Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த 10 விஷயம் இருந்தாதான், அது ஆர்கானிக்! #OrganicFoods

 

'ஆர்கானிக்' இன்றைய வணிக உலகின் மந்திரச்சொல். ஆர்கானிக் என்று சொல்லி விற்கப்படும் பொருளுக்கு இன்றைய விலை மற்றவற்றோடு ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம். ஆனாலும் விலை எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை என்று மக்களும் ஆர்கானிக் பொருட்களை அதிகம் வாங்குவதை பெருமையாக நினைக்கின்றனர். ஆர்கானிக் என்ற சொல் மட்டுமே தெரிந்தவர்களுக்கு ஆர்கானிக் பொருட்கள் எப்படி இருக்கும் என்று பெரும்பாலும் தெரிவதில்லை. இதனால் வியாபாரிகளும் தங்கள் தொழில் 'உத்தி'யை பயன்படுத்தி மக்களை எளிதில் ஏமாற்றுகின்றனர். ஆனால் ஆர்கானிக் பொருட்களை வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என சில இருக்கின்றன. அதில் இந்த 10 விஷயங்கள் மிகவும் முக்கியம்.

மின்னுவதெல்லாம் ஆர்கானிக் அல்ல:

      காய்கறிகள் கண்களைக் கவரும் வண்ணம் பளபளப்பாக இருந்தால், அது ஆர்கானிக் அல்ல. இயற்கை பொருட்களின் தோல் மென்மையாக சற்று சுருங்கி இருக்கும். இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகள் ஒரே வடிவத்திலும், ஒரே நிறத்திலும் இருக்காது. தக்காளி ஒருவாரம் வரை கெடாமல், தோல் மட்டும் சுருங்கினால் அது ஆர்கானிக்.

பூச்சிகள் இருக்கத்தான் செய்யும்:

 நாம் வாங்கும் ஆர்கானிக் காய்கறிகளில் 20% முதல் 25%வரை வண்டுகள், பூச்சிகள் இருக்கத்தான் செய்யும். வண்டுகளே ஒதுக்கிய பழங்களையும், காய்கறிகளையும் நாம் வாங்குவது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. வண்டுகள் தாக்கிய பகுதிகளை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு காய்கறிகளை பயன்படுத்தலாம். 

பளிச்சிடும் வெள்ளை? உஷார்!

 

அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்களில் வண்டுகள் இருந்தாலோ அல்லது பழுப்பு நிறமாக இருந்தாலோ அந்த பொருட்களை தாராளமாக வாங்கலாம். அதை சுத்தப்படுத்தி நம் வீட்டில் சேமித்து பயன்படுத்தலாம். சிறுதானியங்கள் 'பளீர்' என வெள்ளையாக இருந்தால் அதில் பச்சரிசி கலக்கப்பட்டிருக்கலாம். சிறிது பழுப்பு நிறத்தில் இருக்கும் தானியங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. ஆர்கானிக் அரிசிகளில் தயாரிக்கப்படும் உணவு மறுநாள் வைத்தாலும் கெட்டுப்போன மணம் வராது.

இனிப்பு மட்டுமல்ல..துவர்க்கவும் செய்யும்!

 

        ஆர்கானிக் தேனை சுவைக்கும்போது சிறிது துவர்ப்புச்சுவையும் இருக்கும். தற்போது கடைகளில் சர்க்கரை, வெல்லப்பாகை சேர்த்து வேகவைத்த தேன்களே அதிகமாக கிடைக்கிறது. 

காலத்திற்கு ஏற்ப உண்ண வேண்டும்:

முக்கியமாக அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும், காய்கறிகளையும் பயன்படுத்துவதே ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது. ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு என பிரத்யேக மணம் இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும். 

விலை அதிகம்தான்..ஆனால்..

செக்கில் ஆட்டிய எண்ணையாக இருந்தால் சற்று விலை அதிகமாக இருக்கும். எள்ளிலிருந்து நல்லெண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆனால் இங்கு விற்கப்படும் நல்லெண்ணெய், எள்ளை விட விலை குறைவு. செக்கில் ஆட்டிய எண்ணையானது நல்ல மணமாகவும், உணவுக்கு சுவையூட்டக் கூடியதாகவும் இருக்கும். 

கீரைகளில் இதைக் கவனித்தீர்களா?

கீரைகள் பார்ப்பதற்கு பச்சை நிறமாகவும், செழிப்பாகவும் இருந்தால், அதில் மருந்து வாசனை இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டும். கீரைகள் பார்ப்பதற்கு 'பளீர்' என பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் போதாது. பச்சை மணமும் அதில் இருக்க வேண்டும்.

அளவு மட்டுமே அளவுகோல் அல்ல!

 பொதுவாக அளவினைப் பொறுத்து மட்டுமே ஆர்கானிக் காய்கறி என  நிர்ணயித்து விடக்கூடாது. வீரியரக காய்கறிகள் பார்ப்பதற்கு அளவில் பெரியதாக இருக்கும். பயிர்களுக்கும், கனிகளுக்கும் கொடுக்கப்படும் ரசாயன உரங்களை பொறுத்தே ஆர்கானிக் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. 

நாட்டு சர்க்கரைன்னா இப்படி இருக்கணும்!

ஆர்கானிக்கில் பொதுவாக கருப்பட்டி கருப்பாக இருக்கும், நாட்டுச்சர்க்கரை சுவைத்தால் நாக்கு எரியக் கூடாது. 

எங்கிருந்து வருகிறது என்பது முக்கியம்!

நீங்கள் ஆர்கானிக் கடைகளுக்கு சென்று காய்கறிகள் வாங்குவதாக இருந்தால் எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்ற விபரங்களை விசாரிக்கலாம். விபரங்களை சொல்லாத கடைக்காரர்களிடம் வாங்குவதை காய்கறிகளை தவிர்க்கலாம். பெரிய ஆர்கானிக் கடைகளில் காய்களை வாங்குவதை விட சிறிய வியாபாரிகளிடம் விசாரித்து வாங்குவதே சரியானது. 

முடிந்தவரையில் ஆர்கானிக் காய்கறிகளை நேரடியாக விவசாயிகளிடமோ அல்லது வீட்டில் மாடித்தோட்டம் அமைத்தோ உற்பத்தி செய்துகொள்ளலாம். இதனால் நம் செலவு குறைவதோடு, ஆரோக்கியமும் அதிகரிக்கும்!

- துரை.நாகராஜன்.          

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ