Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தமிழ் மொழியின் தஞ்சை ஊற்று...ஆனா ரூனா பற்றி நெஞ்சை உருக்கும் புஷ்பவனத்தின் பாடல்' வீடியோ

மிழ்ச் சான்றோர் பேரவை மற்றும் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் என்று தமிழ் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, தமிழ் வளர்த்த கொடையாளர் நா.அருணாசலம் அண்மையில் மறைந்தார். அவரின் தமிழ்மொழிப் பற்றும் தமிழ் வளர்த்த பாங்கும் என்றென்றும் தமிழர்கள் மனதைவிட்டு நீங்காது.

கடந்த மே மாதம் 23ம் தேதி, 'ஆனா ரூனா' என்று தமிழ் ஆர்வலர்களால் அன்போடு அழைக்கப்பட்ட நா.அருணாசலம், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் மரணத்தைத் தழுவினார். எப்போதும் தமிழ் மொழியின் மீதான பற்றை வெளிப்படுத்தி, அருகில் இருப்பவர் எவரையும் தமிழ்ப்பற்றாளராக மாற்றிக் காட்டும் வல்லமை கொண்ட ஆனா ரூனா,மரண நேரத்திலும் தமிழிசை மணக்க இயற்கை அடைந்தார்.

சாருகேசி ராகத்தில், கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய ' தமிழ் மொழியின் வேரில் பாயும் தஞ்சை ஊற்று நீ' என்ற பாடலை, தமிழிசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பெருங்குரலெடுத்துப் பாட...தமிழ் இசை கேட்டபடியே ஆனா ரூனாவின்  உயிர் பிரிந்தது. 

இணையத்தில் வைராலாகியுள்ள அந்தப் பாடல்,  விகடன் வாசகர்களுக்காக  இங்கே....       
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ