Latest News
Published on :30-11--0001 06:00 AM
ஜோக்ஸ்
ஜோக்ஸ். . .

COMMENT(S): 4

வீடு வரை உறவு,வீதி வரை மனைவி*** இது வாலி எழுதிய பாட்டு.

பாசவலை படத்தில் வரும் "இதுதான் உலகமா.." பாட்டுக்கு எனது கொள்ளு தாத்தா சேத்தூர் ஜமீன் சேவுக பாண்டிய தேவர் அவர்கள் கஞ்சிரா வாசித்ததாக திரு.G .N . பாலகிருஷ்ணன் (திரு.GNB அவர்களின் சகோதரர்) வழியாக கேள்விபட்டேன். இது உண்மைதானா? திரு. M.S.V அவர்கள் உறுதி செய்வாரா?

உன்னை ஒன்று கேட்பேன் கருவிகள் இல்லாத தாலாட்டு ஒவ்வொரு இரவும் நான் வாழ்வது உங்களோடு தான் ஐயா.........................

"கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்குத் தாளம் போடலாம்!''’ என்ற பாடல் தங்க சுரங்கம் என்ற படத்தில் வருகிறது என நினைவு..

அசோகருக்கு அது அழிவு


கேட்டவர் எல்லாம் - படம் தங்கை

அசோகனும் சந்திரபாபுவும் முழு நேரக் குடிகாரர்கள். பாபுவுக்கு வாய்க்கொழுப்பும் அதிகம்! தன் வினை தன்னை சுட்டது!

நம்ம எல்லாரும் அடிச்சுக்காம ஒத்துமையா பதில் சொல்றது இதுக்கு தான் போல. வாழ்க நமது இசை சக்கரவர்த்தி . இன்னுரத்தர் இருக்கார் தான் மட்டுமே இசையை வாழ வைப்பதற்காகவே பிறந்தாற்போல் பேசுவார். அவர் இந்த இசை மேதையிடமிருந்து அடக்கத்தை கற்று கொள்ளட்டும்.

இதுவரை வெளியான விகடன் மேடையில், என்னை மிகவும் கவர்ந்தவர் MSV .


எல்லா பதிலும் அடிமனதில் இருந்து உண்மையாக வருவதால் ஒரு நெருக்கம்

உண்டாகிறது.


MSV அவர்களின் " உள்ளத்தில் நல்ல உள்ளம்" ( கர்ணன்) மற்றும்

காதலின் பொன்வீனையில் ( பூக்காரி)- பாடல்களுக்கு நான் அடிமை.,

இளையராஜா கூட அவருடைய குருநாதர் ஜி.கே. வேங்கடடேஷை சாகும் வரை அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வணங்கினார் என்பது நிஜம்.

பழுத்த மரத்திற்கு கல்லடி அதிகம் என்பது போல, இவ்விடம் புரட்சிதலைவரையும், இசைஞானியையும் சிலர் குறை கூறுகிறார்கள்... நிறைகுடங்களை குறை கூறுவதால், கூறுபவர்களின் தரமே தாழ்கிறது என்பது அடியேனின் ஆழமான கருது...

தன்னடக்கமே வாழ்வில் மிக உயர்வை தரும் என்பதற்கு மெல்லிசை மன்னரின் வாழ்வே பெரிய உதாரணம்.... மெல்லிசை மன்னர் மென்மேலும் நோய் நொடி இல்லாது நூறாண்டுகள் வாழ்ந்து இசையுலகை அருள வேண்டும் ....

பாட்டுக்கோட்டையின் நிரந்தர அரசன் என்றால் அது பட்டுக்கோட்டை கலியானசுந்தரனாரையே சேரும்.... அதிலும் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு:

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் -
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி -
நாம் ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் ‍

பொதுநலம் பேசும் புண்யவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம் ;
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் -
அந்தப் பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்.

கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கதைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருதவேண்டியதை மறந்தாச்சு - பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு ;
கையாலே முன்னேற்றம் கண்டாகணும் .

நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடியாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க

படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
இன்னும்- பொம்பளைங்க ஆம்பளைங்க
அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும்.

என்னவொரு சத்தியமான வரிகள்... தாயால் பிறந்தேன், தமிழால் வளர்ந்தேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்ன வீர கவிஞன் பட்டுக்கோட்டையார் இன்றும் தமிழாய் நம்மோடு வாழ்கிறார்....

கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், மருதகாசி, உடுமலையார், இப்படி கவிஞர்கள் இருந்த காலத்தில் இசையமைப்பாளர்கள் அவர்கள் கவிதை வரிகளை மிகவும் நம்பி பாடல்களை அமைப்பதும் இயக்குனர்கள் கதை சொல்வதற்கு பாடல் வரிகளை நம்பியதும் இருந்தன. ஆனால் இது கண்ணதாசனுக்கு பின் வந்த "பாடல் ஆசிரியர்களுக்கும்" பொருந்தாது, ஸ்ரீதருக்கு பின் வந்த இயக்குனர்களுக்கும் பொருந்தாது. எனவே இன்று இசை அமைப்பாளரே பாடல் ஆசிரியரை உருவாக்குகிறார். அதை சொல்வதில் எந்த ஆணவமும் கிடையாது.

கேம் விளையாடினாராமே? இரண்டு சொற்கள்ளூமே ஒன்றூதான்.

இந்த அம்மா மட்டும் என்னா வாழுது? இவரை எதிர்த்த அனைவருமே இன்று படாத பாடு படுவதிக் காண முடியவில்லையா? தான் மட்டும் வாய்தா வாங்கியே வழக்கை இழுத்தடிப்பாராம். மற்றவர்களை பதவியில் இருந்து இறங்குமுன்பே தண்டனை வாங்கித்தர என்னமா துடிக்கிறார்? அதே எம்.ஜி.ஆரின் கொடூர புத்தி!

Vikatan,

Please continue this question

எம்.ஜி.ஆர், . யாரை, எதுக்காக பிடிக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. அவரால் சினிமா உ;லகில் அழிந்தவர் அதிகம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

எவ்ளோ காலமானாலும் கன்னதாசன் பாடல்கள் சிரஞ்ஜிவியாவே இருக்கும்

இவர் முன்னணியில் இருந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்த, இவரை நன்றாக தெரிந்த கருணாநிதியோ, எம்ஜிஆரோ பத்ம விருதுக்கு இவர் பெயரை பரிந்துரை செய்யாமல் விட்டது வருத்தப்பட வைக்கிறது.

I hope Ilayaraja reads this article!

'வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ’
கண்ணதாசன்.
அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே
விழிமெத்திய மாதரும் வீதிமட்டே
உருகிஉருகி கைதலமேந்திய
மைந்தரும் காடுமட்டே
கச்சிஏகம்பனனே பற்றி ஒழுகுமே
என் இருவினைபயனே

பட்டினதாரோ ,பத்திரகிரியாரோ

ஆக கடைசிவரை நமது பாவ புண்யம்தான் என புரிகிறது

இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் கொண்ட சமூகப் பிரிவினராக இருந்தால் அந்த எட்டடி கூட சொந்தமில்லை. அவர் எரிக்கப்பட்ட இடத்தில் சில நாட்கள் கழித்து இன்னொருவர் எரிக்கப்படுவார்.

எவ்வளவு தன்னடக்கமான பதில்கள். உங்க மேல இருக்கும் மரியாதை உயர்ந்து கொண்டே போகிறது!

அசோகருக்கு அது குறும்பு இல்லை !! அவர் பரம ஏழை ஆகி விட்டார்

தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்’.....
மனிதன் உள்ளவரை சிந்திக்க வேண்டிய உண்மையான வரிகள்...

Displaying 1 - 4 of 4
 
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 28 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook