Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காட்டுக்குள்ளே திருவிழா! - தேர்தல் கவிதை




இயற்கை அழகு கொழிக்கும்
அற்புத வனமொன்றில்
புத்தாட்சிக்கான கோலாகலம் பரபரப்பாய் தொடங்கியது
வயதான சிங்கம் ஒன்று
"என் கடைசி முயற்சி இது -
வாய்ப்பளியுங்கள்" என்றபடியே
தன் குடும்ப சொத்தையெல்லாம்
மஞ்சள் நிற பிடரிக்கு பின் லாவகமாய் மறைத்தது !
பச்சை வண்ண பெண்புலி ஒன்று
"என்னை மீண்டும் ராணியாக்கினால்
வேட்டைக்கு போகாமலே
உங்கள் இல்லம் தேடி இலவச
உணவு வரும்" என்று
செய்த தவறையெல்லாம் மறைக்க
பொய்யாசை மூட்டியது !
நரியின் தலைமையில் யானை, கரடி, ஓநாய், முயல், ஆமை
இணைந்து ஓர் வினோத கூட்டணி அமைந்தது
சிங்கம் புலியின் பெரும்பசிக்கு
பலியானது போதும் - எங்களுக்கு
ஒரு வாய்ப்பளியுங்கள் என்றது !
வனத்தின் வடக்கே மட்டும் செறித்திருக்கும்
குதிரைக் கூட்டம் ஒன்று
தமக்குள்ளே ஒரு குழு அமைத்து
காட்டை ஆள ஆசைப்பட்டது !
"வரையாடுகளே இவ்வனத்தின் மூத்தகுடி
வந்தேறிகளை ஆட்சியிலிருந்து அகற்றுவோம்"
என உணர்ச்சிப் பொங்க பேசியது வரையாடுகள் !
நடக்கின்ற கூத்தையெல்லாம்
வானின் உயரே பார்த்துக் கொண்டே
வட்டமிட்ட சிட்டுக்குருவி மனதில்
என்ன திட்டம் உளதோ ! எவரறிவார் !

 ந.  சங்கர் கணேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ