Latest News
Published on :30-11--0001 06:00 AM
அன்று,ஏழாம் வகுப்புடன் பிரேக்... இன்று, ஏகப்பட்ட ரெக்கார்ட் பிரேக் !
அன்று,ஏழாம் வகுப்புடன் பிரேக்... இன்று, ஏகப்பட்ட ரெக்கார்ட் பிரேக் ! ''குடும்ப வறுமையாலும், சூழ்நிலையாலும் ஏழாம் வகுப்புடன் என் படிப்பு தடைப்பட்டு நின்றபோது, 'இதுதான் முற்றுப்புள்ளி' என்று நான் சமரசம் ஆகிவிடவில்லை. எட்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் என் படிப்பைத் தொடர்ந்தேன். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பி.ஏ, எம்.ஏ, பி.எட், எம்.ஃபில், பிஹெச்.டி, தையற்கலை, தட்டச்சு, இந்தி என கல்வியில் என் எல்லைகளை விரித்தேன். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என இவை எல்லாம் இப்போது எனக்கான அடையாளங்கள்!'' - முன்னுரையிலேயே ஈர்க்கிறார் வேலூர், விநாயக முதலியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் ருக்மணி பன்னீர்செல்வம்! ''ஆம்பூர்தான் சொந்த ஊர். வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட விவசாயக் குடும்பம். படிப்பு வாசனையே அறியாதவர்கள்தான் தாயும் தந்தையும். மொத்தம் ஏழு பிள்ளைகளில் நான் ஒருத்திதான் தொடக்கப் பள்ளியைத் தாண்டி, உயர்நிலைப். . .

COMMENT(S): 11

லலிதா, 'விதவை' என்ற சொல், 'கணவணை இழந்தவள்' என்ற பொருளை மட்டுமே குறிக்கிறது. அதனால் விதவைகளை புறக்கணிப்பதும், அவர்கள் மனம் நோகும் செயல்களையும் வெறுத்து ஒதுக்க வேண்டுமே தவிர,'விதவை' என்ற சொல்லை அல்ல.

a very good and inspiring article

விதவை த்தாயார் என்ரு சொல்லிருக்கவேன்டாம். மனைவி இழந்தவனு க்கு ஒரு பெயரும் இல்லியே பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த பெயர் தரணும் மனதில் உருத்துதே
உங்க பட்டங்கள் கண்டு வியந்தேன்

லலிதா. மனைவிய இழந்தவனுக்கு தமிழில் தபுதாரன் என்ற ஒரு வார்த்தை உள்ளது.

வாழ்துக்கள்...

Hats off Rukmani madam

ருக்மணி டீச்சருக்குத் தலை வணங்குகிறேன்.. அவர் திருமணம் செய்து கொண்ட முறை என்னை ஆச்சரியத்தில் மட்டுமல்ல,நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தி விட்டது. அவரது வெற்றிக்குப் பின்புலமாக நிற்கும் திரு பன்னீர் செல்வத்திற்கும் வாழ்த்துக்கள்.

இவருக்கு உறுதுணையாக இருந்த இவரது சகோதரன் பாராட்டுக்குரியவர்,இந்த உயரம் இவரது,ஆர்வம்,முயற்சிக்கு கிடைத்த வெற்றி,இறுதி பாரா இவரது சிறப்பை கூறுகிறது....வாழ்த்துக்கள் ருக்மணி....

கல்வி கரையில கற்பவர் நாள் சில!, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!! கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு!!! இன்னும் என்ன சொல்லலாம், ருக்மணி டீச்சர்தான் சொல்லவேண்டும்!

Displaying 1 - 10 of 10
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 10 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவைLogin or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook