Latest News
நேற்று ரயில்... இன்று பேருந்து நிலையம்!
நேற்று ரயில்... இன்று பேருந்து நிலையம்! காட்பாடி - சேலம் பயணிகள் ரயில் தொடக்க விழா சர்ச்சை பற்றி கடந்த 1.4.12 ஜூ.வியில் 'எங்க ஏரியா உள்ளே வராதே!’ என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். காட்பாடி தொகுதிக்குள் அ.தி.மு.க-வினரை நுழையவிடக்கூடாது என்று தி.மு.க-வினர் அதகளம் பண்ணியதற்கு எதிர்ப்பாக, காட்பாடி அ.தி.மு.க-வினரும், அவர்கள் பலத்தைக் காட்டி விட்டார்கள்.  கடந்த 29-ம் தேதி காட்பாடி தொகுதியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, தொகுதி எம்.எல்.ஏ-வான துரைமுருகனை வைத்துத் திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், அ.தி.மு.க-வினர் தடாலடியாக உள்ளே புகுந்து... பஸ் நிலையத் திறப்பு விழாவை ரத்து செய்ய வைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்த தாரபடவேடு மண்டலத் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான சுனில்குமார் நம்மிடம், ''சித்தூருக்கு பேருந்து நிலையம் வேண்டும் என்பது, இந்தப் பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. எங்கள் அண்ணன் துரைமுருகன்தான் பெரும் முயற்சி. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 16

திறந்து வைப்பவர்கள் ஒரு வருடம் கழிவறை பக்கத்தில் குடி இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் என்ன?

திமுக காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ஒன்று தன் பெயரை வைக்க வேண்டும், அல்லது அதை இடிக்க வேண்டும். இதை தவிற ஜெவிற்கும், அவர் கட்சி காரர்களுக்கும் வேறு வேலை கிடையாது.

அந்த பஸ் ஸ்டாண்டில் ஒரு கக்கூஸ் கட்டி ரெண்டு கட்சிகாரங்களையும் திறக்க வெச்சிட்டா பிரச்சினை முடிஞ்சிடும்

பேருந்து நிலையத்தைத் திறந்து வைச்சுட்டு, சண்டை போடுங்கம்மா...

அட போங்கையா புழுத்துபோன அரசியல்வாத்களா... யார் அப்பன் வீட்டுப்பணம் இதெல்லாம்..? உங்க சொந்தப் பணத்தில் இந்த ஆட்டமெல்லாம் போடுங்கள்..

கூடிய சீக்கிரம் தொரக்கலேன்ன அது வேர வேலைக்கு பயனுக்கு வந்துருங்கோ

துரைமுருகனுக்கு ஸ்டாலினுக்கு பணிந்து சட்டசபையை தினமும் புறக்கனிக்க வேண்டும்... அடுத்து கருணாநிதி முன்னாடி ஜோக்கர் சேஷ்டைகளை செய்து காட்ட வேண்டும்... அதன் பிறகு அவரோட நண்பர் ஜெகத்தோடு சேர்ந்து கல்வி சேவை செய்யனும்... இவ்வளவு கடிணமான வேலைகளுக்கு இடையே பஸ் ஸ்டாண்டை வேறு திறந்து வைத்து....

தி மு க, அ தி மு க ஒத்தனுக்கு ஒத்தன் அடிச்சிக்கிட்டு ஒழியமாட்டேன்றாங்க்ளே! அப்படி எதாவது நட்ந்தாலாவது தமிழ்னாடு மக்களுக்கு வழி கிடைக்குமா என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

50000 என்ன உங்க அப்பன் வீட்டு காசா. அடிச்ச காசுதானே.

முதலில் இதுப்போல திட்ட துவக்கவிழாக்களை ரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். மக்கள் காசைக்கொண்டு நிறைவேற்றப்படும் திட்டத்தினை திறக்க அரசியல்வியாதிகள் யாரும் தேவையில்லை. மக்களே போதும். திட்டம் நிறைவேறியவுடன் சம்பத்தப்பட்ட அதிகாரிகளின் சான்றிதழ் (Project Completion Certificate) வாங்கிக்கொண்டு பயன்பாடுக்கு விட வேண்டியதுதான்.

இந்தம்மா தான ஒரு பத்திரிகை ஆபிஸ்ல புகுந்து அடாவடி செஞ்சது ???

ஜெஜெ ஆட்சியில் எந்த புராஜெக்டளும் வந்ததில்லை. ஜெஜெ திருடர்கள் முன்னேற்ற கழகம் தொடங்கியத்தை தான் திறந்து வைக்கிரார். உதாரணதிர்க்கு கோயம்பேடு பஸ் நிலையம். ஒரு பக்கம் நுழை வாயிலில் முக, வெளியேரும் வழியில் ஜெஜெ. இதில் ஜெஜெ பெயர் எதர்க்கு வந்தது ?. முக, ஊழல் பேர்வழியாக இருந்தாலும் கோயம்பேடு பஸ் நிலயம், காய்கரி மார்கெட்டிர்க்கு உருவம் கொடுத்தவர். இதில் ஜெஜெவின் எதிர்ப்பை தவிர வேரேதும் நல்லது செய்தாரா ?. ஒவ்வொரு தடவை கோயம்பேடு பஸ் நிலையத்தை கடக்கும் போது ஜெஜெ ஒன்னும் செய்யாமல் ஒட்டிகொண்டிருக்கிரது தெறிகிரது.

தாட்சாயினி, தட்சன் நடத்தும் யாகத்துக்கு நீ போகக்கூடாது, இல்லை நான் போவேன். என்னா தமாஷ்டா பண்ணுரீங்க ஜனங்க காசுல

ஆஹா எப்படிப்பட்ட மேயர் - வேலூர் மக்கள் குடுத்து வைத்தவர்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பந்தல் போட்டதுக்கு மட்டும் 50 ஆயிரம் ரூபாய் செலவாகி இருக்குது. அதை யாரு கொடுப்பாங்க சொல்லுங்க.- ஏன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இது சேர்த்தி இல்லையா? 50,000 ரூபாய் அனாவசிய செலவு. திட்டஙளுக்கு செலவு செய்யலாம் திறப்பு விழக்களுக்கு அல்ல. இவை வெறும் விளம்பரமே, எந்த கட்சி செய்தாலும் அவை சொந்த பணத்தில் செய்து கொள்ளட்டும். மின்வெட்டு இருக்கும்போது இந்த மேடைகளுக்காக அந்த சாலை முழுதும் குழல் விளக்குகளும் ஒலி பெருக்கிகளும் தேவையா?

யார் திறந்தால் என்ன...சீக்கிரம் திறந்து மக்களுக்கு பயன்பட விடுங்கள்.

Displaying 1 - 16 of 16
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook