Latest News
Published on :30-11--0001 06:00 AM
கறுப்பு...சிவப்பு... யுத்தம் !
கறுப்பு...சிவப்பு... யுத்தம் ! ''பெண் குழந்தை பிறந்திருக்காமே..?! கறுப்பா இருக்கா, இல்ல அவ அம்மா மாதிரி சிவப்பா இருக்கா..?!'’, ''நேத்து பொண்ணு பார்த்துட்டு வந்தீங்களே... பொண்ணு கறுப்பா, சிவப்பா?'’, ''ரோட்ல நடந்து வரும்போது ஒரு பொண்ணப் பார்த்தேன். என்ன கலரு தெரியுமா?’' - இப்படி நிறம் குறித்த எண்ணங்களை இந்தச் சமூகம் 21-ம் நூற்றாண்டிலும் சுமந்து கொண்டுதான் இருக்கிறது. 'கறுப்பாக இருப்பது கொஞ்சம் அவமானம் தரும் விஷயம்தான்' என்கிற தவறான பொதுப் புரிதல், மெள்ள மெள்ள சமூகத்துக்குள் நுழைந்து, இன்று பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. அதனால்தான் இன்று தெருவுக்கு இரண்டு, மூன்று அழகு நிலையங்கள் முளைத்துக் கொண்டு இருக்கின்றன. கறுப்பாக இருப்பது தகுதிக் குறைவான விஷயமா? சிவப்பு நிறம் போற்றுதலுக்கு உரியதா? இந்தச் சிந் தனை சரியானதா? என்கிற கேள்விகளை கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், இளைஞர்கள் என சாம்பிளாக சிலரிடம் கேட்டோம். ''சிவப்பு நிறத்துக்கு ஸ்பெஷல் அட்டென்ஷன் கிடைக்குதுங்கறது உண்மைதான். இல்லைனு. . .

COMMENT(S): 46

கருப்போ சிவப்போ உள்ளம் வெள்ளையா இருக்கணும் நான் பார்த்தவரை வெள்ளை பெண்கள் அனேகமா கர்வம்]அதிகம் உள்ளவங்களே காருப்பு நிரம் கொன்டவங்க தாழ்வுமனப்பான்மை மிக்கவர்கள். மானிரம் உல்லவங்க டேக்கிட் ஈசி ரகம் . கொடுமை என்னான்னா சிவந்த நிரம் படைச்சவங்க தம் பிள்ளைங்களூம் சிவப்புதோலுக்குத்தான் மயங்கணும்னு எதிர்பார்க்கிராக

அனு, அம்பையின் "அம்மா ஒரு கொலை செய்தாள்" அழியாச்சுடர்கள் (azhiyasudargal) என்ற ப்ளாக்ஸ்பாட்டில் இருக்கிறது.

இவர்களில் ராது என்ற மாணவி மாத்திரமே உண்மை பேசியுள்ளார். சிவப்பு வெள்ளை தோலுக்கு கூடிய மவுசு 'தெற்காசியா'வில் இருக்காவிட்டால், முப்பதினாயிரம் வெள்ளையர், எப்படி முப்பது கோடி 'தெற்காசியர்'களை 200 வருடங்கள் கட்டியாண்டார்கள்? இந்திரா காந்தியி விதவை மருமகள்களில் எவர் பிரதமரை விடவும் அதிகாரம் பெற்றிருக்கிறார்? பிறவி இந்தியரான மேனகாவா?

நிறம், சூழ்நிலையோடு மாறக்கூடியது. நம்மவர்கள் வெளிநாட்டிற்கு போய்வந்தால் சிறிது நிறம் மாறி வருவார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை. அவர்கள் கருப்பதற்காக வெயிலில் காய்கிறார்கள்.

ரேணுகா, சுஜாதாவின் அந்த அற்புதமான கதை "ஒரு சிக்கலிலாத காதல் கதை" என்ற தலைப்பில் "பாதி ராஜ்ஜியம்" என்ற கதைத் தொகுப்பில் உள்ளது.

கறுப்பு, சிவப்பு என்றாலே அம்பையின் "அம்மா ஒரு கொலை செய்தாள்" கதையை நினைக்காமல் இருக்க முடியாது. சுஜாதாவும் இது பற்றி ஒரு 'சுருக்' கதை எழுதியிருக்கிறார். அழகான, நிச்சயமாக சிவப்பாக, பெண் ஒருத்தி; அவள் தோழி கொஞ்சம் கறுப்பாக, சாதாரணமான அழகுடன். முதலாமவளிடம் ஜொள்ளு பார்ட்டிகள் பலரும் காரணமின்றிப் பல்லிலளிக்க (அதில் அவளுக்குப் பெருமை!), அவள் தோழியோ பெரிதும் தனிமையில் இருக்கிறாள். இலக்கியம், கல்வி என்று எல்லா ஆர்வமும் இருந்தும் "எனக்கும் ராஜகுமாரன் ஒருவன் வருவானா?" என்று ஏங்குகிறாள். ஒருநாள் ராஜகுமாரன் வந்தே விடுகிறான் -அவளிடம் பழகுகிறான்; விருப்பங்களைப் பகிர்ந்து கொள்கிறான்; இலக்கியம் பேசுகிறான்; இவள் கொஞ்சம் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கும் போது, முதலாமவள் தனக்கு அதே ராஜகுமாரன் எழுதிய கடிதத்தைக் காட்டுகிறாள்: "ஏன் என்னைக் கண்டுகொள்வதே இல்லை? நான் உன் தோழியுடன் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருப்பதே உன் தரிசனம் கிடைக்காதா என்றுதான்....." என்று போகிறது, அந்தக் கடிதம்!

சரியோ, தவறோ, இன்றைய தேதிக்கு, சிவப்புக்கு கொஞ்சம் மார்க் அதிகம் தான். ஆனால இந்த எண்ணமே நம்மில் பலரின் கர்வத்திற்கும் ஆணவத்திற்கும் காரணமாக மாறிவிடுவது, அதன் வீக்னஸ். மற்றபடி, கறுப்பை வெள்ளையாக மாற்றுவது, இந்த நூற்றாண்டின் மகத்தான மோசடி. க்ரீம்கள் யு.வி. கதிர்களிலிருந்து தோலைப் பாதுகாத்து, மேலும் கறுப்பாக மாற்றாமல் பாதுகாக்கும்; அவ்வளவே.

இடியாடிக் ஆர்டிகிள். இதைப்படிக்கும் நேரம் வேஸ்ட்.

Radhu... hi sun shine...! how're you?

விகடன் மற்ற ஊடகங்களையெல்லாம் பார்ப்பதில்லையா? ஒரு பிரபல தொலைக்காட்சியில் எடுத்த சர்வேயில் இப்போதெல்லாம் பசங்களுக்கு மானிறமான பெண்கள்தான் பிடிக்கிறது என்பதுதான் முடிவு. நீங்க என்னடானா 1947-இல் வந்த கதைகளை பிரசுரம் செய்கிறீர்கள். சிறிது கண்ணைத் திறந்து வெளி உலகத்தைப் பாருங்கள்.

Beauty is in the eye of the beholder.... There are lot black americans who are beautiful and there are lot of shitty looking white people in UK US. Beautiful people around the world (Iam a male and hence Iam more likely to list only ladies)
Radhika (Tamil actress)
Silk Smitha (Tamil actress)
Naomi Cambell (US Model)
Nandita Das (Bengali Actress)
Kajol (Hindi Actress)
Priya Mani (Tamil actress)
There is a huge research which basically says that opposite sex people look at the face cut, distance between each point in face, lips size etc rather than colour of a person....

சொல்வதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் கறுப்பு என்பது ஒரு வகை முட்டுக்கட்டையே - பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான். பெண்களும் கறுப்பான ஆண்களை, அவர்கள் கட்டுமஸ்தாக இருந்தாலும் நிராகரிக்கிறார்களே! அது மட்டுமல்ல இன்றைய் நவீன உலகில் ஆடை பாதி, ஆள் பாதி என்பதுடன் அந்த ஆள் பார்க்கிற மாதிரியும் இருக்க வேண்டும். இல்லை எனில் பல விதங்களில் அது ஒரு மறைமுக தடையாக (நேராக சொன்னால் நிறுவனங்கள் பல விதமான வழக்குகளை சந்திக்க நேரிடும்) இருக்கும். படித்தால் மட்டும் போதாது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி இல்லை என்பவர்கள் - பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டது - போன்றவர்கள். பிடிவாதமாக உண்மையை ஏற்க மறுப்பவர்கள். இது நிதர்சனம் -தவறோ சரியோ!

இதே வெற்றிமாறனின் சினிமா உலகில் ஏன் தம்ன்னா, ஹன்சிகா, டாப்ஸி என்ற வெள்ளை தோல் அழகிகளின் வளர்ச்சி அதி விரைவாக ஏற்படுகிறது. அதற்கு நிகராக ஒரு சாதரண மாநிற, கறுப்பு பெண்ணை காட்ட சொல்லுங்கள் - முடியாதே?

பர்வீனா சொல்லுவதும் வாதமே, நிஜ வாழ்வில் கறுப்பு ஒரு தடைகல்லே - இல்லை எனில் இத்தனை க்ரீம்கள் வியாபாரம் இந்த அளவு இருக்காது.

இல்லத்தரசி சொல்வது திருமணத்திற்கு பின் - ஆனால் பெண் பார்க்கும் படலமே கலரில்தானே தோற்று போகிறது.

இதற்கு நிவாரணம் உண்டா - கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். பிரித்து பார்க்க நிறம் இல்லை எனில் வேறு ஒன்று காரணமாகும். குண்டாக இருப்பது அழகாக அன்று காணப்பட்டது - சாவித்திரி போன்றவர்கள் - ஏன் குஷ்பு, ஜோதிகா கூடத்தான். ஆனால் இன்றோ சைஸ் ஜீரோ தான் ஆளுகிறது. அது போல அடுத்த தலைமுறையினர் இந்த தோல் நிறத்தை நிராகரித்து அழகை, ஈர்ப்பை வேறு விதமாக உணரலாம்.

விகடன் மற்ற ஊடகங்களையெல்லாம் பார்ப்பதில்லையா? ஒரு பிரபல தொலைக்காட்சியில் எடுத்த சர்வேயில் இப்போதெல்லாம் பசங்களுக்கு மானிறமான பெண்கள்தான் பிடிக்கிறது என்பதுதான் முடிவு. நீங்க என்னடானா 1947-இல் வந்த கதைகளை பிரசுரம் செய்கிறீர்கள். சிறிது கண்ணைத் திறந்து வெளி உலகத்தைப் பாருங்கள்.

சார் இது இந்த கால பிரச்சனையில்லை தொன்றுதொட்டு உள்ள நோய்.... கன்னடத்தில் புரந்தரதாஸரே கறுப்புக்கு ஆதரவாக பக்தி பாடல் பாடியிருக்கிறார் (கி பி 1400 ல்) அதன் இன்ஸ்பிரேஷந்தான் கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை....

வெள்ளையாக, சிவப்பாக இருப்பவர்களில் நிறைய பேர் அசிங்கமாகவும் இருக்கின்றார்கள். கருப்பாக இருப்பவர்களில் நிறைய பேர் மிகவும் அழகாகவும் இருக்கின்றார்கள். நிறத்திற்கும், ஆங்கில மொழி பேசுவோர்க்கும் (ரெம்ப அறிவாம் ;-) ) நம் தமிழ் நாட்டவர்கள் கொடுக்கும் மரியாதை ரெம்பவே அதிகம். இந்த மடமை என்று போகுமோ?

you know what i am in china even chinese girls here use fairness cream. Fairness is not only a problem in Indian its world wide

அழகிப்போட்டிகலில் கருப்பா 2 பேரை ஜெயிக்க வைத்தால் இந்த கட்டுரை எழுதிய முழு பயனும் கிடைக்க்கும்..

இத்தனை பேர் கிட்ட கருத்து கேட்டுட்டு, ராது படத்தை மட்டும் ஏன் பெரிசா போட்டீங்க? அதே போல், வாசகர்கள் முன் பக்கத்தில் சின்னதா இருந்த சேரன் படத்தை பாத்திட்டா இதைப் படிக்க வந்தீங்க? கட்டுரையின் முடிவுரை இதிலேயே இருக்கிறதே?

கறுப்பான அழகிகள் வரலாற்றில் அநேகம்.முக்கியம், புன்னகை...பளீர் வெ ண்முத்துப் பற்கள் இவற்றுடன் ஃபோட்டோஜேனிக் ஃபேஸ் இருந்தால் மற்ற வசீகர்ங்களும் கறுப்போ சிவப்போ யாருக்கும் தானே அமையும். (பசுக்களில் சிறந்தது கறுப்பான காராம் பசு தான்)கண்ணனின் நிறம் கருமை.

ரிசென்டா அமெரிகன் நியுஸில் ஆசியாவில் இருந்து வரும் ஃபர்னெஸ் க்ரிம்கலில் மெர்குரியின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிரது என சொன்னார்கள். மெர்குரி முளையை பாதிக்கும் எனவும் சொன்னார்கள்.

வெள்ளை வேண்டுமானாலும் அழகாயிருக்கலாம். ஆனால் கறுப்புதான் கவர்ச்சி. மாநிறம்தான் மந்தகாசம். தற்போதுள்ள மிஸ் யுனிவர்ஸான அங்கோலா தேசத்து அழகியினை பாருங்கள். ஆனால் வியாரமயமாக்கப்பட்ட விளம்பர உலகில் இன்னமும் அசிங்கமான வெள்ளைக்காரிகள்தான் உலா வருகின்றனர். இங்கே கனடாவில் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகின்றது. தொடர்ந்து வெள்ளைக்காரிகளையே அழகிப்போட்டிகளுக்கு அனுப்பி கொண்டிருந்த நாடு இப்பொது இந்திய, ரஷ்ய குடிவரவு பதுமைகளை தேர்வு செய்து அனுப்பிக்கொண்டிருக்கின்றது. மிஸ் இந்தியா-கனடா அழகிப்போட்டி தற்போது மிஸ் யுனிவர்ஸுக்கான தேர்வு செய்யப்படும் போட்டியாக உருவெடுத்துள்ளது. முன்னாள் மிஸ் இந்தியா-கனடாவான ரூபி தல்லா பாராளுமன்ற உறுப்பினராக லிபரல் கட்சியில் அங்கம் வகித்தவர். ஆனால் மேற்குலகத்தினுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வெள்ளை தோலின் மீதுள்ள அடிமை மோகம் அளவுக்கதிகம். அதனால் தானே தமிழன் வாய்க்குள் நுழையாத திறமைகளும் இல்லாத வடக்கத்தி நடிகைகளை கண்டு வாயில் உமிழ்நீர் வழிய ஏமாற்றப்பட்டு வருகிறான். இதில் ரஜினிகாத்தும் விதிவிலக்கல்ல. எனக்கு கோச்சடையானில் கேத்ரீனா கேய்ஃபை போடு, தீபிகா படுகோனேவை போடு. ஐஷ்வர்யா ராயை போடு என்று தமிழர்களை இம்சிப்பது தாளவில்லை.

இன்னமும் இங்கே மேற்குலகத்தில் இருப்பது போல மாநிற மேனிக்கும் கறுத்த மேனிக்கும் ஒப்பனை சாதனங்களும் நிறமிகளும் இல்லாத்தால் இந்தியர்கள் மாவடித்துக்கொண்டு அவலமாக காட்சியளிக்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சி நீயா நானாவில் ஒரு வாரம் வெளுத்த பெண்களுக்கும், கருத்த பெண்களுக்கும் இடையிலானா கருத்துமோதல்...
அதில் பெரும்பாலான சிவத்த பெண்களிடம் தான் அழகு என்ற ஒரு அகங்காரம், தலைக்கணம் இருந்தது...அதே நேரத்தில், மானிறமுள்ள பல பெண்களிடமும் உறுதியும் தன்னம்பிக்கைதான் இருந்தது, திமிர் அல்ல... அந்த நிகழ்ச்சியின் போது, இளைஞர்களுக்கு பிடித்தது சிவந்த பெண்களா (அ) மானிறமுள்ள ஒரு சர்வே நடத்தினார்கள். ஆச்சர்யம்! 75 சதவீத ஆண்கள் சொன்னது 'தங்களுக்கு மானிறமுள்ள பெண்ணைத்தான் பிடிக்கும்' என...அந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த பாலு மகேந்திரா அவர்களிடம் கோபினாத், அவரது பார்வையில் சிறந்த அழ்கியை தேர்ந்தெடுக்க சொன்னபோது, இயக்குனர் தேர்ந்தெடுத்தது ஒரு மானிறமுள்ள அழகியைத்தான்... கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...

கருப்பா சிவப்பா என்பது முக்கியமில்லை; கற்பா சிவப்பா என்பதுதான் முக்கியம்!

சுரேஷ்,பக்ரைனிலிருந்து, "கருப்பாய் இருக்கிறீர்களா? அவமானமாய் உணர்கிறார்களா? இதோ எங்கள் பேர்னெஸ் க்ரீமை பயன்படுத்தி உடனே அழகாய் வெண்மையாய் மாறுங்கள்" தினந்தோறும் எத்தனை விளம்பரங்கள் இங்கே வருகின்றன..., ஆம் அந்த விளம்பரங்களின் மூலமாய் அவர்களால் அவமானமாக குறிக்கப்படும் கருப்பு நிற மனிதர்கள் ஒருவர் அல்ல, இருவர் அல்ல, ஒட்டுமொத்தமாக ஒரு "கண்டம்"(ஆப்பிரிக்கா). உண்மையில் யோசித்து பார்த்தால் இது கூட ஒரு "திவீரவாதம்" தான்..,வெண்மை என்பது மட்டுமே ஆளப்பிறந்தது அல்ல, அதே வேளையில் கருமை என்பது அடிமைப்பட மட்டும் பிறந்துமல்ல...., மார்டின் லூதர் கிங் மாமனிதனை தந்த "கருமை எனும் இனம்" தான் இடி அமீன் என்கிற கொடூங்கோலனை யும் தந்தது..., அவ்வளவு ஏன் நூற்றாண்டு தாண்டியும் தமிழ்மக்களின் மனிதில் வாழும் முல்லைபெரியாறு கட்டிய "பென்னி குக்" என்கிற மாமனிதனை தந்த "வெண்மை எனும் இனம்" தான் "ஜெனரல் ரெஜினால்ட் டயர்" என்கிற ராட்சனையும் தந்தது..., நிறம் வெளியீட்டு குறியீடு மட்டுமே. அது ஒன்றும் தனிமனித குணத்திற்கான அடையாளமோ அளவீடோ அல்ல.., நிறம் மட்டும் கண்டு ஒருவனை நிர்ணயிக்க எவரும் முனைந்தால் அவர் நிச்சயம் முட்டாள் தான்.., வெண்ணிறமும் கருநிறமும் இயற்கையும் அறிவியலும் நமக்களித்த வெறும் அடையாள வர்ணங்கள் மட்டுமே, மாறாக அதில் மானிட சிறப்பேதும் இல்லை..,

Ms Indira is absolutely correct.

ரஜினி கருப்பு தான். சிவாஜியில் தமிழ்ச்செல்வியை (ஸ்ரேயா) விட்டு விட்டு அங்கவை, சங்கவையை காதலிக்க வேண்டியது தானே? கஜோல், ராணிமுகர்ஜி போன்றோர் அனைவரும் வெள்ளை பெயிண்ட் அணிந்தே நடிக்கின்றனர். கமர்சியல் கேரக்டர்களில் நடித்தது, கடும் உழைப்பு போன்றவையே ரஜினியை உயர்த்தியது.

 Displaying 1 - 25 of 36
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 10 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவைLogin or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook