக் கொடுத்துருங்க'' என்றேன் கணவரிடம். பாத்ரூமில் இருந்து வேகமாக வந்த என் குட்டி, ''ச்சீ சீ... நான் பேபி பிரஷ்ல துலக்க மாட்டேன். நான் எதுக்கு பேபி யூஸ் பண்ணின பிரஷை யூஸ் பண்ணணும்?'' என்றான் கோபமாக. பக்கத்து வீட்டுப் பாப்பாவின் பெயர் பேபி என்பதுதான், குட்டி சாரின் கோபத்துக்குக் காரணம். அவனின் கோபம் கலந்த அழுகை, காலை டென்ஷனிலும் வீட்டைச் சிரிப்பால் நனைத்தது! - எஸ்.லோகநாயகி, அவ்வையார்பாளையம் கௌபாய்... டாக்பாய்! ஒருநாள் என் மகள், தன் தாத்தாவுடன் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு சுட்டி ஒவ்வொரு சேனலாகத் தாவிக்கொண்டே இருக்க, ''பாப்பு... அந்த கௌபாய். . .

COMMENT(S): 13

Vijayalakshmi thought-s wonderful

that first standard chutti's thought is very nice...but it's too much to send such kids to tuition. parents should understand this.

கற்பனை இல்லாம இல்லைங்க....முதல்ல இருக்கிற பேபி பிரஷ்ஷே கற்பனைதான்...ஏன்...ஏன்...இப்பூடீ....

ஒன்றாம் வகுப்புக் குழந்தைக்கு ட்யூஷனா என்று அங்கலாய்ப்போரே, இன்னும் சற்றுப் பொறுங்கள். 4ம் வகுப்புக் குழந்தைகள் ஐஐடி, ஐஏஎஸ்க்கு ட்யூஷனுக்குப் போகப் போகிறார்கள். எஸ்வி.சேகர் நாடகத்தைப் போல, ஒரு வயதுக் குழந்தை இரு நாட்களில் 20 வயது வாலிபனாக மாற்றப் போகிறார்கள்.

பம்பாய் கல்யாண் பகுதியில் என் நாத்தனார் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு இளம் பெண் இருக்கிறாள். மாலை 4 மணியானால் நண்டும் சிண்டுமாக 10 15 குழந்தைகளை அவர்களது பெற்றோர் கொண்டு இந்தப் பெண்ணிடம் விட்டு விட்டு, ஷாப்பிங், அரட்டை என்று போய் விடுவார்கள். 7 மணி வரை அந்தக் குழந்தைகளை மேய்க்க வேண்டியது இவள் வேலை. பள்ளிக்கூடப் புத்தகங்களை வைத்துக் கொண்டு அவர்களையே படித்துக் கொள்ளச் சொல்வாள். ஹோம் ஒர்க் செய்யச் சொல்வாள்.ஏ, பி, சி, டி, மற்றும் இந்தி எழுத்துக்கள் மட்டும் சொல்லித் தருவாள். இதற்குப் பெயரும் டியூஷன் தான். அதனால் நண்பர்களே ஒன்றாம் வகுப்புக்கு டியூஷனா என்று மூக்கில் விரல் வைக்காதீர்கள். இதெல்லாம் தாய்மார்கள் ஹாயாக மாலை நேரத்தைச் செலவாக்கச் செய்யும் ஏற்பாடாகவே இருக்கும்.

ஒன்றாம் வகுப்புக்கு டியூசன்....இதெப்படி இருக்கு?

நல்லா டூப் விடறீங்க விஜயலட்சுமி...

விரல் விட்டு எண்ணும் குட்டிகள் எப்பொதுமே செய்யும் கலாட்ட இது . என்பேரன் சின்னப்ப கால் விரல்கள் பத்தலைனா பாட்டி ப்ளீஸ் உங்க கையயும் காட்டுங்க என்பான்

திருமதி விஜயலட்சுமி, உங்களுடைய டியூசனை நம்பியே உங்கள் குடும்பம் இருப்பின் சரி. அவ்வாறில்லையெனில் டியூசன் படிக்க வரும் பிஞ்சுகளின் பெற்றோரிடத்தில் இந்த பிஞ்சுகளுக்கு தேவை தனிப்படிப்பல்ல என்பதை தெளிவுபடுத்தி அவர்களின் குழந்தை தனத்தை அவர்கள் அனுபவிக்க உதவுங்கள். விளையட்டு மட்டுமே அறிவாளிகளை உருவாக்க வல்லது. பாவம் குழந்தைகள் எதிர்க்க இயலாத எளியோர்கள். நமது இலக்கை அவர்கள் மீது திணிப்பது, அவர்கள் சிறுவர் எனில் அது வண்முறை, குழந்தை எனில் அது பாவம். உங்களை காயப்படுத்தவேண்டுன இதை எழுதவில்லை வேண்டுகோளாக எழுதுகிறேன்.

Tuition for 1st standard kid??? Too much....

எல்லாம் கொன்ஞம் ஒவெர தான் இருக்கு !!!

இந்த இதழில் தான் நிஜமாகவே குழந்தைகளின் குறும்பு தெரிகிரது.[பெரியவர்களின் கற்பனை கலக்காமல்]

ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு டியூஷனா?

Displaying 1 - 13 of 13
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 10 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவைLogin or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook