சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றம்: பதற்றம் தனியாத ராமேஸ்வரம்...!

 ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று இரவு மூண்ட திடீர் கலவரம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டடுள்ளனர். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும்  அங்கு பதற்றம் தனியவில்லை.

கலவரம் பற்றி தகவல் அறிந்த தென்மண்டல ஐ.ஜி.அபய்குமார் சிங், இரவோடு இரவாக ராமேஸ்வரம் வந்து கலவரம் நடந்த இடங்களை பார்வையிட்டார். டி.ஐ.ஜி. ராம‌சுப்பிரமணி தலைமையில் மதுரை விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்ட எஸ்.பிக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் வந்த சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து அவசரமாக‌ வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த கலவரத்தில் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க துணை செயலாளர் ஜி.முனியசாமிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டதுடன் அங்கிருந்த ரூ.2.75 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதே போல் எதிர் தரப்பில் அ.தி.மு.க மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் கே.கே.அர்ச்சுனனுக்கு சொந்தமான திருமண மகாலில் இருந்த ஜெனரேட்டர் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

''ஆட்டோ டிரைவர்களுக்குள் நடந்த மோதல் கலவரமாக மாறிவிட்டது. இப்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் ராமேஸ்வரம் முழுஇயல்பு நிலைக்கு திரும்பிவிடும்" என்று நம்பிக்கை தருகிறார் சரக டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி.

- இரா.மோகன்
 

Advertisement

உங்கள் ஆதரவுக்கு ஒரு க்ளிக் போதும்!

தமிழகத்தில் கவுரவக்கொலைகள் அதிகரிப்பதற்கு காரணம்...
placeholder
10.176.70.11:80