வாலி கவிதாஞ்சலி! ஓவியங்கள்: ம.செ., எஸ்.ஏ.வி.இளையபாரதி

 வாலிபக் கவிஞர் வாலி வான்புகழ் எய்திவிட்டார்.
அந்தக் காவியக் கவிஞருக்கு,
கவிஞர்கள் சிலரின் கவிதாஞ்சலி இங்கே...

 

 

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
“எழுத்தாளனை எதற்காக கொண்டாட வேண்டும்?”
கலகலப்புக்கு மறுபெயர் வாலி!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 24
Profile

Makesh 2 Years ago

வாலி அய்யா எங்க .... ஐயோ தங்க ராசா எங்க... மண் உள்ளே நீ மறைத்தாலும் இங்கே.... என்றும் பொன்னை போல் மதிப்பை பெற்று இருப்பாய்.
கலைச்செல்வி மகேஷ்
ஹோசூர்.

 
Profile

Theetharappan 2 Years ago


கபிலன் கவிதை மிக அருமை..
அதுவும் அந்த கடைசி வரிகள்..

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா...
வைரதிற்க்குப் பிறந்தது கூழாங்கல் ஆகுமா....

 
Profile

saravanan 2 Years ago

வாழிய நீ எம்மான்!
----------------------------

வாழிய நீ எம்மான்!
வாலிபக் கவியே!
வாலியே !
வாழிய நீ எம்மான்!

வயோதிகம் உன்னைக் கவ்வியது
வருத்தத்தால் எங்கள் மனம் வாடியது!

ஸ்ரீரங்கத்துச் சிவப்பே!
காவிக் கலரையும் கறுப்புக் கலரையும்
ஒரே நேரத்தில் காதலித்தவன் நீ!

உன் பேனா மைக்குத்தான்
எத்தனை நிறங்கள்!

காற்று வாங்கக்
கடற்கரைக்குப் போனவன்
கடலுக்குள் விழும்
கண்ணீர்த் துளிகளையும்
கண்டாய்!
அதானால் தானே
"தரைமேல் பிறக்க வைத்தாய் எங்களைத்
தண்ணீரில் தவிக்க வைத்தாய்"
என்றாய் !

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" என்றவனே!
உன் கடைசி மூச்சிருக்கும் வரை
எழுதினாய்! எழுதினாய்! எழுதினாய்!

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே"
தாயின் பெருமையை தங்கத் தமிழால் சொன்னவனே!

தன் அரசவைக் கவிஞன் ஆக்கவே
இறைவன் உன்னை
அழைத்துக் கொண்டானோ?

புதிய வானத்தையும்! புதிய பூமியையும்
கண்டுவிட்டதால்
இதையும் தாண்டி என்ன உள்ளது?
என்பதை அறியத்தான்
அவன் அழைத்ததும்
சென்று விட்டாயோ?

பாடல்கள் தந்த வானம்பாடியே!
பறந்து விட்டாய்!
மீண்டும் பிறந்து வா!

அடுத்த முறையும்
அழகுத் தமிழ்க் கவிஞனாய் பிறந்து வா!

வாழிய நீ எம்மான்!
வாலிபக் கவியே!
வாலியே !
வாழிய நீ எம்மான்!

அன்புடன்,
மு.ஜெயக்குமார்.

 
Profile

2 Years ago

Karpanai entralum
Kadavulai
Kanmuney kondu vanthavar

Karaikaanaa makkal
Kadilnuday
Kanalaai irundhu
Kavithaiyayi valnthavar

Vethaitha vethai mulaidhu
Verutchamai valarnthu
Vinnaiyay thotadhil
Vinthai ellai

Karuthai vadithu
Karuvai amaidhu palarin valkai
Kadalai valamakiya
Vaali - nin pugal vaali


Ashok

 
Profile

அன்பு 2 Years ago

இங்கு கவிதை என்ற பெயரில் பினாத்தியவர்கள் வாலிக்கு அஞ்சலி செலுத்தவில்லை. யாப்பிலக்கணத்தையும் தமிழையும், மரபுகளையும் கொன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 
Profile

Uthrajendran 2 Years ago

பாட்டுக் கோட்டை, நாட்டுக் கோட்டை, மலைக் கோட்டை அருமை!

 
Profile

Vijayalakshmi 2 Years ago

மணியம் செல்வனின் தூரிகை எல்லா கவிதாஞ்சலிகளையும் விட மிக மிக அழகாக ஓவியாஞ்சலி செய்துள்ளது.

 
Profile

GUGAN 2 Years ago

தரையில் நீச்சல் கற்கத்
தவிக்கும் நெஞ்சினர் இருந்தாலும்,
வரையில் கப்பல் ஓட்ட
விரும்பும் மனத்தினர் இருந்தாலும்,
கரையில் மீன்களைப் பிடிக்கக்
கருதும் உளத்தினர் இருந்தாலும்,
உரையைக் கவிதையாய் ஏற்கும்
உளத்துடன் தமிழர் இருக்கலாமோ ?

மடிக்கப் பட்ட வரிகளில்
மோனை , எதுகை மறந்து,
அடைக்கப் பட்ட சொற்களில்,
இலக்கண விதிகளைத் துறந்து
படைக்கப் பட்ட உரைநடைப்
பகுதியை , தமிழில் அறிவு
கொடுக்கப் பட்ட எவரும்
கவிதையாய் ஏற்பது தகுமா?

பசுவைக் காட்டுவீர் என்றிருந்தோம்
பிறிதொரு பிராணியைப் பசுவென்றீர்
பசுவின் மதிப்பைக் குறைக்காதீர்
பைந்தமிழ் இலக்கண விதியுடன்
இசைய விரும்பாப் படைப்ப்புக்கு
இன்னொரு பெயரைக் கொடுக்கலாமே.
வசன கவிதை என்று
வேறு பிராணியை அழைக்கலாமே.

குறிப்பு :
"மாதவிப் பொன் மயிலாள் ", "அவளுக்கும் தமிழென்று பேர்" "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்" போன்ற பாடல்களை அற்புதமான சந்தங்களுடன் எழுதிய வாலிக்கு,,
இங்கு கவிதாஞ்சலியில் கொடுக்கப்பட்டிருக்கும் படைப்புகள் ( ஒரு கவிதை தவிர ) நியாயம் செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில்
எழுதப்பட்டது இது.

 
Profile

usha 2 Years ago

ம‌.செவின் ஓவியமும் சிறந்த கவிதாஞ்சலிதான்....

 
Profile

Tamil 2 Years ago

ஒரு பக்கம் ஜீயரை போற்றி எழுதுவீர்
மறு பக்கம் நாத்தீகரையும் போற்றி எழுதுவீர்....

முக்காலம் உணர்ந்து சித்தாந்தம் எழுதுவீர்..
இக்காலம் அறிந்து முக்காப்புல்லா எழுதுவீர்...

வெற்றிலைகளை மென்றே வெற்றி பாடல்களின் கருவாநீர்
வெற்றிமலைகளை கடந்தும் அடக்கமாய் வாழ்வில் வாழ்ந்தீர்.....

காற்றில் வரும் கீதமே
அம்மாவை அழைத்த ஆருயிரே...

நிறைவாக வாழ்ந்தாய், தமிழுக்கு நிறையவே தந்தீர்
தமிழாக பிறந்தாய், தமிழ்தாயிடம் போய் சேர்ந்தீர்....

வெண்தாடி வேந்தரின் வழியை புகழ்ந்தீர்
உடையவர் ராமானுசரின் காப்பியத்தை தந்தீர்.....

நீவீர் எங்கோ சென்று விடவில்லை...
தமிழிசையின் வடிவில் என்றும் இவ்விடமே நிலைத்தீர்......

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80