Latest News
Published on :30-11--0001 06:00 AM
''போன மாப்பிள்ளை திரும்பி வரலையே..!''
''போன மாப்பிள்ளை திரும்பி வரலையே..!'' 'தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட இதுவரை விஜயகாந்த் நிறைவேற்றவில்லை. அதுகூடப் பரவாயில்லை... தொகுதிப் பக்கம் அவரைப் பார்த்தே பல மாதங்கள் ஆகிப்போச்சு. இனியாவது எங்களைக் கவனிக்க அவர் வரணும்னு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) பலரும் தகவல் அனுப்பி இருந்தார்கள்.  ஆர்பாட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்திய இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலாளர் அப்பாவுவிடம் பேசினோம். ''சட்டமன்றத் தேர்தல்ல எங்க தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். தொகுதி மக்கள் கேட்டதை எல்லாம் செய்து தருவார் என்று பிரேமலதாவும் சொன்னாங்க. ஆனால், விஜயகாந்த் எதுவுமே செய்யவே இல்லை. விருத்தாசலம் மக்களை ஏமாற்றியது போலவே எங்களையும் இப்போது அவர் கண்டுகொள்வது இல்லை. தேர்தல் முடிஞ்சதும், 'உங்க ஊர் மாப்பிள்ளையை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி’ என்று சொல்லிட்டுப் போனதோடு சரி. போன மாப்பிள்ளை திரும்பி வரவே இல்லை.. . .

COMMENT(S): 20

விசயகாந்த்து வந்துட்டாலும்......... ஏற்கனவே விருத்தாசல மக்களை ஏமாற்றியவர்தானே. இருங்கப்பூ, இப்போ நாக்கு சுளுக்கி இருக்கு, துருத்த கஷ்டமாக இருக்கு. சுளுக்கு சரியான பிறகு வந்துடுவாரு.

என்னமோ எல்லா எம்.எல்.ஏ.க்களும் அவரவர் தொகுதியில் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தங்கள் மனைவி, துணைவி, இணைவிகளை எல்லாம் விட்டுவிட்டு வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு இரவு பகல் பாராமல் வேலை செய்து ஊழலே இல்லாத, சுத்தமான, சுகாதாரமான தொகுதிகளாக்க வேலை செய்வது போலவும் இவர் மட்டுமே தொகுதிக்கு வருவதில்லை போலவும் எழுதுவது உங்கள் நிலைப்பாட்டைத்தான் காட்டுகிறது. இது போல கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, திருமாவளவன், கிருஷ்னசாமி, தங்கபாலு, இவர்களெல்லாம் அவர்கள் தொகுதிகளில் என்னென்ன சொன்னதில் எத்தனை செய்து கிழித்தார்கள் என்று பட்டியலிடுங்கள்.

'என்ன கேட்டாலும், கேப்டன் லெட்டர் எழுதி இருக்கார்ன்னே பதில் சொல்றாங்க' இது தமிழ்நாட்டு கலாசாரம்

கேப்டனை பத்து நாள்தனே சஸ்பென்ட் செய்தார்கள்.இப்போது தொகுதியை கவனிக்க என்ன பிரச்சனை..இவர் இபோது தன் மகனை சினிமாவில் நுழைக்க பாடுபட்டு கொண்டிருக்கிறார்.2025ல் சி.எம் க்கு ஆள் வேணுமே.தமிழர்களா,,, திருந்துங்கப்பா

விஜயகாந்த் மீது மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை.
விருத்தாசலத்துக்கு விஜயக்காந்த் கொடுத்த அல்வா தெரிந்தும் ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் ஏமாளியாக இருந்தால் யாராலும் காப்பாற்றமுடியாது.

ரிஷிவந்தியமா அந்து எங்கப்பா இருக்கு???? ஆங்க்க்க்

கிரிக்கெட்ல இந்தியா உதை வாங்கிட்டிருக்கு, கேப்டன் அதைப் பார்ப்பாரா இல்லை தொகுதியைப் பார்பாரா ..... போங்கையா, உங்களுக்கு வேற வேலை இல்ல .....

காப்டன் இப்பொ மேஜர் ஆயிட்டாரோ என்னவொ

so sweet news...captains alwaaaa

தொகுதிக்கு மேற்கொண்டு நூறு டாஸ்மார்க் கடைகள் வேண்டுமென்று கோரிக்கை வைத்தால் உடணடியாக டாஸ்மார்க் கோரிக்கை நிறைவேற படாத பாடுப்பட்டு நிறைவேற்றுவாரு நம்ம கேப்புடவுன்...

சினிமா பார்த்துவிட்டு ஓட்டை விற்றால் இப்படித்தான். அனுதாபம் வரவில்லை.

இன்னுமாயா நீங்க நம்புறீங்க? இவ்வளவு அடிச்சும் தாங்குறீங்களே - ரொம்ப நல்லவங்களா இருப்பீங்க போல இருக்கே?

அந்த கடைசி இரண்டு வரி மட்டும் ஜூ வி ஸ்பான்சர் பண்ணியது

அப்போ கேப்டனை லட்டர்பேட் கேப்டன் என்று சொல்லலாமா?.

"கூடிய சீக்கிரமே கேப்டன் நேரில் வந்து எல்லோருக்கும் பதிலடி கொடுப்பார்'' ----- கேப்டன் பதில் கொடுக்கிறாரோ இல்லையோ ஆனால் அடிகொடுப்பார்.

"கூடிய சீக்கிரமே கேப்டன் நேரில் வந்து எல்லோருக்கும் பதிலடி கொடுப்பார்"

ஆமாம், தெரியுமே... எல்லோரும் தலைக் கவசம் போட்டுக் கொள்ளுங்கள்.

தொகுதிக்கு எம்.எல்.ஏ. வரணுமா, அப்பாவு அப்பாவியா இருக்காரே?!

பண்ருட்டி: ரிஷிவந்தியம் மக்களிடம் ஆவேசம், விரக்தி என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது... சனங்க இன்னுமா கேப்டனை நம்புது...?

Request side dish from Captain. Immediately he will arrange it...

Displaying 1 - 19 of 19
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook