Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீட்டிலே வளர்க்கலாம் தக்காளி... ஆர் யூ ரெடி..?!

தக்காளி தோட்டம்

”உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?” வரலாற்று சிறப்புமிக்க இந்த வசனத்தை நாம் அனைவருமே ஒருமுறையாவது பயன்படுத்தி இருப்போம். மிகப்பெரிய அரசியலைப் பேசும் இந்த வசனம் இன்று மக்களுக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டது.

தக்காளியை சாதாராணமாக எடை போட்ட நாம், இன்று தக்காளி சட்னி அரைக்க பல முறை யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். தக்காளி இல்லை என்றாலும் பரவாயில்லை என்று சமைக்கவோ, சாப்பிடவோ பழகிக்கொள்கிறோம். இன்று தக்காளி என்பது உணவுப் பயன்பாடு மட்டுமில்லாமல், மருத்துவம் சார்ந்தும், பெண்களின் அழகு சார்ந்தும் முக்கியப் பங்கு வகிக்கிறது இப்படிபட்ட தக்காளியின் விலை இன்று கிலோ 100 ரூபாய். மார்கெட்டில் தக்காளி திருடப்படும் என்ற பயத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது கொடுமையின் உச்சம். 

தக்காளி பற்றாக்குறையைப் போக்க, தக்காளி சாப்பிடாமல் இருப்பதா தீர்வு? நிச்சயம் இல்லை. தக்காளி உற்பத்தியில் உள்ள சில அடிப்படை பிரச்னைகளை ஆராய்வது அவசியமான ஒன்று.

முதலில், அழுகும் உணவுப் பொருள்களைப் பாதுகாத்து, தேக்கி வைப்பதற்கான போதிய வசதிகள் நம்மிடம் இல்லை. இயற்கையான காரணங்களால் தக்காளி பற்றாக்குறை ஏற்படுவது இருக்கட்டும். நடைமுறையில் தக்காளி போன்ற  உணவுப் பொருள்களின் விளைச்சல் சார்ந்தும், மரபணு மாற்றுப் பயிர்களின் உற்பத்தி சார்ந்தும், வணிகம் சார்ந்தும் நாம் பின்பற்றும் கொள்கைகள் சார்ந்தும் பல பிரச்னைகள் ஏற்படுவதை நாம் உணர வேண்டும்.

உணவுப் பொருள்களில் இப்படியான ஆரோக்கியம் மற்றும் பொருளாதார பிரச்னைகளுக்குத் தீர்வாக வந்ததே வீட்டுத்தோட்ட அமைப்பு முறைகள். வீட்டின் வெளிப்புறத்திலும் உள்புறத்திலும் நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை நாமே உற்பத்தி செய்து, அதைக் கொண்டு தன்னிறைவு அடைவது என்பது இன்றைய நவீன வாழ்க்கைக்குத் தகுந்த யோசனை.

தக்காளியை நம் வீட்டு தோட்டத்திலும், மொட்டை மாடியிலும், பால்கனியிலும் சுலபமான மூன்று நுட்பங்களைப் பயன்படுத்தி விளைவிக்கலாம்.

 

முறை 1 : தண்ணீர் டு மண் தக்காளி செடி

செடி

மேலும் படங்களுக்கு


தக்காளிச் செடி வளர்வதற்கு வேர் அவசியம். உங்களுக்கு வேருடன் செடி கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். தக்காளிச் செடியில் இருந்து பக்கத்தண்டை மட்டுமாவது உடைத்துக் கொண்டு வந்துவிடுங்கள். பிறகு வாட்டர் பாட்டிலில் தண்ணீரை நிரப்பி அதில் தக்காளிச் செடியில் பக்கத்தண்டை வைத்துவிடுங்கள். சூரிய வெளிச்சம் நேரடியாகப் படக்கூடாது. அதே சமயம் காற்றோட்டமான இடத்தில் 7 முதல் 10 நாள்கள் வைத்திருங்கள். வேர் முளைத்து வரும். பிறகு அதை உடனே மண் சட்டியில் விதையுங்கள். தண்ணீரில் உற்பத்தியான வேர் மெள்ள மண்ணிற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். முறையாக பராமரித்து வந்தால் வீட்டிலேயே ருசியான தக்காளியை சுலபமாக  உற்பத்தி செய்துவிடலாம். 

 

முறை 2 : ஸ்லைஸ் தக்காளி செடி

செடி

மேலும் படங்களுக்கு


உணவிற்கு ஏற்ற தக்காளியில் அதிக அளவிலான விதைகள் காணப்படும். அந்தத் தக்காளியை 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள், அதைச் சரியான இடைவெளியில் மண்ணில் விதையுங்கள். விதைக்கும் பொழுது மண்ணைக் கொண்டு மிக ஆழமாக மூடிவிடக்கூடாது. மிதமான ஈரப்பதம் இருப்பதே போதுமானது. 7 முதல் 14 நாள்களில் தக்காளிச் செடி முளைவிடும். பிறகு என்ன? பழத்தைப் பறித்து குழம்பில் போட வேண்டியதுதான்.

 

முறை 3 : வாளி தக்காளி

செடி

மேலும் படங்களுக்கு


வாளியின் அடியில் துளையிட்டு, வாளியின் வெளிப்புறத்தில் இருந்து துளை வழியாக தக்காளி செடியின் வேரினை உள்ளே நுழைக்க வேண்டும். பின் வாளியை மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும். தலைகீழாகத் தொங்கும் தக்காளிச் செடியினை உங்கள் வீட்டின் மொட்டை மாடி நிழலில் அல்லது பால்கனி நிழலில் தொங்க விட வேண்டும். ஒவ்வொரு நாளும் சுமார் 6 மணிநேரம் சூரிய ஒளி செடியின் மீது விழவேண்டும். நிலையான ஈரப்பதத்தைக் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் உங்கள் வீட்டில் சுவையான தக்காளி பழுத்து தொங்கும்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close