Latest News
கேள்வி-பதில்
கேள்வி-பதில் பூஜை முடிந்ததும் திருவிளக்கு தீபம் எவ்வளவு நேரம் சுடர்விட வேண்டும். எண்ணெய் தீரும் வரை சுடர்விட்டு, பிறகு தானாக அணைய விடலாமா? - ஆர்.மீனா ரவிசங்கர், சென்னை-33 அதிகாலை ஐந்தரை மணிக்கே பளபளவென விடிந்துவிட்டால், மின் விளக்கை அணைத்துவிடுவோம். ஆறரை மணிக்குத் தாமதமாக விடியும்போது, அதுவரைக்கும் மின்விளக்கு எரியும். தேவை இருக்கும்போது சேவை தொடர்வது பொருந்தும். கருவறையில் அலங்கார தீபம் காட்டியதும் அதை அணைத்து விடுவார்கள். பஞ்சமுக தீபம், கும்ப தீபம் போன்றவற்றையும் வேலை முடிந்ததும் அணைத்துவிடுவார்கள். பூஜை முடிந்ததும் திருவிளக்கை அணைக்கலாம். தர்சனார்த்திகள் வந்துகொண்டிருந்தால், அவர்களுக் காக திருவிளக்கு எரிந்துகொண்டிருக்க வேண்டும். வீட்டு பூஜையின்போது... அந்த பூஜை முடிந்ததும் அணைத்து விடலாம். விளக்கைத் தானாக அணையவிடக்கூடாது. படுத்திரி எரிதல் அபசகுனம். அணையும் விளக்கு அதீத சுடருடன் எரிவதை சாஸ்திரம் ஏற்காது. விளக்கை இறை வடிவமாகப் பார்க்கும் நாம் உபசாரத்துடன் அணைக்க வேண்டும். அணைப்பதற்கு முன் குங்குமம் போன்ற மங்கலப். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 8

குதர்க்க புத்தியுள்ளவர்களுக்கான பகுதியல்ல இது. சாஸ்திரிகள் கூறியதை எல்லோரும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நம்பிக்கையுள்ளவர்கள் முடிந்தவரை இதை பின்பற்றலாம். நம்பிக்கையில்லாதவர்கள் மியாவ் மற்றும் ஏனைய ஜீ.வி. ஆ.வி. பகுதியில் நேரத்தை போக்கலாம். ஆன்மீக இதழில் வந்த உங்கள் ஆற்றலை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை.

மிஸ்டர் மியாவ் சரி ....ஆனா பெரும்பாலாக மிஸ் மியாவ்களின் போஸ்கள் இல்லையெனில் மிஸ்டர் மியாவ் மீசை துடிக்க குறுக்கே வந்து சகுனத்தடைகளை ஏற்படுத்துவாரே. . லோகத்திலே எல்லாமே தேவையான அயிட்டங்கள் தான்.

சகுனம் பார்த்து பயணம் என்பது எங்கேயோ உதைக்கிறது. டிராவல் துறையில் இருப்பவர்கள் ( விமான பைலட், ஏர் ஹோஸ்டஸ், ரயில் மற்றும் பஸ் டிரைவர்கள் போன்றோர்) இது பார்த்து பயணம் மேற்கொண்டால் முடியுமா... ? இது அவர்கள் அன்றாட தொழில் அதனால் பரவாயில்லை என்றால்... தொழில் நிமித்தம் வியாபாரிகள் பயணம் மேற்கொள்வது மட்டும் தவறா... ஒண்ணும் புரியல சுவாமி...


உண்மையான நியாமான கேள்விகள். இதற்கு எல்லாம் இவர்களிடத்தில் விடை இல்லை. இன்னும் பலவற்றிற்கு பதில் கிடையாது. இதெல்லாம் அந்த காலத்தில் சரியான வளர்ச்சி இல்லாதபோது மக்கள் தங்களுக்கு தாங்களே ஏற்படுதிகொண்டது. கேள்விகளே கேட்காத, சுய சிந்தனை என்று ஒன்று இல்லாத மடையர்கள் தான் இதையெல்லாம் ஒத்துகொள்ள முடியும்.

பூஜை அறை விளக்கை வாயால் ஊதியோ.....கையால் விசிறியோ அணைக்காமல் ஒரு பூ பயன் படுத்தி அமைதிப் கப்படுத்தலாம்(அணைக்லாம் )2.ஐதீகம் பார்ப்பவர்கள் கோத்திரம் ராசி நட்சத்திரம் குடும்ப நபர்களின் லிஸ்ட் மேற்படி விவரங்களுடன் அர்ச்சகரிடம் தருவார்கள் மற்றபடி கலப்புத்திருமணம் செய்து கொண்டவர்கள் ஸ்வாமியை உத்தேசித்து அர்ச்சனை செய்வதில் தவறில்லை எந்த சாமியும் எந்த கோத்திரத்தில் பிறந்தவன் இவன் இவன் நட்சத்திரம் என்ன என்றெல்லாம் கருத்தில் கொண்டு அருள் புரிவதில்லை. பக்தி பரவசம் அரச்சனை செய்தால் நலம் நிம்மதி என்ற நம்பிக்கை ஒன்றே போதும்.. பயணம் செய்யுமுன் டூ வீலர்,, கார், டயர் பெட்ரோல் இருப்பு காற்று இருப்பு பிரேக் சரியாக உள்ளதா லைசன்ஸ் போன்ற ரிகார்டுகள் உள்ளதா....ரயில் பயணம் எனில் டிக்கெட், டைம், சீட் நம்பர், இவை சரிபார்த்தால் போதும் .நல்ல நேரம் பார்த்துக் கொண்டு இவற்றையெல்லாம் கோட்டை விட்டால் பயணம் அவலம்தான்.

சகுனம் பார்த்து பயணம் என்பது எங்கேயோ உதைக்கிறது. டிராவல் துறையில் இருப்பவர்கள் ( விமான பைலட், ஏர் ஹோஸ்டஸ், ரயில் மற்றும் பஸ் டிரைவர்கள் போன்றோர்) இது பார்த்து பயணம் மேற்கொண்டால் முடியுமா... ? இது அவர்கள் அன்றாட தொழில் அதனால் பரவாயில்லை என்றால்... தொழில் நிமித்தம் வியாபாரிகள் பயணம் மேற்கொள்வது மட்டும் தவறா... ஒண்ணும் புரியல சுவாமி...

I totally agree with you sundaram. In this day

வெளியே கிளம்பும் போது (சூலம், ராகுகாலம், எமகண்டம் எதுவாயினும்) ராம நாமத்தைச் சொல்லி விட்டுக் கிளம்பினால் எந்த தோஷமும் இருக்காது.

Displaying 1 - 7 of 7
 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 17 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook