Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மடிப்பாக்கத்துக்குள் ஏர்பிடித்து விவசாயம். நம்ப முடிகிறதா? [வீடியோ]

  விவசாயம்

விவசாயம் என்றாலே கிராமத்தில்தான் நடக்கும் என்ற நினைப்பு நம்மில் பெரும்பாலோனோருக்கு உண்டு. ஆனால், நகரத்துக்குள்ளும் விவசாயம் செய்யலாம் என அந்த எண்ணத்தை உடைத்திருக்கிறார், மடிப்பாக்கத்தை சேர்ந்த விவசாயி எல்லப்பன். தலைநகர் சென்னையின் முக்கியத்துவம் வாய்ந்த இடம் வேளச்சேரி. வேளச்சேரி அருகிலுள்ள மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது எல்லப்பனின் தோட்டம். தோட்டத்தில் ஏர்பூட்டி நிலத்தை உழுதுகொண்டிருந்த எல்லப்பனை சந்தித்து பேசினோம். "எனக்கு வயசு 70 ஆகுது. எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரிஞ்சது எல்லாமே விவசாயம் மட்டுந்தான்.

என்னோட பூர்வீகமே இங்கதான் இருக்கு. நானும் என்னோட மனைவியும்தான் விவசாயத்தை பார்த்துக்கிட்டு வர்றோம். விவசாயத்துக்கு ஆள் கிடைக்குறது கஷ்டமா இருக்கு. அப்படியே ஆட்கள் வேலைக்கு வந்தாலும் சாயங்காலம் ஆச்சுன்னா சம்பளத்தையும் வாங்கிட்டு 'குவாட்டர்' வாங்கி கொடுங்கனு கேட்குறாங்க. இப்பொல்லாம் யாருமே விவசாயத்துக்கு வரவிரும்புறது இல்லை. இந்த நிலம் என்னோடது இல்ல, என்னோட சொந்தக்காரரோட நிலம். நீ இருக்குற வரைக்கும் விவசாயத்தை பாத்துக்கனு சொல்லி கொடுத்திருக்காரு. எப்பவுமே நான் வயல்லதான் இருப்பேன். எப்பவுமே கீரை காய்கறிகளைத்தான் அதிகமா பயிரிடுறேன். அதை வாங்குறதுக்குன்னே தனியா ஆட்கள் வர்றாங்க. எனக்கு இதுல போதுமான வருமானம் கிடைக்குது. இப்போ நிலம் விளைச்சல்ல இருக்கணும். போதுமான மழை இல்லாத காரணத்தால லேட்டா உழவை ஆரம்பிச்சிருக்கேன். எனக்கு மொத்தம் 5 பசங்க. எல்லோரும் இப்போ நல்ல நிலையில இருக்காங்க, என்னையும் நல்லா பாத்துக்கிறாங்க. என்னை பொறுத்தவரைக்கும் விவசாயம்தான் தம்பி முக்கியம்" என்றபடி மறுபடியும் ஏர்பிடிக்க ஆரம்பித்தார்.

எல்லப்பன் விவசாயம் பற்றி பகிர்ந்துகொண்ட வீடியோவை கீழே காணலாம்.

 

 

- துரை.நாகராஜன்வீடியோ: சதீஷ்குமார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ