Latest News
Published on :30-11--0001 06:00 AM
தண்ணீர்ப் போராளி
தண்ணீர்ப் போராளி முனிவரைப் போன்ற நரைத்த சிண்டு, ஜிப்பா, நைந்துபோன வேட்டி, சால்வை, கழுத்தைத் தழுவும் தாடி, கைகளில் புரட்சி கக்கும் புத்தகங்கள், காலணியைக் கண்டிராத காய்த்த பாதங்கள் - இப்படிப்பட்ட தோற்றத்துடன் ஒருவரை, பெங்களூருவில் நடக்கும் போராட்டங்களில் முதல் வரிசையில் நிச்சயம் காணலாம். அவர் பெயர் அம்ருத் அம்ரோஸ்!  பேசாமல் இரண்டு நிமிடங்கள் இருந்தாலே நம்மில் பலருக்குத் தலை வெடித்துவிடும். ஆனால் இவர் எட்டு ஆண்டுகளாக வாய் திறந்து பேசாமல், மௌனப் போராட்டம் நடத்தி வருகிறார். இயற்கை தரும் பெரும் கொடையான தண்ணீரை, காசுக்கு விற்றுக் கொழுக்கும் பண முதலைகளுக்கு எதிராகத்தான் இந்தப் போராட்டம். ஆமோதிப்பு, கடுங்கோபம், சத்தமில்லா சிரிப்பு, சைகைகள், காகிதத்தில் கிறுக்கல்களாக அம்ருத் தெரிவித்ததை, வார்த்தைகளாகத் தருகிறோம். ''என் மூதாதையர்களின் ஊர் தருமபுரி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூருதான். எனக்குக் கல்யாணம் செய்து​கொள்ளப் பிடிக்கவில்லை. போராட்டம், ஆர்ப்​பாட்டம், பொதுக்கூட்டம் என்றே இப்போது 57 வயதாகி விட்டது.. . .

COMMENT(S): 21

மிக மிக உயர்ந்த நோக்கம்... ஆம், இப்படியே விட்டு கொடுத்தால் இனி பத்தாண்டுகளில் தண்ணீர் பாட்டில் வாங்கவும் நம்மை வரிசையில் நிற்க வைத்து விடுவார்கள் இந்த அயோக்கிய அரசியல்வாதிகள்...

ஹ்ம்ம்ம்

அய்யோ பாவம் ! ஏற்கனவே காசியில் ஒர் சன்னியாசி உண்ணாவிரதம் இருந்து இறந்தார். அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. இப்போது இவர். ஜூ வி யும் தன் பங்கிற்கு ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டது. ஆனால், ஃபாலோ அப் நடவடிக்கை எடுக்குமா?

இவரு இப்படி போராடுறார். ஆனால், நம்ம மத்திய அரசாங்கம் 'ஆழ் துளை கிணறு'களுக்குக் கட்டுப்பாடு என்று புதிய சட்டம கொண்டு வர முயற்சிக்கிறது. அச்சட்டத்தின் உண்மையான நோக்கமும், விளைவும் என்ன என்பது அமுலுக்கு வந்த கொஞ்ச காலம் கழித்தே தெரிய வரும்.

ஒன் மேர் ஆர்மி என்பது இவருக்குத்தான் பொருந்தும். வெல்லட்டும் இவரது போராட்டம்.

One of the useful and good article for awareness

இவர் சொல்லும் அத்தனையும் நியாயம் மிக்கவை..அண்டம் முழுதுக்கும் பொதுவானவை...ஊக்குவிப்போர் யார், யார்? அனைவருமே தர்மத்தைம் ஒதுக்கி விட்டனர்...கலிகாலம்.. வேறென்ன சொல்ல...

உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

இயற்கையின் படைப்பில் காற்றும் நீரும் பொது​வானவை. இவற்றை யாரும் உரிமை கொண்டாட முடியாது. - இதை கொஞ்சம் உங்க தலைவர்கள் கிட்ட சொல்லி காவிரி தண்ணீரை விட்டால் நல்லது.

உங்களை வணங்குகிறோம்...

தன்னலமற்ற மனிதர்... உங்களது போராட்டம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

People like Amruth are true warriors for a worthy cause.

"காவிரி நீரை எடுத்து 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரைக்கும் லேபிளை மாற்றி மாற்றி விற்கிறார்கள். ஆனால் தீவனம், புண்ணாக்கு, தவிடு எல்லாம் போட்டுச் கறக்கிற, உயிர் காக்கும் பாலின் விலை 15 ரூபாய்."

This is not just in India, it is same situation all over the world.
To be fair, there is a water procurement, transport, distribution and other costs. But why it has to cost much more than many food items??? Time for govt to step in to a) allow a company to bottle water only if they invest 25% of its earnings in promoting rain water harvesting, man-made lakes - eventually they should "produce" all the water they bottle b) set a price cap taking into account transportation charges

In the meantime, as many people do, carry water bottle from home as much as possible. If you are going on a trip (in a vehicle), load up a water drum that will last a day or two.

"யாரிடமாவது, 'நான் தமிழன்’ என்று சொன்னாலும் நம்ப மாட்​டார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிடுகிற எனக்குப் பணமும் தேவை இல்லை, விளம்பரமும் தேவை இல்லை. "----------> அதனால் தான் உங்களை திராவிடத் தமிழர் என்று யாரும் ஏற்கவில்லை.

புரியவில்லை... நிலம் பொதுவானதில்லையா? நிலம் விற்கும் போது, நீர் ஏன் விற்க கூடாது? இது தோல்வியில் முடியும்.

வாஸ்தவமான போராட்டம். இந்த அன்னா ஹஜாரேக்கெல்லாம் கிடைக்கிற மீடியா வெளிச்சம், இவரைப் போன்று போராடுவோருக்குக் கிடைப்பதில்லை. இவரின் பால் விலை, தண்ணீர் விலை கோட்பாடு நான் எப்பொழுதுமே கேட்பது "மினரல் வாட்டர் மட்டுமே" குடிக்கும் மக்களிடம். அதுவும் என்.ஆர்.ஐ.னா போச்சு, சாதாரண நீரைக் குடித்தால் உயிரே போய்விடும் என்கிற ரேஞ்ஜில் அளப்பார்கள். 25 வருஷம் குடிச்ச தண்ணி, ஒரு வருஷம் கடல் கடந்து போயிட்டு வந்திட்டா விஷமா தெரியுது. என்ன பண்ணறது? இவரது போராட்டம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும்.

லஞ்ச ஊழல் நிறைந்த மூன்றாம் உலக நாடான நம் நாட்டில் மக்களுக்காக உண்மையிலேயே சிந்திக்கும் எந்த அமைப்பும் இல்லை என்பதே உண்மை.

அருமையான கருத்து. பாட்டில்களில் அடைக்கப் பட்ட தண்ணீரை முற்றிலும் தடை செய்ய வேண்டும். சுத்தமான குடிநீரை மக்களுக்குக் ஒடுப்பது அரசாங்கத்தில் வேலை. ஆனால் டாஸ்மாக் திறக்கும் அரசாங்கம் வேறு என்ன செய்யும். இன்னும் அனைத்து நதிகளையும் தனியாருக்கு கொடுத்து விட்டு தண்ணீர் என்றாலே காசு கொடுத்தால்தான் என்ற நிலைமையை உருவாக்கி விடுங்கள். நீதி மன்றங்களும் சில விஷயங்களில் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வழங்கலாம்.

Well said Amruthji

real hero, vazgha valamudan

really great

Great Amruth!!!!!

Displaying 1 - 21 of 21
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 15 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook