Latest News
Published on :30-11--0001 06:00 AM
வட்டியும் முதலும்
வட்டியும் முதலும் ஒவ்வொரு முறையும் அன்பின் அருமை பிரிவில்தான் புரிகிறது.  ஒரு மாதத்துக்கு முந்தைய இரவில், நண்பர் நாகலிங்கம் பதற்றமாக அலைபேசினார். ''ஒரு முக்கியமான விஷயம் முருகன்...'' ''சொல்லுங்க லிங்கம்...'' ''என்னோட காதலைப் பத்திச் சொல்லியிருக்கேன்ல... அதுல கொஞ்சம் பிரச்னைங்க. அவங்க வீட்ல சம்மதிக்க மாட்றாங்க. போராடிப் பார்த்துட்டு, இப்போ என்னை நம்பி வந்துட்டாங்க. இப்போ ரெண்டு பேரும் சேலத்துலதான் இருக்கோம். உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்.'' ''கவனம் லிங்கம்... எல்லாம் நல்லபடியா நடக்கும்'' என்று தைரியம் சொன்னேன். சேலத்தில் இருக்கும் ஒரு நண்பனுக்கு தொலைபேசி, அவர்களுக்கான உதவிகளைச் செய்யச் சொன்னேன். மறு நாள் இருவருக்கும் ஒரு கோயிலில் கல்யாணம் நல்லபடியாக நடந்தது. 'நல்லபடியாக’ என்பது நண்பர்களால். உறவுகளும் சொந்தங்களும் கூடி நடந்திருந்தால்... அது இன்னும் 'நல்லபடியாக’! நண்பர் லிங்கம் சினிமாவில் உதவி இயக்குநர். அனுதினமும் கனவுகளும் யதார்த்தங்களும் போட்டியிடும் வாழ்வில் ஜெயிக்க அலைபவர். இத்தனைக்கும் நடுவே வரம் மாதிரி சத்யப்பிரியா. . .

COMMENT(S): 31

how are you Rajmurugan! Iam Sham and Varshi' s mother. Every week i read yr article. well done.

வீட்டில் எங்கே ஷாட் வைத்தாலும் ஃப்ரேமில் ஏதோ மூலையில் அந்தப் பூனை இருக்கும்.

ஐ லைக் இட்.

While my father was alive i will criticize him and will blame him that he has not given proper attention towards my my welfare,now my father had passed away,now i am realising his true love and affection,daily i am weeping in my mind.
Really Muruga what you told is correctஎளிதாய்க் கிடைத்துவிடுகிற எதையும் மனசு மதிப்பது இல்லை. அலட்சியப்படுத்தி, புறக்கணித்துத் திரிவோம்.It is correct,practical word.

மனதை பிசைந்து விட்டாயே முருகா...ஒவ்வொரு வரியையும் படிக்கும்போது ஏதேதோ நினைவுகள் வருவதை தவிர்க்க முடியவில்லை... பிரிவுதான் எத்தனை அழகானாது, நம்மை நேசிப்பவர்களை, நம்மீது உயிரை வைத்திருப்பவர்களை, நம்மால் பிரிந்து இருக்க முடியாதவர்களை, நாம் எவ்வளவு உதாசீன படுத்தினாலும் நம்மையே நினைத்துக்கொன்டிருப்பவர்களை நமக்கு படம்பிடித்து காட்டும் ஒரு மாயக்கண்ணாடி அது...அதே நேரம் பிரிவுதான் எத்தனை கொடுமையானது? நம்மால் தாங்க முடியாத பாரத்தை நம் அனுமதி இல்லாமலேயே நம்மீது ஏற்றிவைத்து வேடிக்கை பார்க்கிறது அது..."ஒரு போன் பன்னக்கூட உனக்கு நேரம் இல்லையா?" என என் அம்மா கேட்டதின் வலியை எனக்கு உணர்த்தியது என் மகனின் ஒரு வார பிரிவுதான்...இப்படி எத்தனை எத்தனையோ பிரிவுகள்...

பிரிவு ரொம்பக் கொடுமையானது

போன வாரம் கொஞ்சம் தொய்விருந்த மாதிரி தெரிந்தது.. மீண்டும் டாப் கியர் போட்டுவிட்டாயே முருகா...
பிரிவுதான் எவ்வளவு அழகானது, நம் மேல் உயிரை வைத்திருப்பவர்களை, அவர்களின் உண்மை நேசத்தை, நம்மால் பிரிந்து இருக்க முடியாதவர்களை நமக்கு எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடி அது... அதே நேரம், பிரிவுதான் எத்தனை கொடுமையானது...தாங்க முடியாத பாரத்தை நம் அனுமதி இல்லாமலேயே நம் மேல் ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது அது..."ஒரு போன் பண்ணக்கூட உனக்கு நேரம் இல்லையா?" என கேட்கும் அம்மாவை உணர வைப்பது இந்த பிரிவுதான்...
என்ன பேசுவது என தெரியாமலேயே போன் போட்டு எதையெதையோ பேசிக்கொன்டிருப்பதும் பிரிவு தந்த பாரத்தை இறக்கி வைக்கத்தானோ??
ஊரை விட்டு வெளியூர் வந்து இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு கண்டிப்பாக தெரியும் பிரிவின் வலியும், அது காட்டிக்கொடுத்த அன்பும்...

பூனை கதை,எங்கள் வீட்டிலும் நடந்தது,பூனையையும் குட்டிகளையும் சேர்த்து கொண்டு போய் விட்டார்கள்,பூனை வேண்டும் என்று உண்ணா விரதம் எல்லாம் இருந்தோம்,ம்கூம் அடிதான் கிடைத்தது,அந்த பூனையை நினைக்க வைத்துவிட்டீர்கள் சார்.......

பிரியத்தின் பெருமழையை அவர்கள் பொழியும்போது எல்லாம் குடை பிடித்துக்கொண்டு போகும் கயவர்கள் நாம். உண்மை,பளார்ன்னு அறையுது,இந்த வார கட்டுரைக்கு,இந்த வரிகள் வைரமானவை ராஜு முருகன்,நாம் எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தில் குடை பிடித்த கயவர்கள்தாம்....

பாமர வாசனை அழகு...தொடர வாழ்த்துக்கள்

அருமை!

திரு ராஜு முருகன் அவர்கலது எழுத்து வெகு ப்ரமாதம். நான் மிகவும் விரும்பி படித்து வருகிரேன். மிக்க நன்ரி. மோஹன்.

எளிதாய்க் கிடைத்துவிடுகிற எதையும் மனசு மதிப்பது இல்லை....சத்தியம்

அதன் பிறகு அந்தக் குட்டி களையும் யார் யாருக்கோ கொடுத்துவிட்டோம். அப்போது எதுவும் புரியவில்லை. அது எவ்வளவு பெரிய பாதகம். ===== பக்குவபட்ட மனிதபிமானம். நான் சின்ன வயதில் தெரு தெருவாக போய், தாய் நாயை அடித்து விரட்டிவிட்டு, நாய் குட்டிகளை தூக்கிவந்து வளர்த்தற்கு இப்பொது பல முறை வருந்தி இருக்கிறேன். சில வாரங்கள் பொருத்திருந்தால் குட்டி தாயிடம் இருந்து பிரிந்து வந்திருக்கும். சின்ன வயது . பொருமை இல்லை.

Muruga Muruga, I felt excatly same, when I lost my mother,
மாய்ந்து மாய்ந்து நம்மை அன்பு செலுத்துபவர்களின் அருமை அவர்கள் அருகில் இருக்கும்போது நமக்குப் புரிவதே இல்லை. பிரியத்தின் பெருமழையை அவர்கள் பொழியும்போது எல்லாம் குடை பிடித்துக்கொண்டு போகும் கயவர்கள் நாம். காய்ச்சலில் கிடந்த அத்தனை நாளும் பக்கத்திலேயே இருந்த ஓர் ஆதூரம்... கேட்கும்போது எல்லாம் கேட்காததையும் சேர்த்துத் தரும் ... எளிதாய்க் கிடைத்துவிடுகிற எதையும் மனசு மதிப்பது இல்லை. அலட்சியப்படுத்தி, புறக்கணித்துத் திரிவோம். ஒருநாள் நிர்தாட்சண்யமாக நம்மைவிட்டு அவை பிரியும் நேரம் வரும். அப்போது வெறுமையை நம்மால் தாங்க முடியாது. அதுவரை கொட்டிய அன்பெல்லாம் அப்போதுதான் விஸ்வரூபமெடுத்து வந்து நம்மைக் கொல்லும்.

பிரியத்தின் பெருமழையை அவர்கள் பொழியும்போது எல்லாம் குடை பிடித்துக்கொண்டு போகும் கயவர்கள் நாம்.-very true murugan

எளிதாய்க் கிடைத்துவிடுகிற எதையும் மனசு மதிப்பது இல்லை. அலட்சியப்படுத்தி, புறக்கணித்துத் திரிவோம். ஒருநாள் நிர்தாட்சண்யமாக நம்மைவிட்டு அவை பிரியும் நேரம் வரும். அப்போது வெறுமையை நம்மால் தாங்க முடியாது. அதுவரை கொட்டிய அன்பெல்லாம் அப்போதுதான் விஸ்வரூபமெடுத்து வந்து நம்மைக் கொல்லும். அந்தப் பிரிவுதான் அன்பின் முழுமையை, அருமையை உணர்த்தித் தவிக்கடிக்கும்.- மறுக்க மறக்க முடியாத உண்மை!

பல சமயங்களில் பிரிவின் வேதனை நிதானிப்பதுக்குள்ளே மற்றொரு பிரிவு வருகிறது....அருமை முருகன்...

Simply superb..You take me back to my happy old memories. If there is one section that i look forward every week in vikatan, this is it..Please continue this wonderful writing..

எளிதாய்க் கிடைத்துவிடுகிற எதையும் மனசு மதிப்பது இல்லை... நிதர்சணம்...உண்மை...


முருகா முருகா....பிரிவைப் பத்தி பின்னிட்டீங்க...

செ. மு. ஹோசிமின் ... ஆப்ரிக்கா

சிலரிடம் நம் அன்பை வெளிப்படையாக காட்ட முடிவதில்லை.... நம்மை விட மிகவும் அதிகமான அந்தஸ்தில் இருக்கும் நண்பன், நம் குடும்பத்துடன் அவர்கள் குடும்பம் இணக்கமில்லாததால் அந்த குடும்ப உறுப்பினர்கள், நாம் ஏமாற்றிவிட்டதாக தவறான நினைப்பில் இருக்கும் ஒரு குடும்ப உறவினர்........ இப்படி எத்தனையோ.

வீட்டில் எங்கே ஷாட் வைத்தாலும் ஃப்ரேமில் ஏதோ மூலையில் அந்தப் பூனை இருக்கும்.

யாரோ எதுவோ சொல்லிவிட, நம்மைத் திடுதிப் பென்று புறக்கணித்து நடமாடும் நண்பன் எவ்வளவு துயரங்களைத் தருகிறான்?

அருமை அருமை

ஒளியும் இருட்டும் என்று சொன்னாலும் ஒளிய வேண்டும் இருட்டு என்பதாக அதாவது இருட்டினை ஒளிக்க வந்ததே ஒளி என்றாயிற்று. வெள்ளைத்தாளிலே கறுப்பு மையில் எழுதினால்தானே படிக்க முடிகிறது? அது போல இரட்டைக்கிளவி ஆக உறவும் பிரிவும் இருந்தால்தான் வாழ்க்கை உணரப்படும்..நீங்க பாட்டுக்கு எழுதிப் பொட்டுலே அடிச்சாப்போல போட்டு வாங்கிகிட்டே இருங்க..அதான்..

அறைக்கு வந்ததும் அவர் அணிந்திருந்த முழுக்கைச் சட்டையைக் கழற்றினார். பகீரென்றது. அவர் உடம்பு முழுக்க வெந்து போன தழும்புகள். ==== அவனுக கண்ணையே தழும்பா பார்க்கிற நாள் விரைவில்

பிரிவுகள் கடத்தும் வலி கொடியது... அருமை முருகன்... : )

 Displaying 1 - 25 of 30
 
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 11 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook