Latest News
Published on :30-11--0001 06:00 AM
வலையோசை : நான் பேச நினைப்பதெல்லாம்

மனைவி கேட்டாள்...

 

''இன்றென்ன வேலை உங்களுக்கு?'
''ஒன்றுமில்லை' என்றேன் நான்.
''நேற்று செய்ததும் அதுதானே' அவள் சொன்னாள்.
'இன்னும் முடியவில்லையே' என்றேன் நான்.
இளைஞனாக இருப்பது இனிமையானது.
முதியவனாக இருப்பது வசதியானது!


வயசானா இப்படித்தான்!

ஒரு வயதான தம்பதி படுக்கையில் படுத்திருந்தனர். கணவருக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. ஆனால், மனைவியோ பழங்கதைகள் பேச ஆரம்பித்தாள். ''நாம் காதலித்த காலத்தில், தனிமையில் இருக்கும்போது நீங்கள் என் கைகளைப் பிடிப்பீர்கள்' என்றாள். கணவர் சரியென்று அவள் கைகளைப் பற்றிக்கொண்டார். அடுத்து அவள் சொன்னாள், ''பின் என்னை முத்தமிடுவீர்கள்.' அவர் எரிச்சலுடன் அவள் கன்னத்தில் உதட்டை ஒற்றியெடுத்தார். அவள் சொன்னாள், ''என் கழுத்தில் செல்லமாகக் கடிப்பீர்கள்'. அவர் படுக்கையில் இருந்து எழுந்து புறப்பட்டார். ''எங்கே போகிறீர்கள்?' என்று அவள் கேட்டாள். அவர் சொன்னார், ''போய் என் பல்செட்டை மாட்டிக்கொண்டு வருகிறேன்!''


குழந்தை பீர் தெரியுமா?

பீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, 'பீர்’ தெரியும். ஆனால், 'குழந்தை பீர்’ தெரியுமா? குடித்துப் பார்க்க வேண்டுமா? பஞ்சாபுக்குத்தான் போக வேண்டும். அருகே உள்ள விளம்பரப் பலகையைப் பாருங்கள்!

இதைப் பார்க்கும்போது, ஜோக் ஒன்று நினைவுக்குவருகிறது.  அமர்சிங் ஒரு புதிய ஊரில் பாருக்குச் சென்றார். அந்த ஊர் பாரில், புதியவர்கள் யாரும் வந்தால் அங்கிருப்பவர்கள் ஏதாவது தொல்லைகொடுப்பது வழக்கம். அமர்சிங் குடித்து முடித்த பின் வெளியே சென்றார். அவருடைய மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. மீண்டும் உள்ளே வந்தார். சத்தமாகக் கடுமையாகச் சொன்னார், ''நான் இன்னும் ஒரு கோப்பை மது அருந்தப் போகிறேன். அதற்குள் என் பைக் வர வேண்டும். இல்லையெனில், நான் பாட்டியாலாவில் என்ன செய்தேனோ அதைச் செய்துவிடுவேன்.'

அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அமர்சிங் குடித்து முடித்து வெளியே சென்று பார்த்தார். பைக் நிறுத்தப்பட்டு இருந்தது. அதை உயிர்ப்பித்துப் புறப்படத் தயாரானார். அவர் பின்னாலேயே வெளியே வந்த பார், மேலாளர் கேட்டார், ''சார், பாட்டியாலாவில் என்ன செய்தீர்கள்?' அமர்சிங் சொன்னார் ''நடந்தே வீடு திரும்பினேன்!''


காலத்துக்குக் காலம் கொடுங்கள்!

 காலம் எல்லாக் காயங்களையும் ஆற்ற வல்லது. காலத்துக்குக் கொஞ்சம் காலம் கொடுங்கள், செயலாற்றுவதற்கு!

எல்லா விவாதங்களையும் வெல்ல வேண்டும் என்பது இல்லை. உடன்பாடின்மைக்கும் உடன்படத் தெரிந்துகொள்ளுங்கள்!

 மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என நினைப்பது உங்கள் வேலையல்ல!

நிலைமை எவ்வளவு நல்லதாகவோ/ மோசமானதாகவோ இருந்தாலும், அதுவும் மாறும்!

 வாழ்க்கை என்பது ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் அதில் பயில வந்திருக்கிறீர்கள். தேர்வுகளில் வெற்றி பெறுங்கள். பிரச்னைகள் பாடத்திட்டத்தின் பகுதியே. அவை வகுப்புகள்போல் வந்து போகும். ஆனால், கற்றுக்கொண்டவை உங்களுடன் நிற்கும்!

 உங்கள் வாழ்க்கையை மற்றவர் வாழ்க்கையோடு ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணம் எதை நோக்கி என்பது உங்களுக்குத் தெரியாது!

வாழும் நாள் கொஞ்சமே. அதில் பிறரை வெறுப்பதற்குச் செலவிட நேரமேது?

 அனைத்திலும் சிறந்தது இனிமேல்தான் வர இருக்கிறது... நம்புங்கள்!


சிங்கமா? குரங்கா?

கென்யாவில் ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரு சிங்கம் இருந்தது. மிருகங்களை நன்கு பராமரிக்க வசதியற்ற இடம் அது. சிங்கத்துக்கு ஆட்டுக் கறி அளிக்கப்பட்டாலும், அது போதவில்லை. தனக்கு விடிவு காலம் வராதா என ஏங்கியது. ஒருநாள் துபாயின் மிக வசதியான மிருகக் காட்சி சாலையில் இருந்து வந்த மேலாளர், அந்தச் சிங்கத்தைத் துபாய்க்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். அந்தச் சிங்கத்துக்கு மிக மகிழ்ச்சி. வசதியாக வயிறு நிறைய நல்ல ஆட்டுக் கறி சாப்பிட்டு வாழலாம் என நினைத்தது. துபாய்க்குச் சென்றதும் முதல்நாள் சிங்கத்துக்கு உணவு வழங்கப்பட்டது. அதற்கு ஏமாற்றம். 10 வாழைப்பழங்கள். இட மாற்றத்தினால் ஜீரணம் ஆவது பிரச்னையாகுமோ எனப் பயந்து பழம் கொடுத்திருப்பார்கள் என நினைத்தது. ஆனால், தொடர்ந்து இரு நாட்கள் இது போலவே நடந்தது. மறுநாள், உணவளித்த மனிதனிடம் அது கேட்டது, ''நான் சிங்கம். எனக்கு இப்படியா உணவளிப்பது?' அவன் சொன்னான் 'நீ சிங்கம்தான் தெரியும். ஆனால், நீ இங்கு வந்திருப்பது ஒரு குரங்கின் 'விசா’வில்!''

நீதி : வெளிநாட்டில் குரங்காக வாழ்வதைவிடத் தன் நாட்டில் சிங்கமாக வாழ்வது சிறந்தது!

COMMENT(S): 6

பீர் ஜோக்குக்கு நம்மௌஉரிலே ஒரு கதை உன்டு தெரியுமா? ஒரு சோம்பேரி ஒரு வீட்டு திண்ணைலே ஒக்காந்தான் . பசித்தாங்கலெ பிச்சை எடுக்க வெக்கம் , ஒரு யுக்க்தி செஞ்ஜான் தனக்கு ஏதும் துன்ன கிடைக்குமா என்ரு உசந்தகுரல்லே கேட்டான், அந்த்வீட்டு எஜமானி உடனெ அவனுக்கு ஒரு வாழைமட்டைலே சோரும் குழம்பும் ஊத்தி தந்தாள் , மருனாள் மீன்டும் அதெபோல அதிகாரமா கேட்கவே அவளூக்கு கோவம் வர தராட்டி என்ன செய்வே என கெட்டாளம் , அவன் பட்டினிய வெ கிடப்பேன் என்ரு சொல்ல அவல் நானும் சும்மா இருக்கமாட்டேன் என்ராளாம் . என்னா செய்வே எனதிமிராக கேட்க அவ இதுதான் செய்வேன் என்ரு துடப்பக்கட்டைய தூக்கினாளாம்

ஆஜ் டா மீனு (மெனு இல்லை) சூப்பர். அதிலும் சேஃபாக குடித்து விட்டு செல்லுமாறு பஞ்சாப் போலீஸ் உத்தரவிடுகிறது என்கிற அர்தத்தில் இருக்கிறது கீழே இருக்கும் வாசகம். நல்ல பதிவுகள் திரு. சந்திரசேகரன் அவர்களே.

துபாய் ல முன்பு இந்த விசா பிரச்சினை இருந்த்து உண்மைதான் அதனால எல்லோரையும் குரங்காகாதீங்க சார்.. குரங்குக்கு விகடன்ல கருத்து எழுத தெரியாது (?!)

its not child beer, they meant chilled beer. In one of the fwd I saw, it was child bear in some bihar shop's advt.

விகடன் - இதழின் பேருக்கு ஏற்ற துணுக்குகள்.
எல்லவற்றையும் படித்து சிரிக்க முடிந்தது.

அனைத்தும் அருமை.

Displaying 1 - 6 of 6
 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

OR
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார்.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
ஆனந்த விகடன்
< 11 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook