Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்களைப் பாதிக்கும் ஷேல் கேஸ் ஆய்வு பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பின்னணி

ஷேல் கேஸ்

மீத்தேன் எடுக்கும் திட்டம் மட்டுமல்ல. ஷேல் கேஸ் ஆய்வு பணிகளும் காவிரி டெல்டா விவசாயிகளை அச்சுறுத்தி வந்தது. நேற்று டில்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘’தமிழ் நாட்டில் காவிரி படுகை மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கான  இடங்களை ஒதுக்கீடு செய்வதில் சில பமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இத்திட்டம் ரத்து செய்யப்படுகிறது  என அறிவித்தார். 

மேலும்  ஷேல் கேஸ் திட்டம் குறித்து விளக்கமளித்த அவர் ‘’தமிழ்நாடு உட்பட இந்தியாவின் சில பகுதிகளில் ஷேல் கேஸ் எடுப்பதற்கான ஆய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்த வைக்கப்படுகிறது” எனவும் தெரிவித்தார்.  இந்த இரண்டு அறிவிப்புகளுமே தமிழ்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் நிரந்தமாக கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் தான் காவிரி படுகை மக்கள் மனநிம்மதி அடைவார்கள். 

இந்தியாவில் ஷேல் கேஸ் எடுப்பதற்கும் அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ளவும் 2013-ம் ஆண்டு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் கொள்கை முடிவு எடுத்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 9 இடங்கள் உள்பட அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், ஆந்திரபிரேதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை  உள்ளடக்கிய மொத்தம் 55 இடங்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஒ.என்..ஜி.சி. 50 இடங்களிலும் ஆயில் இந்தியா நிறுவனம் 5 இடங்களிலும் இப்பணிகளை மேற்கொள்ள மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. ஆய்வு பணிகளை மேற்கொள்ள  தடையில்லா சான்று வழங்க கோரி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் 2015-ம் ஆண்டு ஒ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பத்திருந்தது. 

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக, நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகில்  உள்ள திருவேள்விகுடியில் ஷேல் கேஸ் ஆய்வு பணிகள் மேற்கொள்ள 32 கோடி  ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏற்கனவே மீத்தேன் எமன் பீதியில் இருந்த காவிரி டெல்டா மக்களை இது மேலும் அச்சத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் உள்ளிட்டவைகள் ஷேல் கேஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை  மேற்கொண்டு வந்தன. நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்கும் திட்டம் போலவே ஷேல் கேஸ் எடுக்கும் திட்டமும் மிகவும் ஆபத்தானதுதான் என்ற விழிப்புணர்வும் எச்சரிக்கையும்  பொது மக்களிடம் வேகமாக பரவின. 

நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்கும் திட்டமும் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டமும்  கிட்டத்தட்ட ஒண்றுதான்.
ஷேல் கேஸ் என்பதும் மீத்தேன் தான்.  பூமிக்கடியில் இருந்து எடுக்கப்படும் அனைத்து  வாயுக்களிலுமே மீத்தேன் தான் முதன்மையானதாகவும் பெரும்பான்மையானதாகவும் இருக்கும். 8 முதல் 10 ஆயிரம் அடிக்கும் அதிகமான ஆழத்தில்  உள்ள வண்டல் மண் பாறைகளில் பிணைந்துள்ள இயற்கை எரிவாயுவை தான் ஷேல் கேஸ் என்கிறோம். 

பூமிக்கடியில் உள்ள நிலக்கரி படிமங்களின் இடுக்குகளில் இருந்து எடுக்கபடும் மீத்தேன் நிலக்கரி படுகை மீத்தேன் என அழைக்கப்படுகிறது. இதற்கு ஹைட்ராலிக் பிராக்சரிங்  (நீரியல் விரிசல்)   என்ற மிகவும் கடினமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும். டஇது மிகவும் ஆபத்தான தொழில்நுட்பம். பல ஆயிரம் அடி ஆழத்துக்கு  உலோக குழாய்கள் அமைக்கப்படும். பல லட்சம் டன் எடை  கொண்ட ரசாயன கரைசலை  அதிக அழுத்தத்தில் பீய்ச்சி அடித்து, நிலக்கரி பாறைகளை உடைத்து, ரசாயன கரைசல் மூலமாகவே மீத்தேன் வெளியில் கொண்டு  வரப்பட்டு பிரித்தெடுக்கப்படும். இதே ஹைட்ராலிக் பிராக்சரிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தான் வண்டல் மண் பாறைகளை தகர்த்து ஷேல் கேஸ் வெளியில் எடுக்கப்படும். ஒரு கிணற்றில் ஒரு முறை ஹைட்ராலிக் பிராக்சரிங் செய்வதற்கான கரைசல் தயாரிக்க, 5 கோடியே 66 லட்சத்து 33 ஆயிரத்து 693 லிட்டர் தண்ணீரும்  144 டன் மண
லும், 80 முதல் 300 டன் ரசாயன பொருட்களும் தேவைப்படுவதாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை சொல்கிறது.

இது போல் ஆண்டுக்கு 3 முதல் 4 முறை கரைசல் தயார் செய்து ஹைட்ராலிக் பிராக்சரிங் செய்து வண்டல் மண் பாறைகளை தகர்த்து அதில் பிணைந்துள்ள ஷேல் கேஸ்ஸை வெளியில் எடுப்பார்கள். இக்கரைசலில் மிகவும் கொடிய நோய்களை உருவாக்கக்கூடிய டொலுவின், பென்சின், ஈயம், ஈதைல், ஹைட்ரோ குளோரொக் அமிலம், பார்மால்டிஹைட், யுரேனியம், ரேடியம், மெத்தனால் என 600-க்கும் மேற்பட்ட  ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உள்ளே செலுத்தப்பட்டு கழிவாக வெளியில்  வரப்படக்கூடிய இந்த ரசாயனங்கள் இங்கேயே  கொட்டி வைக்கப்படும். இவற்றில் பெரும்பாலான ரசாயனங்கள் புற்று நோயை உருவாக்கக்கூடியது. இக்கழிவுகள் கொட்டி வைக்கப்படக்கூடிய இடங்கள் மட்டுமல்லாமல், இவைகளை சுற்றி பல கிலோ மீட்டருக்கு அப்பால் வசிக்கும் மக்களையும் பல கொடிய நோய்கள் தாக்கும். புற்றுநோய் மட்டுமல்லாமல் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய நோய்கள், நுரையீரல் பாதிப்புகள், மலட்டுத்தன்மை உள்ளிட்ட இன்னும் பல்வேறுவிதமான கொடிய நோய்கள் உருவாகும். இந்த வேதிப்பொருட்களில் பெரும்பாலானவை மிக வேகமாக காற்றில் கலக்கக்கூடியவை. மழைக்காலங்களில் தண்ணீர் மூலமாகவும் இந்த ரசாயனங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  தீ விபத்துகளும் ஏற்படவும் வாய்ப்புண்டு. ரசாயன கழிவுகளோடு மணலும் சேர்ந்து வெளியில் கொண்டு வரப்படும். இதில் நுண்ணிய துகள்களாக உள்ள சிலிக்கா காற்றின் மூலமாக மனிதர்களின் நுரையீரலில் படிந்து, சிலிக்கோஸ்சிஸ் [silicosis} என்ற கொடிய உருவாகும். நிமோனியா, ஆஸ்துமா  போன்ற நுரையீரல் தொடர்பான நோய்களும் உருவாகும். 

ஹைட்ராலிக் பிராக்சரிங் முறையினால் பூமியின் சமநிலை பாதிக்கப்படும். வண்டல் மண் பாறை அல்லது நிலக்கரி
பாறைகளை தகர்க்க பல லட்சம் டன் எடை கொண்ட ரசாயன கரைசல் மிக அதிக அழுத்தத்தில் பீய்ச்சி அடிக்கப்படுவதால் நில அடுக்குகளில் அதிர்வுகள் உண்டாகும்.  நிலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நில அடுக்குகள் பிடிமானத்தை இழக்கும். இதனால் பூகம்பங்கள் உண்டாகக்கூடிய ஆபத்துகள் அதிகம். பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் வெளியில் எடுக்கப்பட்ட பிறகு அங்குள்ள வெற்றிடங்களில் இருந்து தானாகவே மீத்தேன் உருவாகி பூமியின் மேற்பரப்பில் ஊடுருவி தீ விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  நிலத்தடி நீரில் ரசாயன கழிவுகளும் மீத்தேன் கலக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். 

அமெரிக்காவில் ஜைட்ராலிக் பிராக்சரிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீத்தேன் எடுக்கப்படும் பகுதிகளில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டதால், அங்குள்ள மக்கள் இதற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் தியோ கல்போர்ன் என்பவரின் தலைமையிலான ஆய்வுக்குழு அதிர்ச்சிகரமான தக
வல்களை வெளியிட்டது. ஹைட்ராலிக் பிராக்சரிங் கழிவு நீரில் உள்ள வேதிப்பொருட்களில் 37 சதவீதம் ஆவியாக
கூடியவை. இவற்றில் 81 சதவீத வேதிப்பொருட்கள் மூளை மற்றும் நரம்புகளை தாக்ககூடியவை 71 சதவீதம் வேதிப்பொருட்கள் இதயத்தையும் 68 சதவீதம் வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தையும் தாக்கக்கூடியவை என்ற தகவல்களை வெளியிட்டது அந்த குழுவின் ஆய்வறிக்கை. இக்கரைசலில் 12 வகையான உடல் பாதிப்புகளை உருவாக்கக்கூடிய 350 வேதிப்பொருட்கள் கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வேதிப்பொருட்கள் மூளை, நரம்பு, சிறுநீரகம், நுரையீரல், நாளமில்லா சுரப்பிகள், கண், தோல், இதய தமனி ரத்தம் உள்ளிட்டவைகளில் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும். புற்றுநோய், மரபணு மாற்றுக்கோளாறுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளை இந்த வேதிப்பொருட்கள் ஏற்படுத்தும் என்பதை ஆதாரங்களோடு வெளியிட்டது அந்த ஆய்வுக்குழு. பிரான்ஸ், சுவீஸ், ருமேனியா, ஜெர்மனி, செக் குடியரசு   உள்ளிட்ட   நாடுகளில் ஹைட்ராலிக் பிராக்சரிங் தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டுள்ளது.  

 எனவே  ஷேல் கேஸ் என சொல்லப்படும் வண்டல் மண் பாறை மீத்தேன் எடுக்க ஹைட்ராலிக் பிராக்சரிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் கொடிய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு விதமன பாதிப்புகள் உருவாகும். இதனாலேயே இத்திட்டத்திற்கான ஆய்வு பணிகளை காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்கள் அஞ்சுகிறார்கள். இதுமட்டுமல்லாமல்   தமிழ்நாட்டில் உள்ள காவிரி படுகை கிராமங்கள் ஏற்கனவே தண்ணிர் பற்றாக்குறையினாலும், மணல் கொள்ளையினாலும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. ஷேல் கேஸ் திட்டத்திற்காக இவை முழுமையாக  அபகரிக்கப்பட்டால், இப்பகுதி மனிதர்கள் வசிக்கவே முடியாத பகுதியாகவே மாறிப்போகும். ஷேல் கேஸ் எடுப்பதற்கான ஆய்வுப்பணிகள் தற்காலிகமாகதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை தர்மேந்திரா பிரதான்  வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவித்துள்ளார். ஷேல் கேஸ் என்ற புனைப்பெயரில் உள்ள மீத்தேன்  எமன் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் வரக்கூடும். ஆனாலும் கூட இங்குள்ள மக்களை தற்போது தற்காலிகமாக மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடிய இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியவையே.     

 - கு. ராமகிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ