Latest News
Published on :30-11--0001 06:00 AM
கொஸ்டீன் ஹவர்
கொஸ்டீன் ஹவர் ''என் அண்ணனின் மகள், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். சிறுவயதிலிருந்தே அவள் அத்தனை புத்திசாலி, சமர்த்து. ஒவ்வொரு விஷயத்தையும் அவள் அணுகும், அலசும், முடிவெடுக்கும் விதத்தில் பலமுறை எங்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறாள். எனவே, அவள் விஷயத்தில் நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை. இந்நிலையில், 'என்னுடன் படிக்கும் ஒரு மாணவனை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். அவனையே திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று சமீபத்தில் மிகச்சாதாரணமாக சொல்லிவிட்டு, வழக்கமான படிப்பில் அவள் பிஸியாக... குடும்பமோ கலங்கிப் போயிருக்கிறது. அவளது பிரியத்துக்குரிய அத்தையான என்னிடம் பிரச்னையை ஹேண்டில் செய்யும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். ஒளிவுமறைவில்லாத 14 வயது இன்டலக்சுவல் சிறுமி, 'காதல்' என்ற பெயரில் எடுத்திருக்கும்  முடிவை எப்படி மாற்ற முடியும்?'' என்று ஓசூரைச் சேர்ந்த வாசகி ஒருவர் பதற்றத்துடன் கேட்டிருக்கிறார். இவருக்கு அக்கறையுடன் வழிகாட்டுகிறார் திருச்சியில் பெற்றோர் - மாணவர் - ஆசிரியர் நல்லுறவுக்காக செயல்படும் 'பேரன்ட்ஸ் டிரஸ்ட்’ அமைப்பின் மேலாண். . .

COMMENT(S): 17

சரவணன்,
உஷாவின் கருத்தும், என் கருத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான், பெற்றோர் குழந்தைகளிடம் கனிவான அனுகுமுறையில் பழகவேண்டும். அதையும் மீறினால் அடி பிண்ணிடவேண்டியதுதான். ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது... இங்கு பிரச்னை அடியைப்பற்றியது அல்ல. புரிந்துணர்வு பற்றியது... அதாவது தும்பை விட்டுவிட்டு இப்பொழுது வாலைப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்... நீங்களே சொல்லுங்கள், மயிலே, மயிலேன்னா இறகு போடுமா?... ஒரு பொறுப்பான பெற்றோர் ஸ்தானத்திலிருந்து இப்பிரச்னையைப்பாருங்கள், புரியும்...

இது புரியவில்லை. ஏன் ஒரு புத்திசாலி பெண்ணின் மீது உங்கள் முறைகளை திணிக்க வேண்டும். இந்த வன்முறையை - குடும்பம், கெளரவம் என்ற எமொஷனல் பிளாக்மெயிலை - என்று நிறுத்த போகிறார்கள். பல சிறார்கள் வழி தவற பெற்றோரே காரணம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது இது வயசு கோளாறு என்று காரணம் காட்டுவதும் தவறே. இவர்கள் எந்த கணிப்பின் மூலம் அந்த பெண்ணின் முடிவு தவறானது என்று முடிவெடுக்கிறார்கள். எதுவாக இருப்பினும் நாளை தன் வாழ்க்கையை வாழ போவது அந்த பெண். எத்தனை திருமணங்கள் - தாய் தந்தையரால் நிச்சயக்கிப்பட்டு - வெறும் -Marriage of Convenience - ஆக இருக்கிறது. அந்த திருமணத்திற்குள் அன்பை தேட manam விழைகிறது. வெறும் பிள்ளைகள் பெறவும், சந்ததியை வளர்க்கவும் (கொச்சையாக சொன்னால் உரிமம் பெற்ற உறவிற்காகவும்) பயன்படும் ஒரு சடங்காகவே marriage இருக்கிறதே! தவறோ சரியோ அவர்கள் தம் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க ஒரு வழி அமையுங்களேன் - அதுவும் மிக புத்திசாலி என்று உங்களால் புகழப்படும் பெண் வேறு. அவர் மீது,அவரின் புத்திசாலிதனத்தின் மீது நம்பிக்கை வையுங்களேன். வாழ்க்கை என்பது பணம் ஒன்றை மட்டுமே பிரதானமாக கொண்டது அல்ல. And I say this as a parent. You want them to make good decisions not your decisions. Most Indian parents live their dreams through their children thus making them miserable.

என்ன இது பைத்தியக்காரத்தனம்?... 14 வயது 'சிறுமி' முடிவெடுக்கிறாளாம், அதற்கு பெற்றோர்களும், உறவினர்களும் குழம்புகிறார்களாம்... கேள்வியும் பேத்தல், பதிலும் பேத்தல்... முதலில் நாலு சாத்து சாத்தி கண்ணீர்விட்டு அழவையுங்கள்... பிறகு எல்லாம் நல்லபடியாக நடக்கும்... இங்கு பிரச்னை வீட்டிலுள்ள எல்லோரும் நவக்கிரகங்கள் போல் இருப்பார்கள் என நினைக்கிறேன்... அதை மற்றினால் ஓரளவு சரியாகிவிடும்... இல்லையெனில் அடி பிண்ணிடவேண்டியதுதான்... (வாசக, வாசகிகள் தவறாக நினைக்கவேண்டாம்)... சில விஷயங்கள் பேப்பரில் படிப்பது நடைமுறைக்கு ஒத்துவராது...

இந்த பெண்ணிடம்,பெற்றோர்களின் நெருக்கம் குறைவு போல் தெரிகிறது,முதலில் அதை சரி செய்ய வேண்டும்,பொதுவாக பெற்றோர்களிடம் நட்பாக இருக்கும்,குழந்தைகள்,இன்னும் தெளிவாக இருப்பார்கள்,நம் நாட்டில் டீன் ஏஜ் குழந்தைகளிடம் பெற்றோர்களின் அன்பான அனுகுமுறை குறைவுதான் .....

அசோகன் ,சிங்கப்பூர்.. "அடி பின்னிவிட வேண்டியது தான்' என்று சொல்லிவிட்டு , நீங்களே தப்பாக நினைத்துவிட வேண்டாம் என்றும் சொல்லியுள்ளீர்கள். உங்களுக்கே நீங்கள் சொல்வது சரியென்று படவில்லை. வளர்ந்த குழந்தையை அடிப்பது மிகவும் தவறு. அதுவும் 14 வயது பெண்ணை அடிப்பதா? அந்தப்பெண்ணுக்கு உஷா அக்கா சொல்வது போல் , நல்ல புத்திசாலி பெண்ணாயிருந்தால் கேட்டுக்கொள்வாள். அடித்தால் வீட்டை விட்டு ஓடி விட்டால் என்றால்..? டீனேஜ் குழந்தைகளை அந்த காலம் போல் அடித்து வளர்க்க முடியாது. இப்பொதெல்லாம் சகலமும் தெரிகிறது குழந்தகளுக்கு. கத்தி மேல் நடப்பது போன்று கவனமுடன் கையாள வேண்டும்.

the same thing i had from my daughter. she is also a good student. I explained that this feeling will come in this age. you continue your studies. After you finish your studies, if you have the same love with that boy, then we will think. she agreed and concentrate on her studies. I never scold her. positive approach will never fails. if i get angry, then she will do anything without my knowlege.

திரு வெங்கி, ஆரும் அந்தப்பெண்ணை கட்டாயப்படுத்தவில்லை...அவள் புத்திசாலி என்பதால் "அவள் விஷயத்தில் நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை" இதுதான் குடும்பத்தினரின் நிலைப்பாடு...அதனால்தான் அவரின் அத்தையும் தாம் தூம் என குதிக்காமல் நிபுனர்களிடம் ஆலோசனை கேட்கிறார்... நீங்கள் சொல்லுங்கள், 14 வயதில், தமிழ் நாட்டு சமூக சூழலில் வாழும் ஒரு பெண், திருமணம் பற்றி முடிவு எடுக்கும் அளவுக்கு பக்குவம் பெற்றவளா? நமது ஊடகங்களால் உந்தப்பட்டு, அந்த வயதிற்க்கே உரிய இனக்கவர்ச்சியினால் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லையா? ஒரு வேளை அந்தப்பெண் வயதிற்க்கு மீறிய பக்குவம் பெற்று இந்த முடிவை நன்கு யோசித்தே எடுத்திருப்பாளானால், திருமண வயது வரை (குறைந்தது 21 வயது வரை) இந்தக்காதல் சற்றும் குறையாமல் இருந்தால் தாராளாமாக அவளது காதலனையே மணந்து கொள்ளட்டும்; அதைத்தான் ஜெயந்திராணி அவர்களும் கூறுகிறார்...

கேள்வியே முழுமையாக இல்லை. பதிலும் முழுமையாக இல்லை. முதலில் அந்த பெண்ணை எல்லோர் முன்னிலும் 'மிகுந்த புத்திசாலி, அறிவாளி' என்று அதிகமாக பாராட்டிய பெற்றோரே காரணம். அந்த சுபீரியாரிடி காம்ப்ளக்ஸ் தான் இப்பொழுது, அந்த பெண்ணை அப்படி பேச வைத்துள்ளது.

She told her thoughts openly and started concentrating on her studies... why are you holding on to it? Its a time of hormonal reaction or personal interest for that guy... it may develop or not. Leave it like that, dont pester or have a police eye on her. Give her a advice that its ok but need to make her studies and foundation stronger. She will be ok!

Venky's idea is not right. The hormones at 9th std are crazy and the individual decisions taken at that age are not right, esp about the life partner. I don't think that stero typing Indian parents is right. A lot of my friends had intercaste interstate marraiges with their parents approval.

உனக்கான திருமண வயது 21 வரை படிப்பிலும் வாழ்க்கை முன்னேற்றத்திலும் கவனம் செலுத்து, தகுந்த வயதில் திருமணம் பற்றிச் சிந்திக்கலாம் என்று அறிவுரை கூறுங்கள். பக்குவமடைந்த அந்த வயதிலும் இருவரும் ஒருமித்த கருத்தில் இருப்பார்களேயானால் எந்த மறுப்பும் தெரிவிக்க மாட்டோம் என்று உறுதி கூறுங்கள். மதிப் பெண்தான் எனவே புரிந்து கொள்வாள்!!

Mr Venky no body says here taking decision of own is wrong. It should be taken at right time. if you are a married person, definitely u would have not posted such comments

Displaying 1 - 12 of 12
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 10 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவைLogin or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook