Latest News
Published on :30-11--0001 06:00 AM
புதுக்கோட்டையில் ஆளும் கட்சி சுறுசுறு!
புதுக்கோட்டையில் ஆளும் கட்சி சுறுசுறு! சங்கரன்கோவில் சடுகுடு சப்தம் குறைவதற்குள் புதுக்கோட்டை இடைத்தேர்தல் வந்துவிட்டது!  கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்​கோட்டைத் தொகுதியில் இந்தியக் கம்யூ​னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முத்துக்குமரன் வெற்றி பெற்றார். மிகக்குறுகிய காலத்தில் நல்ல பெயர் வாங்கிய எம்.எல்.ஏ-க்களில் ஒருவராக வலம் வந்தார். ஆனால், எதிர்​பாராத விபத்து, அவரது மரணத்தைத் துரிதப்படுத்தி விட்டது. அதனால், தனது புதிய பிரதிநிதியைத் தேர்ந்து எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கி விட்டது புதுக்கோட்டை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி முடிவு செய்யப்படும் முன்,புதுக்கோட்டைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.கருப்பையாவை அறிவித்து இருந்தார் ஜெயலலிதா. அடுத்த நாளே இந்தத் தொகுதி, கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்கு  ஒதுக்கப்பட்டது. இதனால் முத்துக்குமரன் வேட்பாளர் ஆனார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளருமான பெரியண்ணன் அரசுவை சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.   முத்துக்குமரன் இறந்த சோகத்தை மக்கள் மறப்பதற்குள்,. . .

COMMENT(S): 15

இனி அனைத்து அமைச்சர்களும் புதுக்கோட்டையில்தான் பணி.இதை தட்டிக் கேட்க எந்த அமைப்பும் கிடையாது இந்தியாவில். எந்த பத்திரிக்கைகாரர்களும் இது தவறு என்று சுட்டிக்காட்டவோ மக்களுக்கு எடுத்துச் சொல்லவோ போவதும் இல்லை. தேர்தல் அறிவிக்கும் முன்னரே வேட்பாளர் அறிவிக்கபடுவார். தேர்தல் ஆணையமும் அனத்து நலப்பணிகள் முடிந்தவுடன் தேர்தல் அறிவிக்கும். இது நல்ல டீல் அவர்களுக்கு. எப்படியோ புதுக்கோட்டை வாக்காளர்களுக்கு பணம் கொட்டப்போகிறது. அதிமுக வெற்றி பெறப்போகிறது. இதில் எந்த சந்தேகமும் கிடையாது.
சங்கரன்கோவில் தெர்தலின் போது சொல்ல மறைத்தவைகளை இந்த தேர்தலில் ஜுவி வெளியில் சொல்லுமா???

ஜெ வுக்கு புதுக்கோட்டையில் எப்பவுமே ஆப்பூதான்

முதல்ல உங்களை பொதுத்தேர்தலில் ஓட்டளித்து ஜெயிக்க வச்ச மக்களுக்கு எதாவது செய்ய முடியுமானு பாருங்க. அப்புறம் புதுக்கோட்டைல உங்கள ஜெயிக்க வைக்கலாம். பயணச்சீட்டு, பால்விலை, மின்சாரம் எல்லாம் ஏத்திவிட்டு இன்னும் என்ன செய்ய காத்திருக்கிங்களோ....

எனக்கென்னமோ இதிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. ஏன்னா நம்ம மக்கள் புத்திசாலிகள், ஆளும்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் நல்லது நடக்கும்னு தெரியும். அதனால் இடைத்தேர்தல் ஆட்சியின் மீதான தீர்ப்பாக இருக்க முடியாது.

ஓ பன்னீர்செல்வம் போன்றவர்கள் மக்கள் நலத்திட்டம் பற்றிப் பேசும்போது சிரிப்பு தான் வருகிறது!!! கடந்த 4ம் தேதி, மதுரை பை பாஸ் ( மாட்டுத் தாவணி பஸ் நிலையம் பின்புறம்) சாலையில், கட்டணம் கட்டிச் சென்ற வாகனங்களை இருபுறமும் ஒரு மணி நேரம் இழுத்துப் பிடிக்க முழுமுதல் காரணம் இந்த அமைச்சர்!!!! அந்த முயற்சியில் காவல் துறை அதிகாரிகள் வாகன ஓட்டுனர்களிடம் பயன்படுத்திய கெட்ட வார்த்தைகளை என் காதால் கேட்டேன்!!! மக்கள், அந்தச் சாலையில் விரைவாகச் செல்லலாம் என்று கருதி பணம் கொடுத்துச் சென்றாலும், காக்க வைக்க அந்த அமைச்சருக்கு எப்படித் தான் மனம் வந்ததோ? அன்று மதுரை விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், காத்திருந்து, டென்ஷன் ஆனவர்களில் நானும் ஒருவன்!!!!

நல்லவாயன் சம்பாதித்து போனதை நாரவாயன் அழிச்சது போல, நேர்மையான முத்துக்குமார் எனும் சமூக போராளி விட்டு சென்ற இடத்தை ஏதோ ஒரு டம்மி பீஸை வைத்து பிடிக்க போறாங்களாக்கும்...

"களத்தில் கதிர் விளைந்து அறுவடைக்குக் காத்திருக்கிறது. " கதிர் வயல்ல விளையும் என்றுதான் இவ்வளவு நாட்களாக நினைத்திருந்தேன்.

இன்னொரு 100 கோடி அவுட்டா? அப்பரே, எந்த குழப்பமும் கிடையாது, மக்கள் பணம் வாங்குகிறார்கள், ஓட்டுப் போடுகிறார்கள், அவ்வளவே. ஒவ்வொரு இடைத் தேர்தலையும் ஆளுங்கட்சி மானப் பிரச்சினையாகவே எடுத்துக் கொள்கிறது. அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் முகாமிடுவார்கள். மக்கள் பிரச்சினைகளை பார்த்து ஓட்டுப் போடுவது பொதுத் தேர்தல்களில் மட்டுமே. இடைத் தேர்தல்களின் யார் பணம் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டு. எந்தக் கட்சியும் ஆளுங்கட்சியை விட அதிகமாக பணம் கொடுக்க முடியாது. சொந்த கட்சிக்காரனே பணம் கொடுத்தால் தான் ஓட்டுப் போடுவான்.

ஆட்சிக்கு வந்த 10 மாதங்களுக்குள்ளாகவே 3 இடைத்தேர்தல்கள் நடப்பது எதேச்சையாக எனக்குப்படவில்லை. என்னுடைய ஊகம் என்னவென்றால், அதிமுகவில் இப்போது சசிகலா சிண்டிகேட் மூலமாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். முழுவதுமே ஜெ.க்கு விசுவாசமாக இருக்ககூடியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே ஏதாவது ஒரு சாக்கு சொல்லி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை யாராவது ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ.வை போட்டுத்தள்ளிவிட்டு இடைத்தேர்தலை சந்தித்து, தனக்கு சாதகமான ஒரு நபரை தேர்ந்தெடுத்து, விட்டமின் 'ப' உதவியால் ஜெயிக்கவைத்து கட்சியில் தன் அதிகாரம் பறிபோவதை தடுக்க எடுத்திருக்கும் முயற்சியாகவே எனக்குப்படுகிறது. மிச்சமிருக்கிற எம்.எல்.ஏ.க்கள் ஜாக்கிரதை.

பேசாமல் 'இடைத்தேர்தல் துறை'ன்னு ஒன்று ஏற்படுத்தி அதற்கு ஒரு அமைச்சரையும் ஆக்கிவிட்டால், மற்ற அமைச்சர்கள் தமது துறைகளைப்பார்த்துக்கொள்வார்கள். மக்கள் வரிப்பணமும் மிச்சமாகும்.

அதிமுக ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் ஜெவின் கொடுமையை புதுகை மக்கள் நன்றாக நேரடியாக அனுபவித்து, 2016ல் அவரை விரட்டி அடிக்க இலகுவாக இருக்கும்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ''களத்தில் கதிர் விளைந்து அறுவடைக்குக் காத்திருக்கிறது...........கதிர் விளைந்து அறுவடை ஆன பிறகுதான் களத்திற்க்கு வரும்.

ஆறு மாதத்திற்கு ஒரு இடைத்தேர்தல் வந்து விட்டால் போதும்.. அமைச்சர்களுக்கு இந்த வேலயே போதும்..கொடுமை..

அப்போ கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை?

துண்டேந்த வேண்டியதுதான்

இந்த தேர்தல் சங்கரன்கோவில் இடை தேர்தல் போல் ஜெஜெவிர்க்கு வெற்றி தராது. ஜெஜெவின் சசி இணைப்பு, மின்சாரம் விலை ஏற்றம்,... இதோட்டு அளவுக்கு மீறி தாங்கமுடியாத அளவில் அம்மா புராணம் தோல்வியையே தரலாம். இந்த சசி இணைப்பு , ஜெஜெ பற்றி ஒரு குழப்பத்தை ஏர்படுத்தி உள்ளது. இப்படி குழப்பம் வந்தால் முடிவு தோல்வியே.

Displaying 1 - 15 of 15
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 15 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook