Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இப்படியும் தீபாவளி கொண்டாடலாமே....!!!

சிவகாசி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பட்டாசு,அதிலும் தீபாவளி என்றாலே சிவகாசி தான்.நம் நாட்டுக்கு 90% பட்டாசினை வழங்குவது சிவகாசியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் தான். அதற்கான மனித ஆற்றல் அனைத்தும் சிவகாசியைச் சுற்றியுள்ள கிராம மக்களே அதிலும் குறிப்பாக பெண்களே! இப்படியான கிராம கட்டமைப்பை உடைய சிவகாசியில், இளைஞர்கள் சற்று அதிகமாகவே பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் என்பது அனைவருடைய பொது புத்தியிலும் உதிப்பதே! ஆனால் இதற்கு மாறாக கொண்டாட திட்டமிடுகிறது ஓர் இளைஞர் கூட்டம். சிவகாசியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள நடுவப்பட்டி எனும் ஊரின் கிராம இளைஞர்களே. இவர்கள் "இயற்கை புரட்சி இயக்கம்" எனும் பெயரில் நூறுக்கும் மேற்பட்டவர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.

இந்த இயக்கத்தினை தோற்றுவித்தவர்கள் நடுவப்பட்டியை சொந்த ஊராக கொண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள மேலஈரால் எனும் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் வீ.ராமராஜ்(26) என்பவரும், சென்னையில் தகவல் தொழிநுட்ப பிரிவில் பணிபுரியும் வீ.சீனிவாசன்(26) என்ற இருவரும் ஆவர். இவர்கள் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமால் கிராமத்தில் ஐம்பது மர கன்றுகளை நட திட்டமிட்டுள்ளனர். இவர்களின் தீபாவளி கொண்டாட்டமே மரம் நடுவது தானாம்.மேலும் அவர்கள் இயக்க நண்பர் பட்டாசு வெடிக்க மாட்டார்களாம். இவர்களின் இந்த கொள்கையைப் பற்றி வீ.ராமராஜ் அவர்களிடம் கேட்டோம்,அவர் கூறியதாவது:- தம்பி, நான் வார்த்தின் சனி,ஞாயிறு விடுமுறை நாட்களில் இங்கு வருவேன்.இரு நாட்களும் முழு நேர வேலையே மரம் நடுவது மட்டுமே. எங்களது இயக்கம் 2016 ஆகஸ்ட் 15 அன்று ஆரம்பித்தோம். இந்த மூன்று மாதங்களில் 500 மரக்கன்றுகளை ஊன்றியுள்ளோம்.அதோடு நிற்காமல் அதற்கு சரியான முறையில் வேலி அமைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாடகை வண்டி மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறோம். முதலில் பத்து மரம் நட்டினோம் எவனும் திரும்பி பார்க்கவில்லை. அதனால் மனம் தளராது விடுமுறை நாட்களில் காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை உழைத்தோம். மேலும் பணியைத் தொடர்ந்தோம் அதன் விளைவு இன்று ஆதரவு பெறுகிறது.இந்த மரம் நடும் பணியை சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் கருத்தரங்குகள் நடத்துவோம். இன்று வரை முப்பது கருத்தரங்குகள் நடத்தியுள்ளோம். எங்கள் பகுதியில் உள்ள பாலீத்தின் நிறைந்த குப்பை மேட்டினை துடைத்து வழித்து இன்று மரங்கள் நிறைந்த பூங்காவாக மாற்றியுள்ளோம். எங்களின் முக்கிய நோக்கம் பத்தாயிரம் மரக்கன்றுகளை வளர்ப்பது அல்ல, ஆயிரம் நபரிடம் மரம் நடும் ஆசையை விதைப்பதே..! என்று தன் இயற்கை மீதான காதலை வெளிப்படுத்தி முடிக்கிறார். இயற்கை மீதான இவர்களின் நேசம், நாமும் கைகோர்த்து பயணம் செய்வோம் இழந்த பூமியை மீட்க...!!

 

 

 

சி.சிங்கராஜ்

(மாணவ பத்திரிக்கையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close